Friday, 28 August 2009

கடவுள்

வீட்டினுள் தனி அறையில்
பல படங்களுக்கு
தீபம் காட்டிய பின்னர்
திருநீரு இட்டதும்
கடவுள் அறிமுகம்

பிறந்ததினால் நன்றி கூற
தலைமுடி காணிக்கை
கடவுள் பழக்கம்

பள்ளிக்கு செல்லும் காலங்களில்
சாமியை கும்பிட்டு போ என
அம்மாவின் அன்பினால்
ஊரு காளியம்மனும்
ஓரத்து அய்யனாரும்
வேப்பமரத்து முனியாண்டியும்
குளத்தோர பெருமாளும்
கடவுளாய் பரிச்சயம்

கோவில்களின் வேலைப்பாடுகள் மத்தியில்
கையெடுத்து கும்பிட வைக்கும்
சிலையாய் கடவுள்

கடவுள் காட்சி தருகிறார்
மனிதர் காட்டும் வித்தைகள்

எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்
சொற்பொழிவாளரின் சொல்வன்மை

எல்லாம் கடந்து உள்ளவன்
எல்லை இல்லாதவன்
தவத்தினால் வருகை தந்தவன்
வரம் எல்லாம் அள்ளி தந்தவன்
வெறும் காட்சிகளாய் கதைகளாய் இன்று

உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யாரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.


Post a Comment

11 comments:

நிகழ்காலத்தில்... said...

//எங்கும் தேடாதே
ஒளிந்திருக்கும் உன்னில் கடவுள்//

\\கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.\\

எண்ணங்களை எழுத்தாக கொண்டு வர கடினமாக இருக்கும்போது, கவிதையாய்...

வாழ்த்துகிறேன் நண்பரே

[பி]-[த்]-[த]-[ன்] said...

//உதவ ஒருத்தரும் இல்லை
என வருந்தியபோது
ஒருத்தர் வந்தார் கடவுள் போல
யரோ சொன்னது காதில் விழுந்தது
கடவுள் மனிதராய்
மனிதர்களே கடவுளாய்.//

100%

****

கடவுள்ன்னு போட்டுருக்கப்பவே அண்ணன் (நிகழ்காலத்தில்) அட்டனன்ஸ் கொடுத்திருப்பருன்னு தெரியும் -:)

Kesavan said...

///ஊரு காளியம்மனும் ஓரத்து அய்யனாரும் வேப்பமரத்து முனியாண்டியும் குளத்தோர பெருமாளும் கடவுளாய் பரிச்சயம் ///

நாம முந்திக்குவோம்னு பார்த்தா, யப்பா முடியல.
கடவுள் பரிச்சயம் நல்லா இருக்கு.

வெ.இராதாகிருஷ்ணன் said...

1. மிக்க நன்றி சிவா அவர்களே. கவிதையாகச் சொல்வது கடினம் தான்.

2. மிக்க நன்றி பித்தன் அவர்களே, ஆஹா நீங்களும் கடவுளுக்காகத்தானா?

3. நீங்கள் முந்தியிருக்க வேண்டுமெனில் இன்னும் மூன்று ஆண்டுகள் பின்னோக்கிப் போயிருக்க வேண்டும். மிக்க நன்றி கேசவன் அவர்களே.

வால்பையன் said...

சொன்னவர் எதையும் லவட்டிட்டு போகாத வரை சந்தோசம்!

அன்புடன் அருணா said...

நலலாரு்க்கு...கடவுளின் அறிமுகம்.

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா, மிக்க நன்றி வால்பையன் அவர்களே! என்ன பண்றது, நம்மை இப்படியெல்லாம் சிந்திக்கச் செய்துவிட்டார்கள் மனிதர்கள். சக மனிதர் எவர் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது, கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால் என்ன, இல்லாது போனால் என்ன?

லவட்டிட்டு, சிரிக்க வைத்த வார்த்தை, அருமை.

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி அருணா அவர்களே.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

கிருஷ்ணமூர்த்தி said...

கடவுள்னு தலைப்பு வச்சதுமே அங்க வந்து குதிச்சிடறார் பாருங்க எங்க வால்பையன்!

எல்லாம் அந்த கடவுளோட அருள்! மகிமை! அதிசயம்!

கடவுள் என்பது--
தேடிக் கண்டுபிடிப்பதில் அல்ல!
தேடுகிறவனைக் கண்டுகொள்வதில்!

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக்க நன்றி தங்கமணி பிரபு அவர்களே. பார்த்தேன், முழுவதுமாகப் படித்துவிட்டு எழுதுகிறேன்.

ஆஹா ஐயா, வித்தியாசமாக இருக்கிறது தங்களின் சிந்தனை, மிகவும் ரசித்தேன். தேடுகிறவனைக் கண்டுகொள்வதில் மிக மிக அருமை.

ஆமாம், வால்பையன் அவர்களின் சிந்தனையெல்லாம் மனிதத்தைப் பற்றியே வலம்வருகிறது. கடவுளில் மனிதம் உள்ளிருக்கும் என்பதை அவர் அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.