Saturday 29 August 2009

கடவுளோடு காதல்

என்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு
பச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்
பருவம் வந்தபின்னும் மாறவில்லை
உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்

நான் பாமாலை சூட்டும் போதெல்லாம்
வாய் திறந்து நீ பாராட்டியது இல்லை
மலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்
மறுத்து ஒதுக்குவதில்லை நீ
உன்மீது எனக்கு மனம் மாறா காதல்

பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்

உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி
என் தீராத காதல் சொல்கிறேன்
ஏற்றுக் கொள்வாய் எம்பெருமானே

உன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து
யான் உறங்கச் செல்லும்போதெல்லாம்
என்னை நீ ஆட்கொள்ளமாட்டாயோ
என்னும் அளவில்லாத காதல் உன்னோடு
பரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய
எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்!

5 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

கடவுளே காதல் கொள்வாயா?

நல்ல கவிதை

தேவன் said...

///உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு
ஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி///

உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே ஏற்றிய தீபம் எரிகிறதப்பா.

நல்ல கவிதை ஐயா

Radhakrishnan said...

மிக்க நன்றி வசந்த் மற்றும் கேசவன் அவர்களே.

Shakthiprabha (Prabha Sridhar) said...

நெகிழ்ச்சியாக இருக்குங்க :)

//பால் கொண்டும் நெய் கொண்டும்
அமிர்தம் கொண்டும்
அபிஷேகம் செய்தபோதெல்லாம்
அதனை நீ ருசித்ததும் இல்லை
மெய்மறந்து ரசித்ததும் இல்லை
அன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்
//

ம்ஹ்ம்...ருசிக்கிறான். ரசிக்கிறான்.ஆது நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை என்பது என் எண்ணம்.


//எந்தன் காதலை ஏற்றுக்கொள்
இனி ஒரு பிறவியும் வேண்டிலேன்! //

awesome. சில கவிதைகள் படிக்கும் போது மனம் நெகிழும். இப்படிப்பட்ட கவிதைக்கு ஆன்மா நெகிழ்கிறது....

அருமை.

Radhakrishnan said...

இறைவன் நிச்சயம் நெகிழ்ந்திருப்பார் என எண்ணம் கொண்டேன்.

மிக்க நன்றி ஷக்தி அவர்களே.