Monday 3 August 2009

நட்பு தினம்னா என்ன?

நண்பர்கள் தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டதை வலைப்பூக்களில் கண்ணுற்றேன். எனது ஒரு பதிவில் பின்னூட்டமாக சந்ரு அவர்கள் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிச் சென்றார். நானும் அதே பின்னூட்டத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் வருடப் பிறப்பினைக் கொண்டாடும்போது சொல்லிக்கொள்ளப்படும் வாழ்த்துகளைப் போல் அல்லாமல் எவருமே எனக்கு நண்பர் தின வாழ்த்துச் சொல்லவில்லை, நானும் எவருக்கும் நண்பர் தின வாழ்த்துச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆக எனக்கு நண்பர்கள் இல்லையா? அல்லது நான் நண்பர்களைப் புறக்கணிக்கிறேனா?

முத்தமிழ்மன்றத்தில் நண்பர்கள் தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்ளப்படும், ஆனால் இம்முறை எவருமே அந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ளாத ஒருத் தோற்றத்தை இன்று சென்றுப் பார்த்தபோது அறிந்தேன். நானும் மெளனமாக சில பதிவுகள் வழக்கம்போல் படித்துவிட்டு, பதிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டேன். நண்பர்களை இந்த தினம் மட்டுமே நினைவு கொள்தல் அவசியம் இல்லை என கருதுகிறோமோ? அல்லது இதுவும் ஒரு நாள் சடங்கு முறையில் சேர்க்கப்பட்டுவிட்டதே எனும் வருத்தமா?

நண்பர்கள் எனப் பலரைச் சேர்த்து மகிழும் வேளையில், பகைவர்களாக அவர்கள் மாறிவிடக்கூடாதே எனும் அளவிலா பயம் எனக்கு வந்து சேர்வதுண்டு. எப்போதும் சற்றுத் தள்ளி நின்றேப் பழகிக்கொண்டேன். நட்புடன் சேர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் என்னை ஓரமாகவே நிற்கச் சொன்னது.

நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கூட நட்பில் ஒருவித ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. விசுவின் மக்கள் அரங்கத்தில் விசு சொன்னார் எனது நண்பர்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. அவரவர் வேலை, குடும்பம் என்றே நாட்கள் செல்கிறது. திருமணம் ஆன பின்னர் வேலை, குடும்பம் என நட்பு சற்று தள்ளியே தான் நிற்கிறது.

என்னுடன் படித்த, பழகிய நண்பர்கள் எனது நினைவலைகளில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொடர்பு கொள்வதுதான் குறைந்துப் போய்விட்டது. எப்போதாவது பேசிக்கொள்வதா நட்பு என்பது போல் ஆகிவிட்டது.

இந்த நட்பு தினத்தை எனது மனைவியிடமும், ஒன்பது வயது நிரம்பிய மகனிடமும் சொன்னேன். புன்னகைத்தார்கள். சில மணி நேரங்கழித்து எங்கள் மகன் என்னிடமும், என் மனைவியிடமும் கை குலுக்கி நட்பு தின வாழ்த்துகள் சொன்னான். நானும் எனது மனைவியும் நட்பு தின வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டோம்.

எங்கெங்கோ இருக்கும் எங்கள் நண்பர்களும் மகிழ்ந்து இருப்பார்கள், என்னுடன் வாழும் இந்த இரண்டு அருமையான நண்பர்களை நினைத்து.

7 comments:

Radhakrishnan said...

மிக்க நன்றி ராம்.

யாரோ ஒருவர் said...

இன்று உலகம் உள்ளங்க்கைகுள் அடங்கிவிட்டது.ஏன் பக்கத்து ஃப்ளாட் -ல் நண்பர்கள் இருந்தால் கூட அலைபேசியில் தான் பேசுகிறோம்.முகம் பார்த்து பேசும் ப்ழக்கம் இன்று இல்லை.அதனால் தான் இன்று நட்பு தோல்வி அடைந்து விடுமோ என் பயப்படுகிறோம்.எதிபாற்புள்ள நட்பு தான் தோல்வி அடையும் நல்ல நட்பு தோல்வி அடையாது.அதற்கு வாழ்த்துக்கள் தேவை இல்லை.நல்ல நட்பு புகழ்ச்சி அடையாது.

Radhakrishnan said...

அருமையானக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி திருமதி.ஜெயசீலன் அவர்களே.

கிரி said...

என் நண்பர்களே என் உயர்விற்கு காரணம்..இன்னும் மூன்று நாட்களில் இந்தியா சென்று அனைவரையும் பார்க்க போவது மகிழ்ச்சி அளிக்கிறது

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உண்மைதான் நண்பரே! நட்புக்கு வாழ்த்துக்கள் தேவையில்லை,தோல்வியும் இல்லை.

Radhakrishnan said...

//கிரி said...
என் நண்பர்களே என் உயர்விற்கு காரணம்..இன்னும் மூன்று நாட்களில் இந்தியா சென்று அனைவரையும் பார்க்க போவது மகிழ்ச்சி அளிக்கிறது//

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது கிரி அவர்களே. நிச்சயம் சந்திப்புக் கட்டுரையை எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போது சூழ்நிலை சந்தர்ப்பங்களினால் பல நண்பர்களைச் சந்திக்காமலே திரும்பி வந்ததுண்டு.

Radhakrishnan said...

//ஜெஸ்வந்தி said...
உண்மைதான் நண்பரே! நட்புக்கு வாழ்த்துக்கள் தேவையில்லை,தோல்வியும் இல்லை.//

ஆம், நண்பர்கள் எப்போதும் நினைவுகளில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.