Tuesday 18 August 2009

ஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்?

ஆன்மிகம் என்றாலே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்குமளவிற்கு இன்றைய ஆன்மிக நிலை பலரை உள்ளாக்கியிருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய விசயம். அப்படி என்னதான் இந்த ஆன்மிகம் செய்தது, செய்து கொண்டிருக்கிறது?

நல்லதை வேண்டாம் என சொல்லுபவர் உண்டோ உலகில்? தமக்கேனும் இல்லாது போனாலும் பிறருக்கேனும் நன்மை வாய்த்திட வேண்டும் என வாழ்ந்த/வாழும் புண்ணியர்கள் நிறைந்த, நிறைந்திருக்கும் பூமியல்லவா இது. இதைத்தான் ஆன்மிகம் செய்ய வந்தது, இன்னும் சிலரால் செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன கதை உண்டு. நீங்கள் அனைவரும் அறிந்திருக்கவும் கூடும். ஒரு ஐந்து வயது சிறுவன் சாய்வு நாற்காலியில் எப்பொழுதும் சென்று அமர்ந்திருப்பான். சாப்பிடுவது, உறங்குவது, உட்கார்வது என இதுதான் அவனது வேலை. எப்பொழுதும் ஓய்வு தான். அவனை அவனது தாத்தா

''ஏன் இப்படி எப்பப் பார்த்தாலும் இப்படி இருக்க'' எனக் கேட்பார்.

அதற்கு அவன்,

''என்ன செய்யனும் தாத்தா'' என்பான்.

''நீ படிக்கனும், வேலைப் பார்க்கனும், கல்யாணம் பண்ணனும், குழந்தைக பெறனும், என்னைப் போல தாத்தா ஆகனும், அப்புறம் இப்படி உட்காரனும்'' என்பார்.

''இதெல்லாம் செஞ்சிட்டு உட்காருரதுக்கு, இப்ப இருந்தே உட்கார்ந்தா என்ன தப்பா தாத்தா'' என்பான் அந்த சிறுவன்.

தாத்தா விழிப்பார். இந்த தாத்தா நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம், அது அவரவர் விருப்பம்.

இதுதான் வாழ்க்கை. ஒன்றை பற்றிக் கொண்டு செய்தலும் சரி, பற்றிக்கொள்ளாமல் இருத்தலும் சரி, முடிவில் அத்தனை வித்தியாசம் ஒன்றும் இருக்கப்போவதில்லை. பேசாமல் சாதித்த இரமணரும் சரி, பேசி சாதித்த விவேகாநந்தரும் சரி! ஒவ்வொருவருக்கு ஒரு திசை, ஒவ்வொருவருக்கு ஒரு அனுபவம்.

ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. அந்த உணர்வினை வெளிக்காட்டுதலின் பொருட்டு எழுந்ததே அத்தனை வேதங்களும், சத்தியங்களும், தர்மங்களும், நெறிக்கலைகளும், பாடல்களும், புராணங்களும் என்ற கருத்தும் எனக்கு உண்டு. என்னவொரு பிரச்சினை எழுந்தது எனில் எழுதியவர் தன்னை முன்னிலைப்படுத்தியதின் விளைவு பிறர் அந்த எழுத்துக்களை கொஞ்சம் சந்தேக விழிகளுடன் பார்க்கத் தொடங்கினர் எனலாம்.

ஆன்மிகத்தைப் பொதுப்படுத்தி எழுதியவர் எவரேனும் உண்டு எனில் உண்டு, மெளனத்தை மொழியாக்கிக் கொண்ட ஞானிகள். அந்த மெளன மொழியை கற்றுக்கொண்டவர்களும் உண்டு. ஆன்மிகம் பற்றி எழுதியதை, எழுதப்பட்ட விதத்தை கண்டு மெய்மறந்து ரசிப்பேன், பாடப்பட்ட பாடல் எல்லாம் படிக்கும்போது எத்தனை திறமை என உள்ளூர வியந்து கொள்வேன். அது எந்த அடையாளம் கொண்ட எழுத்தாக இருந்தாலும் சரி, எந்த ஒரு இலக்கை சுட்டுவதாக இருந்தாலும் சரி, ரசிப்பதும், விளங்கிக் கொள்வதும் தான் எனக்கு வேலை. இங்கேயும் என்னை முன்னிலைப்படுத்துவதன் காரணம் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்றாக இருக்கலாம் என்பதேயாகும்.

மேலும் ஒன்றை விலக்கிட ஓராயிரம் காரணங்கள் இருந்தாலும், ஒன்றைச் சேர்த்துக் கொள்ள ஒரு காரணம் போதும், ஆனால் அந்த காரணமும் ஆன்மீகத்தில் இல்லாதிருப்பது போன்று ஆகிவருகிறது இன்றைய காலகட்ட சூழல்கள்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, என்னிடம் எவரேனும் எதையும் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லையா? எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று மட்டுமே சொல்லிவிடுவேன். என்ன காரணம் எனக் கேட்டால் பிடித்திருக்கிறது அதனால் பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை அதனால் பிடிக்கவில்லை என சொல்லி நிறுத்திவிடுவேன்.

இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பி்டிக்கிறது என்றும், இன்ன காரணத்துக்குத்தான் இன்னது பிடிக்காமல் போகிறது என்றும் சொல்ல மிகவும் யோசிப்பேன். காரணம் சொல்லமாட்டாயா எனக் கேட்பவர்களுக்கு என்ன பெரிய காரணம் இருந்துவிடப் போகிறது என இருந்துவிடுவேன். இப்படித்தான் ஆன்மீகத்தினை அணுகத் தொடங்கினேன். ஆன்மீகத்திற்கு எந்த ஒரு காரணமும் அவசியமில்லை என்றே உறுதி கொண்டேன்.

ஒரு காரணமும் சொல்ல மாட்டேன்கிறாயே என என்னைக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காரணம் சொல்லிப் பழகிய காலமும் சரி, விசயங்களும் சரி, மனதில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தத் தொடங்கின. காரண காரியங்கள் விருப்பு வெறுப்புகளை உள்ளடக்கி வருவன. ஆன்மீகம் என்றாலே அமைதி என்ற கொள்கையை எனக்குள் வைத்துக் கொண்டு நான் எழுதுவதும் சரி, பேசுவதும் சரி, வாழும் முறையும் சரி பெரும் முரண்பாடாகத்தான் இருக்கின்றது. இந்த முரண்பாடு ஒரு காரணமோ? ஆன்மீகம் என்றாலே அமைதி என்பது ஒரு காரணமோ? காரணம் சொல்லாமல் வாழ முயல்வதே பெரிய விசயம் தான், ஆனால் காரணமின்றி காரியங்கள் இல்லை எனப் பழகிவிட்டோம் நாம்.

மேலும் நோய் இல்லாத உடம்பைத்தான் இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் எனவும் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிகாலத்தில் நோய் என்பது பாவ புண்ணியங்களின் அடிப்படையில் வந்த விசயம் எனக் கருதப்பட்டு அவ்வாறே இன்றும் சில இடங்களில் சொல்லப்பட்டு வருகிறது என எண்ணுகிறேன். நோய் வந்தால் சமூகத்திலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்தார்கள், இன்று கூட சில தொற்று நோய் உடையவர்களை தனித்து இருக்கச் சொல்வதுண்டு. அதேவேளையில் ஏன் நோய் வருகிறது என இவர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தி அதை தீர்க்க வந்தார் ஒருவர், அவரையும் அன்றைய சமூகம் விட்டுவைக்கவில்லை. அவரை கேலி பண்ணியது, உதாசீனம் செய்தது. ஆனால் அவர் போராடி வெற்றி பெற்று மருந்தினை கண்டுபிடித்தார். ஹும், நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படும்பாடு இருக்கிறதே, இது எந்த பாவ புண்ணியத்தில் சேரும் எனத் தெரியவில்லை.

'நோய் கொல்லும் மருந்தினை உட்கொண்டு
மெய் வளர்க்கும் நிலையது கொண்டபின்
மெய்ப்பொருள் உன்னை மனமேற்றி வைத்திட
உன்மனம் சம்மதம் தந்தாய் இறைவா'

எனும் கவிதையை எழுதியது உண்டு. ஆன்மிகம் என்றாலே கசக்கும் பொருளாகிப் போனது பலருக்கு. தீண்டத்தகாத விசயமாக ஆன்மிகம் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையை ஏற்படுத்த உதவிய பல சடங்குகள் சம்பிராதயங்கள் ஆன்மிகத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவை. ஆன்மிகத்தை இந்த சடங்குகள் சம்பிராதயங்களிலிருந்து விலக்கிப் பார்த்தால் அது ஒரு அருட்பெருஞ் சுவையாகத் தெரியும். ஆன்மிகத்திலிருந்து விசயங்களைக் கற்றுத் தெளிதல் எளிது. வேறுபாட்டினைப் பார்த்தால் எப்படி ஒற்றுமை கண்ணுக்குத் தெரியும்? மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை என்பதை அறிந்து கொள்வோம்.

இப்பொழுது சிந்தியுங்கள், ஆன்மிகம் என்றால் ஒதுங்கிப் போவோரா நீங்கள்?

7 comments:

வால்பையன் said...

ஆன்மீகம் என்பது வாழும் கலை தானே!

நான் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறேன்!

Robin said...

//ஆன்மிகம் ஒரு உணர்வு.// - உண்மை.

//மதம், கடவுள்கள் எல்லாம் ஆன்மிகத்துக்குத் தேவையில்லாதவை// - கடவுள் இல்லையேல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் கருவி.

When it is high time said...

Your question is: Why does anmikam (meaning of this word, as used by you, is confusing) put off people today, unlike in the past?

Instead of answering the question in simple terms, you have rambled so much that I dont understand what is in your mind - except at the end, where, the meaning of anmikam, according to you, appears to be one that goes beyond religion and the god the religions point to. You want that anmikam to be detached from religion, god, and rituals and ceremonies. But this does not answer the question: why is anmikam unpopular today?

Please write clearly.

Radhakrishnan said...

1. //வால்பையன்//ஆன்மிகம் என்பது முறையாக வாழும் கலை. மிக்க நன்றி வால்பையன் அவர்களே.

2.//ராபின்//அப்படியெனில் ஆன்மிகம் என்றால் என்னவெனத் தெரியாத பிற உயிரினங்களுக்கும், கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்ல வருகிறீர்களா? மிக்க நன்றி ராபின்.

3.//பட்டாக்கத்தி மீன்//நிச்சயமாகத் தெளிவாக எழுதிட முயற்சி செய்கிறேன். ஆனால் ஒரு விசயத்தை மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டால் அதை நீங்கள் சிந்திக்க வாய்ப்பின்றி போகும், அந்த விசயத்தைப் பற்றிய இன்னொரு கோணம் தெரியாமலே போய்விட வாய்ப்புண்டு, எனவே பிறர் சொல்வதில் இருந்து ஒரு தெளிவு வேண்டிட நீங்களும் சிந்தனை செய்ய வேண்டும்.

நீங்கள் சொன்னதில் இருந்து ஒரு தெளிவு வேண்டி விரைவில் இன்னொரு இடுகை இடுகிறேன். மிக்க நன்றி ஐயா.

When it is high time said...

Two excellent points that come from your feedbackers, but your responses to them are inadequate in the case of one; and categorical in the case of the other.

Let me adumbrate:

1. Vaalpayan says Anmikam is nothing but life style or an art of living.

2. Robbin says it is nothing but about God and the relationship between him and Him.

You agreed with the first statement; and question the second.

May I suggest that you write another blog post wherein,

i) Define anmikam, as you want or understand

ii) then proceed to respond to Robin - no matter if you disagree with him in toto. If your defintion is spelt out, the disagreement will be logical with that definition, isn't ? If not, you will be contradicting yourself.

I shall read the blog post, as I am eager to know how you are going to tackle the Robbin's; and how you accept the VP's - I mean, logically!

You have a right to your conclusion; but let us know how the conclusion was arrived at - LOGICALLY!

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா, விரைவில் எழுதுகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் நிச்சயம் உங்களளவுக்கு ஆயந்து முடிவெடுக்கக் கூடிய நுண்ணறிவு கொண்டில்லை. என் ஆத்மீக அனுபவத்தில் இன்றைய ஆத்மீகம் என்பது வெறும் சடங்குகளால் கட்டி எழுப்பப்பட்டது.சாரத்தை விட்டுவிட்டு சக்கையைக் கட்டி அழுகிறது.
அன்பே சிவம்- இது ஆத்மீகம்; ஆனால் நம் ஆத்மீகம் இப்படி வாழவிடுகிறதா? சகமனிதனை மனிதனாகவாவது மதிக்க விடுகிறதா? சக மனிதனைச் சந்திக்கும் போது ,இவன் மனிதனா? என்பதை ஆராயுமுன் ,நாம் ஏதேதோ ஆராயப் பயிற்றப்பட்டுள்ளோமே!
ஆத்மீகம் தானே இதைச் செய்துள்ளது; எனும் முடிவுக்கு என் போல் பாமரன் வருவதைத் தவிர்க்க
வழியுண்டா? விடுவார்களா?
ஆத்மீகத்தைத் தொழிற்கூடமாக்கி வெகுநாளாகிவிட்டது. அதனால் அது என்போன்றோற்க்கானதில்லை
எனும் முடிவுக்கு நான் வந்து விட்டேன்.பலர் வந்து விட்டார்கள் போல்தான் உள்ளது.
அதனால் சடங்குகளால் விலங்கிடப்பட்ட ஆத்மீகத்தைக் கண்டு நான் பயப்படுகிறேன்.ஒதுங்குகிறேன். அதனால் பிடிக்காததற்கு என் சிற்றறிவுக்கு எட்டிய காரணமாக இதையே கூறி விலகுகிறேன்.
இது தவறா?