Friday 3 July 2009

நான் சந்தித்த வழக்குகள் - 1

கடந்த செப்டெம்பர் மாதம் இலண்டன் மத்திய நீதிமன்றத்தில் இருந்து ஒரு கடிதம் எனக்கு அனுப்பி இருந்தார்கள். நீதிபதிக்கு உதவிட வேண்டும் என கோரி இருந்தார்கள். நமது ஊரில் நாட்டாமையைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் போல வழக்கை உன்னிப்பாக கவனித்து தீர்ப்பு வழங்க உதவ வேண்டும்.

நவம்பர் பத்தாம் தேதி வரவேண்டும் என இருந்தது. இவ்வாறு நபர்களை ஓட்டு பதிவிலிருந்து பெயர் தேர்வு செய்து அனுப்புவார்கள். இப்படி எனக்கு ஒரு வாய்ப்பு வரவும், மறுக்க வேண்டாம் என சரி சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளூர பயம் இருந்தது. இரண்டு வாரம் எனக் குறிப்பிட்டு அதற்கு மேலும் ஆகலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

நவம்பர் பத்தாம் தேதி நீதி மன்ற வளாகம் அடைந்தேன். பலர் வந்து இருந்தார்கள். ஒரு அறையில் சென்று அமர்ந்து இருந்தோம். சென்றவுடன் ஒரு அட்டையை கொடுத்து அதில் ஐந்து பவுண்டுகள் ஒவ்வொரு தினமும் ஏற்றப்படும் எனவும், அந்த அட்டையை அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட உபயோகிக்கலாம் என கூறினார்கள்.

சற்று நேரம் கழித்து இருபது நபர்களை அழைத்தார்கள். நானும் தெரிவு செய்யப்பட்டேன். நீதிமன்ற அறைக்குள் சென்றோம். வழக்கு கொலை வழக்கு என்றார் நீதிபதி. மனம் கிடுகிடுவென ஆடியது. நான்கு பேர் ஒரு கூண்டில் அமர்ந்து இருந்தார்கள். இந்த வழக்கு ஆறு வாரம் நடக்கும் என்றார் நீதிபதி. மனம் பயந்து போனது.

பதினாறு நபர் தெரிவு செய்வோம், வழக்கில் உதவமுடியாதவர்கள் தகுந்த காரணம் சொன்னால் வழக்கிலிருந்து விடுபட்டு செல்லலாம் என சொல்லிவிட்டு நீதிபதியின் உதவியாளர் ஒவ்வொரு பெயராக அழைக்கத் தொடங்கினார். மனம் காரணம் யோசிக்கத் தொடங்கியது.

(தொடரும்)

4 comments:

மயாதி said...

ஓட்டுப் பதிவிலிருக்கும் எல்லோருக்கும் இந்த் சந்தர்ப்பம் கிடைக்குமா?
இது உண்மையான தகவல்தானே!
ஆச்சரியமாக இருக்கிறது....

விரைவாக தொடர்ந்து விடுங்கள்...

Radhakrishnan said...

ஓட்டுப்பதிவிலிருக்கும் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனச் சொல்லிவிட முடியாது, ஏனெனில் எனக்குத் தெரிந்து பலருக்கு இன்னமும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

உண்மையிலே இது ஆச்சரியமான விசயம் தான். ஏனெனில் பலர் இதில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்கள், தெரிவு செய்யப்படுகிறார்கள்.

Thillakan said...

I watched a movie with nealry same concept.
It is very good movie.

12 angry man (1957)
http://www.imdb.com/title/tt0050083/

Radhakrishnan said...

விரைவில் அந்தப் படத்தைப் பார்த்துவிடலாம், தகவலுக்கு மிக்க நன்றி திலகன் அவர்களே.