Friday 3 July 2009

காதல் மட்டும் 13

காதல் மட்டும் 13

நெருஞ்சி முட்கள்
நிறைந்த பாதையில்
மறந்தும் நடக்க
மறுக்கும் கால்கள்

மலர்கள் யாவும்
உதிர்ந்த பாதையில்
கால்கள் வைக்க
இடம்தராத மனம்

நெருஞ்சி முட்களையும்
உதிர்ந்த மலர்களையும்
ஓரம்தள்ளி பாதைகாட்டிட
நடக்கப்பழகும் கால்கள்

முட்களுக்கும் மலர்களுக்கும்
வலிக்குமென கால்களுக்கு
முன்நின்று வழிகாட்டும்
வலிதராத காதல்.

No comments: