இறந்து போகும் நிலையை தினமும்
மறந்து விடாமல் நினைவில் இருத்தி
துறந்து விடச் சொன்ன விசயங்களை
பறந்து விடாமல் பற்றியிருப்பதை அறிவாய்.
போகும் என அறிந்து கொண்டு
வேகம் குறைப்பதில் அக்கறை இல்லாது
தேகம் தேய தேய உழைத்தொழிந்து
சாகும் நிலை வரும்வரை சகித்திருப்பாய்.
ஓடிய கால்கள் நிற்பதை மறக்கும்
தேடிய கண்கள் கிடைத்தும் தேடும்
வாடிய மனம் கண்ட இப்பிறவியில்
நாடிய உன்னையும் நஞ்சித்து வைக்கும்.
காலம் தொடரும் உன் தொடர்ச்சியில்
பாலம் கட்டியே இக்கரை நின்று
ஓலம் இட்டு சரியும் உயிர்களில்
கோலம் போட்டு களித்திருப்பது நீயாவாய்.
அமைதியில் மனதை இறுக்கி வைத்து
சுமைதீரும் என்றே உன்சுமை ஏந்தினாலும்
இமைமூடி இறந்ததும் உன்நினைவு அகலும்
உமை தழுவிடாது இருந்திடல் பிழையில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
-
எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மே...
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
2 comments:
ungal kavithai migavum azhagu. please visit my blog:
educations-educations.blogspot.com
thank you
மிக்க நன்றி , உங்கள் தளத்தைப் பார்வையிட்டேன், கற்றுக்கொள்ள நல்லதொரு தளம்.
Post a Comment