Wednesday 26 August 2009

மற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.

மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது வலைப்பூ எழுதுபவர்களின் சிந்தனை. ஒருவர் மற்றொருவரை அடித்தால் மற்றொருவர் அடுத்தவரை தொடர்ந்து அடிக்க வேண்டும் எனும் விளையாட்டு போல ஒருவர் ஒரு கருத்தை வைத்து எழுதிட அதே கருத்துடைய விசயத்தை தங்களது பாணியில் எழுதி ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை முன் வைக்கிறார்கள்.

பெரும்பாலானவை தொலைந்து போன விசயங்களுடன் ஒட்டிய விசயங்களை முன்னிலைப்படுத்திய விதம் மிகவும் அருமையாக இருந்தது. பொதுவாக நம்மிடம் இருக்கும் பொருளுக்கு நாம் அத்தனை மதிப்பு தருவதில்லை, நம்மிடம் எப்பொழுது ஒன்று தொலைந்து போகிறதோ அது குறித்த சிந்தனை அதிகமாகவே நமக்கு இருக்கும். இது இயல்பாகவே நடப்பது. இதுகுறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் 'மொக்கை' என இடுகைகள் இடப்பட்டதும் சரி, 'கவுஜ, கவிதை, அனுபவம்' என இடப்பட்ட இடுகைகளும் சரி ஒருவருடைய எண்ணத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது குறிப்பிடப்பட்ட விசயத்தைப் பற்றி சற்றும் யோசிக்காமல் திடீரென என்ன எண்ணத் தோன்றுகிறதோ அதை வைத்து எழுதப்படும் நான்கைந்து வரிகள் எனலாம்.

இதையே சற்று நேரம் சிந்தித்து எழுதினால் வரும் சந்ததிகளுக்கு நல்லதொரு விசயத்தையும், எப்படிப் போராடி வெற்றி பெற்றோம் என்கிற நல்லதொரு எண்ணத்தையும் விதைக்கும் வண்ணமாக எழுத்து இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிடுகிறது, இப்போது எழுதப்பட்டவை எல்லாம் பயனற்றவை என கருத இயலாது. இது ஒரு விளையாட்டு என கொள்ளலாம். மூளை வளர்ச்சி அடையும் வகையில் கேளிக்கை செய்வோம் என்றுதான் பாடல் கூட இயற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் இவை திடீர் சிந்தனையின் வெளிப்பாடுகளே.

2003ல் தொடங்கப்பட்ட நுனிப்புல் பாகம் 1 எனும் நாவல் எழுதி முடிக்க மூன்று வருடங்கள் மேல் ஆனது. அதனை சொந்த செலவில் அச்சடித்து வெளியிட்டோம். இலண்டனில் உட்கார்ந்து கொண்டு எப்படிச் செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டும் என புரியாமல் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தில் அதிகமான எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், வார்த்தைப் பிழைகள். புத்தகத்தைத் திரும்பிப் படிக்கும்போது மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. முதலில் எழுதப்படுவது நன்றாக இருந்தால்தான் பின்னால் எழுதப்படுவது இலகுவாக அனைவரையும் அடையும் என்றிருந்த நிலையை உணராமல் பல மாதங்கள் பின்னரே வெளிவந்தது அந்த நாவல்.

இந்த நாவலை வெளியிட எங்கு கேட்டாலும் உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையாகத்தான் இருந்தது. நூலகங்கள் எடுத்துக் கொள்ள வழி செய்ய முயற்சித்து கொண்டிருக்கையில் மனுவுக்கான இறுதிநாள் தவறிப்போனது. எழுதிய நான் இல்லாமலே நாவலை வெளியீடு செய்து பத்திரிகைகளுக்கு எல்லாம் செய்திகள் கொடுத்து பத்திரிகைகளில் இதுகுறித்து வெளிவந்த விசயம் மிகவும் மகிழ்வாக இருந்தது. இருப்பினும் நாவலை எப்படி எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது எனப் புரியவே இல்லை.

நண்பர்களின் முயற்சியினால் பல புத்தகங்கள் பலரைச் சென்றடைந்தன. ஆனால் மொத்தமாக எவரும் எடுத்து விற்பனை செய்ய முன்வரவில்லை, முறையாக நாங்கள் முயற்சிக்க வில்லை. பின்னர் பல்லவி வெளியீட்டாளரிடம் தொடர்பு கொண்டு நூலகங்களுக்கு மனு செய்தோம். நூலகங்கள் நாவலை எடுத்துக்கொண்டால் சரி, அப்படி இல்லையெனில் விற்பனை செய்து தருவதாக அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள்.

நாட்கள் சென்று கொண்டே இருந்தது, எதுவும் ஒரு முடிவு கிடைத்தபாடில்லை. நூலகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட மகிழ்ச்சி செய்தி வந்தாலும், நூலகங்களிலிருந்து புத்தகங்கள் அனுப்பச் சொல்லி முறையான கடிதம் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருந்த நம்பிக்கையும் தொலைந்து போன நேரத்தில் நேற்று முன் தினம் நுனிப்புல் பாகம் 1 தனை அனுப்பச் சொல்லி கடிதம் வந்து சேர்ந்தது. அதைப் பார்க்கையில் நாவல் வெளியிட வேண்டும் எனும் சாதாரண ஆசை ஒரு வித்தியாசமான திசையில் பயணித்து ஒரு இலக்கை அடைந்துவிட்டதை எண்ணும்போது இப்பொழுது எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் எனது நாவலுக்கும் ஒரு இடம் கிடைத்துவிடும், மேலும் கொல்கத்தா, மும்பாய், டில்லி நகர நூலகங்களுக்கும் இந்த நாவல் பயணிக்கிறது என நினைக்கும் இப் பொழுது சிறப்பாகவே இருக்கிறது. எப் பொழுதும் சிறப்பாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் பிறக்கிறது.

10 comments:

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

தினேஷ் said...

வாழ்த்துக்கள் .. உங்கள் நுனிப்புல் நாவல் பல நாவல்களின் தொடர்ச்சிக்கு அ வாக அமையட்டும்

Vidhoosh said...

சார், நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும், அடிப்பதற்காக (கிண்டல் செய்வது) என்று நான் And Now எழுதவில்லை. மற்றவர்களும் அப்படித்தான் என்றே நினைக்கிறேன்.

நான் பணியிலிருந்த போது லஞ்ச் சாப்பிடும் போது கூட இம்மாதிரி சின்னச்சின்ன வார்த்தை / கவிதை விளையாட்டுக்கள் செய்து சத்தமாக சிரித்து மகிழ்வோம். எல்லாவற்றையையும் purpose-சோடு செய்யவேண்டும் என்பது நியாயம்தான். ஆனால், வாழ்க்கை ஒரே மாதிரி monotonous ஆகும் போது, இம்மாதிரி சில மாற்றங்களும் தேவையாக இருக்கிறது, கோடை மழை போல.. என்று வைத்துக் கொள்ளலாமே.

நுனிப்புல்-லை ஆன்லைன் release செய்யுங்களேன். நான் படித்ததில்லை. உங்களது பதிவில், நான் ஆண்டாளுக்கு கல்யாணம் மற்றும் வேதநூல் படித்திருக்கிறேன்.

-வித்யா

இந்த ராம் உங்களை விடமாட்டார் போலருக்கே..

குடந்தை அன்புமணி said...

//சார், நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும், அடிப்பதற்காக (கிண்டல் செய்வது) என்று நான் And Now எழுதவில்லை. மற்றவர்களும் அப்படித்தான் என்றே நினைக்கிறேன்.

நான் பணியிலிருந்த போது லஞ்ச் சாப்பிடும் போது கூட இம்மாதிரி சின்னச்சின்ன வார்த்தை / கவிதை விளையாட்டுக்கள் செய்து சத்தமாக சிரித்து மகிழ்வோம். எல்லாவற்றையையும் purpose-சோடு செய்யவேண்டும் என்பது நியாயம்தான். ஆனால், வாழ்க்கை ஒரே மாதிரி monotonous ஆகும் போது, இம்மாதிரி சில மாற்றங்களும் தேவையாக இருக்கிறது, கோடை மழை போல.. என்று வைத்துக் கொள்ளலாமே.

நுனிப்புல்-லை ஆன்லைன் release செய்யுங்களேன். நான் படித்ததில்லை. உங்களது பதிவில், நான் ஆண்டாளுக்கு கல்யாணம் மற்றும் வேதநூல் படித்திருக்கிறேன்.

-வித்யா //

வித்யாவின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஒரே மாதிரி போய்க் கொண்டிருக்கும்போது சற்று ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வோமே.

உங்கள் நாவல் வெளியீட்டு முயற்சி வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றிகள்.

Radhakrishnan said...

1. அடடா, மிக்க நன்றி ராம் அவர்களே.

2. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சூரியன் அவர்களே.

3. நீங்கள் சொல்வது உண்மையே, சில மாற்றங்கள் நிச்சயம் அவசியம். எழுதப்பட்டவைகள் படித்து மிகவும் ரசித்தேன். அனைத்தும் நன்றாக இருந்தது. இப்பொழுதே நுனிப்புல் தனை வெளியிடுகிறேன், தினமும் ஒரு பதிவாக. ஆண்டாளுக்கு கல்யாணம், வேதநூல் படித்தமைக்கு மிக்க நன்றி வித்யா அவர்களே.

ஹா ஹா, ராம் எவரெல்லாம் விட்ஜெட் இணைக்காமல் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று இணையுங்கள் என உரிமையுடன் கோருகிறார். நல்லது என செயல்படுத்தச் சொல்லும் அவரது பணி பாராட்டத்தக்கது.

அன்புடன் அருணா said...

//எப் பொழுதும் சிறப்பாகவே இருக்கும் எனும் நம்பிக்கையும் பிறக்கிறது. //
கண்டிப்பாக சிறப்பாவே இருக்கும்!

Radhakrishnan said...

மிக்க நன்றி குடந்தை அன்புமணி அவர்களே. ஆம், நீங்களும், வித்யா அவர்களும் குறிப்பிட்ட கருத்தில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை, ஒரு விசயத்தைச் சற்று வேறுவிதமாகப் பார்த்ததின் விளைவாக எழுந்த எழுத்துதான் இந்த இடுகை.

Radhakrishnan said...

நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு மிக்க நன்றி அருணா அவர்களே.

தேவன் said...

நாவல் சிறப்பு பெற்று நல்வளம்,வெற்றிகள் சேர வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கேசவன் ஐயா.