Thursday 30 July 2009

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 1

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அவரவர் மகிழ்ச்சியாக இருப்பது.

நான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குக் காரணம் பிறரது கஷ்டங்களை முன்னிறுத்த மாட்டேன். மேலும் அடுத்தவர் கஷ்டங்கள் குறித்து அநாவசியமாக கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டேன். தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன், இல்லையெனில் எனது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் இல்லை நான், வாடிய பயிரைக் கண்டபோது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்திருப்பவனே நான்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது மனிதர்களுக்கு இயலாத காரியமாக இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய கவலையில் மனிதர்கள் தங்கள் பொழுதுகளை இழந்துவிடுகிறார்கள்.

நகைச்சுவையாகச் சொல்வார்கள், ''பிரச்சினைகளே எனக்கு இல்லையே, என்ன வாழ்க்கை இது'' என கவலைப்பட்டுக் கொண்டிருந்தாராம் ஒருவர்.

மகிழ்ச்சியாக இருக்கனும்னா சன்னியாசம் போ என குடும்பஸ்தர்களைச் சொல்வது போல, மகிழ்ச்சியாக இருக்கனும்னா குடும்பஸ்தனா போ என சன்னியாசிகளும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அக்கரை இக்கரை எனும் அக்கறை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இதுதான் என சில விசயங்களை வரையறுப்பது என்பது தவறாகவே முடியும். எதிலும் ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவைப் பார் என வட்டார மொழி ஒன்று வழக்கத்தில் உண்டு.

7 comments:

நிகழ்காலத்தில்... said...

//வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் இல்லை நான், வாடிய பயிரைக் கண்டபோது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்திருப்பவனே நான். //

இன்றைய உலகில் எப்படி இருக்கவேண்டும் என நன்றாகச் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஒவ்வொன்றும் உண்மையான வ(லி)ரிகள்...!

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க பாஸ்!!

கலையரசன் said...

கரைக்டா சொன்னீங்க பாஸ்!!

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

கிரி said...

//அடுத்தவர் கஷ்டங்கள் குறித்து அநாவசியமாக கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டேன். தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன், இல்லையெனில் எனது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வேன்.//

சார் எனக்கு பிடித்த விஷயம்..இது குறித்து பதிவெழுத நினைத்து இருக்கிறேன்..பார்ப்போம்.

//மகிழ்ச்சியாய் இருப்பது என்பது மனிதர்களுக்கு இயலாத காரியமாக இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய கவலையில் மனிதர்கள் தங்கள் பொழுதுகளை இழந்துவிடுகிறார்கள்.//

கலக்கல்

Radhakrishnan said...

விரைவில் இதுகுறித்து பதிவினை படித்து மகிழ்ந்திட ஆவலாக இருக்கிறேன். மிக்க நன்றி கிரி அவர்களே.