Friday 14 August 2009

திரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.

சிங்கையில் வாழும் நண்பர்கள் இதுகுறித்து நிச்சயம் கலந்தாலோசித்து இருப்பார்கள். இருப்பினும் சிங்கையில் வாழ்ந்த நண்பர் ஒருவரின் சில ஆலோசனைகளை இங்கே இணைக்கிறேன்.

-----------------------

நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள். தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும்.

சிண்டா என்ற ஒரு அமைப்பு, சிங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அவர்களையும் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். அவர்களிடம் மிக குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், நமக்கு காரியம் ஆக வேண்டும். மனம் தளராது போராட வேண்டும். நண்பரின் துணவியாரிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்து ஒலி 96.8-க்கு (சிங்கையில் இருக்கும் தமிழ் வானொலி நிலையம்) நேயர் விருப்பத்தின் பொழுது பேச சொல்லுங்கள். மீனாட்சி சபாபதி, பாலா, பாமா ஆகியோர் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களையும், நேயர்களையும் உதவ கேட்கலாம்.

--------------------------

சிங்கையில் தகவல் ஊடகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

மிக்க நன்றி.

3 comments:

கோவி.கண்ணன் said...

//
நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள். தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும்.

சிண்டா என்ற ஒரு அமைப்பு, சிங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அவர்களையும் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். அவர்களிடம் மிக குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், நமக்கு காரியம் ஆக வேண்டும். மனம் தளராது போராட வேண்டும். நண்பரின் துணவியாரிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்து ஒலி 96.8-க்கு (சிங்கையில் இருக்கும் தமிழ் வானொலி நிலையம்) நேயர் விருப்பத்தின் பொழுது பேச சொல்லுங்கள். மீனாட்சி சபாபதி, பாலா, பாமா ஆகியோர் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களையும், நேயர்களையும் உதவ கேட்கலாம்.//

இந்தப் பின்னூட்டங்கள் பல பதிவுகளில் கவனம் பெற்று எதும் செந்தில் நாதனுக்கு பலன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இணைத்திருக்கிறீர்கள். பாராட்டு மற்றும் நன்றி !

* செந்தில் நாதன் சிங்கப்பூர் குடிமகன் அல்ல, நிரந்தரவாசி மட்டுமே, அரசாங்க சலுகைகள் எதுவும் கிடைக்காது
* தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் குடிமகன்களுக்கு மட்டுமே உதவி செய்வார், மற்றவர்கள் முயன்று பார்க்கலாம். ஆனால் செந்தில் நாதனுக்கு மாதவருமானம் சிங்கை வெள்ளி மாதம் 3000 வரை இருந்ததால் அ(எ)துவும் கிடைக்காது. அவருடைய சேமிப்பு அனைத்துமே கடந்த இரண்டு மாத மருத்துவ செலவுகளுக்கு சரியாக போய்விட்டது. SINDA எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் அமைப்பிலும் குடிமகன்களுக்கு முன்னுரைமை தருவார்கள், நிரந்தரவாசிகளை அவர்கள் கருத்தில் கொண்டாலும் சிகிச்சை முடிந்த பிறகே 5% - 10% விழுக்காடு சிகிச்சை செலவை ஏற்பார்கள், அதையும் மேல்மட்ட குழு ஆலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உண்டு. அதற்கான முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். 100% விழுக்காடு சிகிச்சைக்கு பில் பணம் செலுத்திய பிறகு 10% திரும்ப பெற வாய்ப்புகள் உண்டு.

ஒலி 96.8ல் கேட்கலாம், ஆனால் செய்வார்களா என்று தெரியாது ஏனினில் இவரைப் போல் பலர் அப்படி இருப்பார்கள், நமக்கு தெரிந்தவர், உதவி தேவைப்படுகிறது என்பதால் நாம் உதவ முன்வருகிறோம். ஒலி 96.8 அரசாங்க சேவை அமைப்புதான், நிதி உதவி விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என்றே நினைக்கிறேன். இரத்த தானம் கேட்டு கூட இதுவரை வானொலி விளம்பரம் பார்த்தது இல்லை. செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் இயற்கை பேரிடர்களுக்கு உதவும், தனிப்பட்ட மனிதருக்கெல்லாம் செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நண்பர்களால் பல அமைப்புகளிடம் பேசப்பட்டு வருகிறது. உறுதியாகக் கூற முடியாது....முடிந்த அளவுக்கு சிறு தொகையேனும் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்

குழலி / Kuzhali said...

எம்.பியை பார்ப்பதற்கும் சிண்டாவிற்கும் தொடர்பு கொண்டுள்ளோம், இந்த உதவிகளின் அளவு நமது தேவை அளவிற்கு போதுமானதாக இல்லை, பதிவர்கள் நண்பர்கள் வழியாக முயற்சிப்பது மட்டுமின்றி மற்ற அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறோம், அது தொடர்பான தகவல்கள் பெற்று அவர்கள் குடும்பத்தினருக்கு தொடர்ந்து அளித்துக்கொண்டுள்ளோம்...

கோவி கூறியுள்ளது போல நிறைய விசயங்கள் இதில் உள்ளாடங்கியிருந்தாலும் அத்தனை வாய்ப்புகளையும் முயற்சித்துக்கொண்டுள்ளோம்...
நன்றி

Radhakrishnan said...

மேலதிக தகவல்களுக்கும் தங்களது முயற்சிகளுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் கோவியார் மற்றும் குழலி அவர்களே.