Friday 21 August 2009

தவம் புரிதல் (உரையாடல்?)

கானகம் சென்று கடவுள் காண
கண்மூடி உள்மந்திரம் சொல்லி
கரையான்கள் உடலில் புற்றுகள்
கட்டியதையும் உணராது
காலம் பல காத்து இருந்து
காட்சி தரும் கடவுளை
கண்ட பின்னரே கலைந்திடும் தவம்
கருத்துடன் பெற்றிடுவார் வரம்

கணப்பொழுதேனும் சிந்தித்து இருந்தால்
கள்ளம் இல்லா உலகம்
கவலை இல்லா வாழ்க்கை
காதல் கொண்ட மனம்
கற்புள்ள செயற்பாடுகள்
களிப்புடன் நகரும் வினாடிகள்
கோள்கள் பல பூமி போன்று
கணக்கில்லாத நல்ல வரங்கள்

கடவுளிடம் வரும் சந்ததியினருக்கு பெற்று
கருணை கொண்ட உலகம் உருவாக்கி
கலப்படம் இல்லாத வாழ்க்கை
கூட்டி தந்து கொண்டாடி இருக்கலாம்
காரணம் தெரியாது நல்ல
காரியம் செய்யாது போயினர்
கலக்கத்தில் இன்றைய வாழ்க்கை...

கடவுளை வேண்டி தவம் செய்ய
கானகமும் இல்லை நேரமும் இல்லை
தவம் புரிதல் இனி எளிதும் இல்லை
தவம் புரிய யாரேனும் புறப்பட தயார் எனில்
உலகம் செழிக்க ஒரே ஒரு வரம் கேளுங்கள்
கடவுள் நல்ல வரம் தருவார்

இக்காலத்தின் நிலைமை கண்டு
தவத்தின் நோக்கம் கண்டு
ஒருவேளை வராமலே இருந்து கொள்வார்
வரும் வரை புரியுங்கள் தவம்
தவம் புரிதல் என்பதே அதுதான்
தவத்தின் பலனை மற்றும்
முன்னோர்கள் போன்று மறந்து விடாதீர்கள்!

No comments: