எங்கு இனியுன்னை தேடிக் கண்டிட
சங்கு சக்கரம் தாங்கிய உருவம்
நிலவுடன் புலித்தோல் போர்த்திய உருவம்
பலவும் கண்ணை மறைத்தது!
கொண்ட எண்ணத்தில் கீறல் விழுந்திட
அண்ட சாரம்சம் அனைத்தும் பறந்திட
உருவத்தில் உன்னை வைத்துப் பார்த்ததும்
பருவத்தில் தொலைத்த காதலிது.
யாருமில்லா இடம் நோக்கி நகர்ந்திட
நீரும் சோறும் தட்டிக் கழித்து
உடுத்திய உடையை கிழித்து எறிந்து
எடுத்த கோலம் கண்டாய்.
சுற்றுச் சுவர்கள் தெரிய மறுத்தது
பற்று பாசம் நினைவு வெறுத்தது
இருப்பாய் என்றே ஒளியின் வேகத்தில்
சுருக்கிக் கொண்டேன் உயிரை.
குலுக்கியதும் சில்லென குலுங்கியது குற்றுயிர்
உலுக்கியதும் சிதறி விழுந்தன உணர்வுகள்
அறைந்து சொல்லி உறைய வைத்தாய்
மறைந்து இருப்பேனென்றது புரிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...
No comments:
Post a Comment