Sunday 26 July 2009

வலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி

வலைப்பூவின் நோக்கம் எனது எண்ணத்தைச் சேகரிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்திய வேளையில், பலரின் பார்வைக்கு நமது சிந்தனைகள் கொண்டு செல்லும் கருவியாக இந்த வலைப்பூ அமைகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் இந்த வலைப்பூவினை அனைவரின் பார்வைக்கும் கொண்டு செல்வதை வலைப்பூ திரட்டிகள் மிகவும் எளிதாக்கி விடுகின்றன.

தமிழ்மணம் மட்டுமே எனக்கு அறியப்பட்டத் திரட்டியாக இருந்தது. சிறிதுநாளில் இதுபோன்ற சேவையை பல வலைப்பூ திரட்டிகள் செயல்படுத்தி வருகின்றன என்பதையும் தமிழ்மணம், சங்கமம், திரட்டி போன்றவைகள் தானியங்கிகளாகச் செயல்படுவதை அறிய முடிந்தது. ஆனால் தமிழிஸ், அதென்ன தமிழிஸ் என யோசித்தபோது, அட இங்கிலீஸ் என ஞாபகம் வந்தது, நாமோ அல்லது மற்றவரோ இணைக்க வேண்டும் என பல நாட்கள் பின்னரே அறிந்தேன்.

பல திரட்டிகளில் சென்று இணைக்கும் அளவுக்கு நேரம்தனை செலவிட முடியாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. இவ்வாறிருக்க தமிழிஸ்லிருந்து திடீரென 10க்கும் மேற்பட்ட வாக்கு பெற்ற ஒரு எழுத்துப் பற்றி எனக்கு மின்னஞ்சல் வர அட என ஆச்சரியம் அளித்தது. எழுத்தை நேசிக்கும் வாசகர்கள் கண்டு வியந்து போனேன்.

வினவு, தமிழ் ஓவியா போன்ற எழுத்தாளர்களின் பதிவுகள் தமிழ்மண பரிந்துரையில் அதிக ஓட்டுகள் பெறுவது கண்டு வியந்ததுண்டு. நன்றாக எழுதினால் அன்றி எவரும் வாக்கு அளிக்கப் போவதில்லை. இதில் குளறுபடி, கூட்டுக்குழப்பம் என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. எப்படியோ வாக்குகளும் பரிந்துரைகளும் விழ அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை. அந்த நிலையை அவர்கள் நிச்சயம் கஷ்டப்பட்டே அடைந்திருக்க முடியும். நண்பர்கள் சேர்ப்பது என்பது எளிதாக இருக்கலாம், ஆனால் அதை நீட்டித்துக்கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை.

எனது பதிவுகள் தமிழிஸ் பெற்ற வாக்குகளைப் பார்த்து ஒரு பதிவு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நான் முடிவுக்கு வந்துவிடலாம் என்றே இருந்தாலும் மேலும் எப்படியெல்லாம் எழுத வேண்டும் எனும் ஒரு உத்வேகத்தை அவை தராமல் இல்லை.

தமிழ்மண வாசகர்கள், தமிழிஸ் வாசகர்கள், திரட்டி வாசகர்கள், சங்கமம், தமிழ்10 என வாசகர்களை அடையாளம் பிரிக்கலாம் என்றாலும் நான் அனைத்துக்கும் பொதுவான எழுத்தாளானகவே பரிமாணம் செய்கிறேன்.

அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போராட முற்படும்போது அங்கே சோர்வு என்பது இருக்கக் கூடாது, நம்மை எவரும் கவனிக்கவில்லை என்கிற மன ஆதங்கமும் அவசியம் இல்லாதது. ஒரு எழுத்து நிச்சயம் நன்றாக இருந்தால் பிறரால் நிச்சயம் வாசிக்கப்படும், நேசிக்கப்படும் என்கிற உண்மையை மட்டும் அறிந்து கொண்டேன்.

எனது எழுத்துக்குப் புதிய வழியைக் காட்டிக்கொண்டிருக்கும் வலைப்பூ திரட்டிகளுக்கும், வாசகர்களுக்கும், ஆர்வக்கோளாறினால் தலைகாட்டிச் செல்லும் வாசகர்களுக்கும், என்னை வளர்த்துவிட்ட, இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கும் முத்தமிழ்மன்றத்துக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை.

அனைவருக்கும் மீண்டும் நன்றி.

5 comments:

கோவி.கண்ணன் said...

//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை. //

எழுத்துகள் அடுத்தவர்களுக்காக மட்டுமல்ல, பிரிதொருநாள் எடுத்துப் படித்தால் நாம் இப்படி, இவ்வளவெல்லாம் எழுதி இருக்கிறோமா என்று வியப்படைய வைக்கும்.

Radhakrishnan said...

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் கோவியாரே. என்றோ எழுதிய எழுத்துதனை இன்றுப் படித்துப் பார்க்கையில் வியப்பும், நகைப்பும், திகைப்பும் ஏற்படச் செய்தன என்பது உண்மைதான். பல அழகிய படைப்புகளைப் படைத்திருக்கும் தங்களின் உழைப்பு என்னைப் போன்றவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. மிக்க நன்றி.

Anonymous said...

//
அங்கீகாரம் கிடைக்கச் செய்திட வேண்டும் எனும் போராட முற்படும்போது அங்கே சோர்வு என்பது இருக்கக் கூடாது, நம்மை எவரும் கவனிக்கவில்லை என்கிற மன ஆதங்கமும் அவசியம் இல்லாதது. ஒரு எழுத்து நிச்சயம் நன்றாக இருந்தால் பிறரால் நிச்சயம் வாசிக்கப்படும், நேசிக்கப்படும்//

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

யூர்கன் க்ருகியர் said...

//''எழுதிக்கொண்டே இரு! என்ன எழுதப்போகிறோம் என இறுமாந்து விடாதே, விசயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' இதுதான் எனது கொள்கை.//

நல்ல கொள்கை ! :)

Radhakrishnan said...

மிக்க நன்றி வேலன் மற்றும் க்ருகியர் அவர்களே.