Monday 27 July 2009

திரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்

சின்னஞ்சிறு வயதில் அ.இ.அ.தி.மு.க கட்சிக்கொடியினைத் தூக்கிக்கொண்டு கிராமத்துத் தெருக்களில் 'போடுங்கம்மா ஓட்டு, ரெட்ட இலயப் பார்த்து' எனச் சுற்றி வந்ததைப் பார்த்த எனது சகோதரர் 'இந்த வயசிலேயே என்ன கட்சி' எனக் கண்டித்த நிமிடத்திலிருந்து எந்த ஒரு கட்சியின் கொடியையும் இதுவரைத் தூக்கியதில்லை. தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க வாய்ப்பின்றிப் போனது. அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் மிகவும் பிடித்தமானவராக இருந்தார். ஒரு வெற்றியாளர் என்பதால்தானா அவரை எனக்குப் பிடித்து இருந்தது?! தரையில் அமர்ந்து அவரது படங்களை ஆர்வமுடன் பார்த்த நாட்கள் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும்.

'நாலுகோடி மக்களுக்குத் தலைவர்' 'உதயசூரியன் சின்னத்திலே' 'ஏறுது ஏறுது விலைவாசி' போன்ற பல பாடல்களை சிறுவயதில் கேட்கும்போது உற்சாகமும், திரு.கருணாநிதி அவர்களின் அயராத உழைப்பும், அவர் தமிழ் மேல் கொண்டிருக்கும் தீராத அன்பும் வியப்புடன் அவரைப் பார்க்க வைத்தது. இவரும் ஒரு வெற்றியாளர் என்பதால்தானா எனது பார்வை அவர் மீது விழுந்தது?!

அமரர் கண்ணதாசன்! இவரது திரைப்படப்பாடல்களும், அர்த்தமுள்ள இந்துமதமும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொன்னால் மிகையாகாது. இவரும் ஒரு வெற்றியாளர் என்பதலா அளவிலா நேசம் இவர் மீது வந்தது. திறமையுடையவர்கள் வெற்றியாளர்கள் ஆகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அனைவருமா வெற்றியாளர்களாக பரிணாமிக்கிறார்கள். இயற்கையிலேயே ஒருவித ஈடுபாடு என்பதை நமது மனம் முடிவு செய்துவிடுகிறது.

இப்படித்தான் திரு.ரஜினிகாந்த் என்னுள் சிறுவயதிலேயே பிரவேசம் செய்தார். இவரைப் பற்றிய அறிமுகம் எல்லாம் திரைப்படங்களில் வாயிலாகத்தான். இவரது படங்களைப் பார்ப்பதில் ஒருவித ஈடுபாடு உண்டானது. கொஞ்சம் வயது அதிகமாக அதிகமாக நடிகர் என்கிற போர்வையை இவர் மீதிலிருந்து அகற்றி, நல்ல மனிதர் என்கிற போர்வையை இவர் மீது எனது மனதுப் போர்த்திக்கொண்டது. அருகில் இருந்துப் பழகியதில்லை, பேசியதில்லை ஆனால் இவரைப் பற்றிய இப்படியொரு அபிப்ராயத்தை என்னுள் விதைத்ததைக் கண்டு பலமுறை யோசித்திருக்கிறேன். இவரைப் பற்றிய தகவல் என்றால் ஆவலுடன் படிப்பது வழக்கமாகி இருந்தது. இவரைப் பற்றி அனைவருமே நல்லவிதமாகச் சொல்லவேண்டும் என்கிற ஒருவித எதிர்பார்ப்பும் என்னுள் இருந்தது என்பதை நினைக்கும்போது நாம் நேசிப்பவர்களுக்கு எவ்வித களங்கமும் ஏற்படக்கூடாது என ஒரு சராசரி எண்ணத்தினைக் கண்டும் யோசித்தது உண்டு.

திரு. ரஜினிகாந்த் அவர்களின் படங்களில் 'கதை தேவையில்லை, அவர் இருந்தால் போதும்' எனவும் 'நீ நடிக்கத் தேவையில்லை, நடந்தால் போதும்' என்கிற மனோபாவம் பலருக்கு இருந்தாலும், இவர் சின்னக் குழந்தைகளையும் வசீகரம் பண்ணியதன் காரணம் புரிந்திட முடியாதது. ஆனால் எல்லோருக்குமே இவரைப் பிடிக்கும் எனச் சொல்லிவிடவும் முடியாது. இவர் ஒரு வெற்றியாளர் என்பதாலா இவரைப் பற்றி அதிகம் அறிந்து கொண்டேன்?!

திரு.ரஜினிகாந்த் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ பலரும் அவருக்காகவேப் படங்கள் பார்ப்பவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். அதுபோலவே எழுதப்படும் பல பதிவுகளில் ஆழ்ந்த நுண்ணிய கருத்து இருக்கிறதோ இல்லையோ எழுதப்படுபவருக்காகவும் பதிவுகள் ஒருவித ஈர்ப்புத்தன்மையைப் பெற்றுவிடுகின்றன. எனது பல இடுகைகளில் இன்னும் நல்லதொரு முயற்சி வேண்டும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை.

ஒருவேளை இந்த இடுகை பலரது கவனத்தை ஈர்க்குமானால் அதற்குக் காரணம் திரு.ரஜினிகாந்த் அவர்கள்தானேயன்றி எனது எழுத்து அல்ல! அதேவேளையில் இந்த இடுகை எவருடையப் பார்வையிலும் படாது போனால் அதற்கு காரணம் திரு.ரஜினிகாந்த அவர்கள் அல்ல, எனது எழுத்துத்தான்.

பொறாமைப் படாமல் சாதனையாளர்களாக மாறுங்கள், சாதனையாளர்களின் கண்ணும் உங்களைக் கண்டு வியந்து போற்றும்.



12 comments:

Bleachingpowder said...

//ஒருவேளை இந்த இடுகை பலரது கவனத்தை ஈர்க்குமானால் அதற்குக் காரணம் திரு.ரஜினிகாந்த் அவர்கள்தானேயன்றி எனது எழுத்து அல்ல! //

Yes indeed. He is a crowd puller in Blogs as well.

Radhakrishnan said...

அட! மிக்க நன்றி ஐயா.

ISR Selvakumar said...

சரியாக எழுதியிருக்கிறீர்கள்

Radhakrishnan said...

மிக்க நன்றி செல்வக்குமார் அவர்களே.

நையாண்டி நைனா said...

Ok. Good perception.

கிரி said...

//அமரர் கண்ணதாசன்! இவரது திரைப்படப்பாடல்களும், அர்த்தமுள்ள இந்துமதமும் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவை என்று சொன்னால் மிகையாகாது//

ரொம்ப அருமையான புத்தகங்கள்

//இவரைப் பற்றிய தகவல் என்றால் ஆவலுடன் படிப்பது வழக்கமாகி இருந்தது//

:-)

//சாதனையாளர்களாக மாறுங்கள், சாதனையாளர்களின் கண்ணும் உங்களைக் கண்டு வியந்து போற்றும்.//

பொறாமை படாமல் ..என்பதையும் கூட சேர்த்துக்குங்க ;-)

ரஜினிய திட்டினால் தாங்கள் புத்திசாலி என்று நினைத்து கொள்கிறவர்களுக்கு இவை என்றும் புரியாது...

சார் கலக்கலா எழுதி இருக்கீங்க :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி நைனா அவர்களே.

தாங்கள் சொன்னதுபோலவே மாற்றியமைத்துவிட்டேன் கிரி அவர்களே. மிக்க நன்றி.

பாசகி said...

//பொறாமைப் படாமல் சாதனையாளர்களாக மாறுங்கள், சாதனையாளர்களின் கண்ணும் உங்களைக் கண்டு வியந்து போற்றும்.//

ஒரு பில்லியன் ரீப்பீட்டு போட்டுக்கறேன்..

எங்க போனாலும் எனக்கு முன்னாடி வந்து நான் சொல்ல நினைக்கறதை சொல்லிட்டு போறதே கிரி-ஜி க்கு வேலையாப் போச்சு :))))))))

சரி யார் சொன்னா என்ன உண்மையத்தான சொல்றோம் :)

Radhakrishnan said...

மிக்க நன்றி பாசகி அவர்களே. 'உண்மை சுடும்' எனச் சொல்வார்களே?!

இந்த இடுகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்னவோ உண்மை. நான் எழுதிய இடுகைகளில் இந்த இடுகை மட்டுமே பலரால் பார்வையிடப்பட்டது என கணிப்பு காட்டுகிறது. அதிசயம் தான்! நானே பலதடவை இந்த இடுகையைப் பார்த்து இருப்பேன் போலிருக்கிறது

மிக்க நன்றி.

பாசகி said...

//..கவனத்தையும் ஈர்த்தது ..//

அவர் பேருக்குள்ளே காந்தம் உண்டு இது உண்மைதானுங்கோ...

//நானே பலதடவை இந்த இடுகையைப் பார்த்து இருப்பேன் போலிருக்கிறது//

நானும்தான் :)

Asfar said...

//ஒருவேளை இந்த இடுகை பலரது கவனத்தை ஈர்க்குமானால் அதற்குக் காரணம் திரு.ரஜினிகாந்த் அவர்கள்தானேயன்றி எனது எழுத்து அல்ல! //

Exact because I don't have intrest very much cinema but I feel eager to read any article if i see this word "Rajani" anywhere? I dont know what is the reason?

Radhakrishnan said...

மீண்டும் நன்றிகள் பாசகி.

மிக்க நன்றி அஸ்ஃபர் அவர்களே. சில விசயங்களுக்கு காரணம் கிடைக்காதுதான். படித்ததும் என்ன உணர்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். வெறுப்பை வளர்க்காத எந்தவொரு விசயமும் நல்ல விசயங்கள் தான்.