Sunday 23 August 2009

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.

3 comments:

தமிழ் said...

ஆவலுடன் உள்ளேன்

கிருஷ்ண மூர்த்தி S said...

செந்தமிழும் நாப்பழக்கம்!

தயக்கம் கொள்வது தான் முதல் தடை. தயக்கத்தை உதறிவிட்டு, எழுத ஆரம்பியுங்கள்.
இணையத்தில் எழுதுவது கல்வெட்டு அல்ல, தவறு நேர்ந்தால் அப்படியே தூக்கிபோட்டு விடுவதற்கு. திருத்திக் கொள்ளவும், புதிய விஷயங்கள் உருவாகும்போது சேர்த்து விரிவு படுத்திக் கொள்ளவும், படிப்பவர்களே பெரும்பாலான சமயங்களில் நல்ல எடிடர்களாகவும்,
தகவல் களஞ்சியத்தை விரிவுபடுத்துபவர்களாகவும் ஆகி விடுகிற தளம் இது!

தொடங்குங்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி திகழ்மிளிர் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஐயா. விரைவில் தொடர்கிறேன்.