Friday 24 July 2009

கடவுள் ஆசைப்படுவாரா?

விட்டுப்போன ஆசைகள் என பல இருக்கும். சொல்வதற்கு நினைவில் வராத ஆசைகளும் ஒளிந்திருக்கும். சொல்ல நினைத்து நாகரிகம் கருதி சொல்லாத ஆசைகளும் இருக்கும் ;) இப்படி ஆசைகள் மரணம் வரை தொடர்பவையே. நான் இறந்தால் எனது கிராமத்து சுடுகாட்டில் என்னை எரிக்க வேண்டும் என சொன்ன ஆசையும் உண்டு. பின்னர் நான் மரணமடைந்த பின் எனது அங்கம் யாவும் எடுத்துக்கொள்ளுங்கள் என எழுதிக் கொடுத்த ஆசையும் உண்டு.

பேராசைகள்

எனது எழுத்துக்கு வழி சொன்ன முத்தமிழ்மன்றம், சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்கு வழியமைக்கும் முத்தமிழ்மன்றம் பதிப்பகத்துறையில் காலடி வைத்து முத்தமிழ்மன்ற பதிப்பகம் என பெரும் மகிழ்வுடன் வலம் வர வேண்டும் எனும் ஆசை உண்டு.

பொதுநல அமைப்பு ஒன்றை உருவாக்கி அதை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் எனும் ஆசையும் உண்டு.

Pathways எனும் ஆங்கில நாவல் எழுதிடும் ஆசையும் உண்டு.

இந்திய நாட்டின் பிரதமராக வேண்டும் எனும் ஆசை அதிகமாகவே இருந்தது. இப்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வேண்டும் எனும் ஆசை வந்துவிட்டது ;)

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் அழித்துவிட்டு கடவுள் மதம் என்ற தடமே இல்லாமல் செய்ய வேண்டும் எனும் ஆசையும் உண்டு.

ஒற்றுமையுணர்வுடன் கூடிய மொத்த மனித சமுதாயத்தையும், அனைத்து நாடுகளும் ஒன்றே என ஒரே நாணயத்தையும், போட்டியும் பொறாமையும் காழ்ப்புணர்வு இல்லாத மேன்மை நிறைந்த சமுதாயத்தையும் நிறுவிட வேண்டும் எனும் ஆசை அளவில்லாமல் உண்டு.

எந்த ஒரு நாட்டுக்கும் எல்லை என்பதை வரையறுத்துக்கொள்ள முடியாது எனவும், போர் என்பதை அறியாத மனித இனமும் அனைவருக்கும் உரிமை எனவும் அதே வேளையில் பிறர் உணர்வுகளையும் உரிமைகளையும் காக்கும் வண்ணம் ஒரு உலகமாக மாற்றிட ஆசை உண்டு.

எளிய கல்வி முறை, எளிய வேலை முறை, ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்வதே முக்கியம் என காப்புரிமை சட்டத்தையே கலைத்துவிடும் ஆசை அளவிடமுடியாது.

கறைபடாத எண்ணம், குறையில்லாத வாழ்க்கை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, உண்மையான உலகம் பட்டினியில்லாத குழந்தைகள், நோயில்லாத மனிதர்கள் என நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு உலகத்தை உருவாக்க ஆசை.

எப்படி இதுவெல்லாம் முடியும்? எப்படி இப்படியொரு உலகத்தை கடவுள் படைத்தாரோ அதுபோன்று இப்படிப்பட்ட உலகத்தையும் கடவுளால் படைக்கமுடியும். ஆனால் ஒரே கேள்வி இதுதான்

கடவுள் ஆசைப்படுவாரா?

முற்றும்

3 comments:

கோவி.கண்ணன் said...

//உலகத்தில் உள்ள அனைத்து மதங்களையும் அழித்துவிட்டு கடவுள் மதம் என்ற தடமே இல்லாமல் செய்ய வேண்டும் எனும் ஆசையும் உண்டு. //

இது நடக்கும் ! நான் நம்புகிறேன் !
:)

இப்போதே மதங்கள் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

Thekkikattan|தெகா said...

[[கடவுளின் பிரதிநிதி பேசுகிறேன்]].... :-)) உங்கள் ஆசைகளெல்லாம் சிக்கல் இல்லாத, சுவாரசியமற்ற ஒரு உலகம் அமைப்பதாக அல்லவா இருக்கிறது... ம்ம்ம் யோசிக்க வேண்டும் :D

//கடவுள் ஆசைப்படுவாரா?//

ஓ! படுகிறாரே... அதன் பொருட்டுதானே எந்த மதத்தில் எத்தனை கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற போட்டியில் அத்தனை "மார்க்கெட்டிங்களும்" கொடி கட்டி பறக்கின்றன.

பை த வே, அழகான எண்ணங்கள் தாங்களுடையது!!

Radhakrishnan said...

நன்றி கோவியாரே, நன்றி தெகா.