Wednesday 26 August 2009

நிலையான நட்பு

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம்
வார்த்தைகளில் தொடங்கி வருடங்கள் பல கடந்து வளர்பிறையாய்
முகவரி தெரியாமல் முழு நிலவாய்
அகம் அறியாது இனம் புரியாத நட்பு

எண்ணங்கள் நினைவுகளில் இடும் அலங்காரம்
இனிய நாட்கள் இன்ப ஒளி வீசி மலர்ந்து சிரிக்கும்
நெருடல்கள் இல்லாது வணங்கி கொண்டு
நெஞ்சை வருடி நெகிழ்வு தருமது நட்பு

இடங்கள் பல மாறியது உண்டு
தொடர்ந்தே என்றும் இணைந்து வந்ததுண்டு
அன்பே உருவான இனிய இதயத்தோடு
முதுமை வரைக்கும் வருமோ இளமை மாறா நட்பு

கண்ட உண்மையில் கற்பனை மறைந்துவிடும்
கொண்ட நட்பினால் உள்ளம் அளவிலா மகிழ்ச்சி கொள்ளும்
எல்லைதனை வகுத்து புரிந்து கொண்டால்
குறையின்றி நெறியோடு நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு.

5 comments:

Radhakrishnan said...

மிக்க நன்றி ராம், அந்த விட்ஜெட் இணைத்ததும் வலைப்பூத் திறக்க வெகுநேரமாகிறது. அதன்காரணமாக தமிழ்மணத்திலும், தமிழிஸிலும் இணைப்பது போதுமென இருந்துவிட்டேன். மன்னிக்கவும்.

நல்லதொரு இடுகையை எழுதினால் அது வாசகர்களை நிச்சயம் சென்று அடைந்துவிடும் எனும் நம்பிக்கை அதிகமாகவே உண்டு. தங்களின் தொடர் முயற்சிக்கு எனது வணக்கங்கள். தங்களின் வேண்டுகோளை நிராகரிப்பதாக எண்ண வேண்டாம். மிக்க நன்றி.

தினேஷ் said...

முகம் பார்க்காமல் முதல் அறிமுகம் - நீண்டநாள் வாழ்ந்திடும் நிலையான நட்பு ..

இதுவே பிரமாதம்..

Radhakrishnan said...

மிக்க நன்றி சூரியன் அவர்களே.

தேவன் said...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

சும்மா ஏதோ வலையுலக நண்பர்கள்-னு சொல்லிக்காம, வள்ளுவரின் இந்த வரிகள் போல அமையட்டும்.

வாழ்த்துக்களுடன்.

Radhakrishnan said...

மிகவும் சரியாகச் சொன்னீர்கள். அவ்வாறே அமைய இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா.