Wednesday 26 August 2009

என் உயிர் நீ

உனைப் பற்றி ஒரு கவிதை
எழுதித் தர வேண்டுமென
உரிமையுடன் கேட்டாய்
உவகையுடன் சம்மத்தித்தேன்
இமைகள் மூடி திறக்கிறேன்
இருபத்தி ஐந்து ஆண்டுகள்
இன்னும் நீ கேட்ட கவிதைக்குப்
பிள்ளையார் சுழி கூடப் போடவில்லை.

உன்னை மட்டுமே நேசிக்க எனக்கு
உரிமம் தந்தவள் நீ
உறங்கிடும் போதும் எனை
காத்து நிற்பவள் நீ
எழுதத் தோணவில்லை இதற்கு மேல்.
காதலிக்கும்வரை கவிதை வார்த்தைகள்
கல்யாணத்திற்குப்பின்
வாழ்க்கையில் காதல் கவிதைகள்

கவிதை ஒரு பொய்த்தீர்மானம்
காதல் ஒரு மனத்தீர்மானம்
நிஜமான காதல் கவிதை உனக்கு
பொய்யான நிழல் கவிதை எதற்கு.

5 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றாய் இருக்கிறது

Thekkikattan|தெகா said...

:) அழகு!

Radhakrishnan said...

1. மிக்க நன்றி ஐயா.

2. மிக்க நன்றி தெகா அவர்களே.

இது குறித்த வேறு ஒரு பார்வையும் உண்டு. தலைவியின் வேண்டுதலை தட்டிக் கழிக்கும் தலைவன்.

தேவன் said...

கவிதை அழகாகத்தான் அமைந்திருக்கிறது.

Radhakrishnan said...

மிக்க நன்றி கேசவன் அவர்களே.