Wednesday 14 July 2010

கோழிதான் முதலில் வந்தது

முதலில் வந்தது எது? கோழியா? முட்டையா?

விடை தெரியாத கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாய் அறிவியலாளர்கள் அறிவிப்பு.

முதலில் வந்தது கோழிதான் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு புரதம் (ஒவோக்லேடிடின் 17) முட்டை உருவாவதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்ததன் மூலம் இதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த புரதம் கோழியின் அண்ட செல்லில் மட்டுமே இருப்பதாலும், இந்த புரதம் பல வினைகளை செயல்படுத்துவதாலும் கோழிதான் முதல் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரதம் கால்சியம் கார்பனேட் தனை மாற்றி முட்டையின் ஓடுதனை உருவாக்குகிறதாம்.

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடை உண்டு. அந்த விடையையும் மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.

26 comments:

வால்பையன் said...

இன்று அறிவியல் சொன்னாலும் பல வருடங்களாகவே தர்க்க ரீதியாக கோழி தான் முதல் என்று நான் விவாதித்திருக்கிறேன்!

Radhakrishnan said...

:) அருமை அருண். தங்களைப் போலவே பலர் பல விசயங்களை சொல்லி இருந்தாலும், அவர்களால் நிரூபனம் செய்ய இயலாததால் பல வாதங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. வாதங்களில் உறுதியாய் இருந்து வென்றவர்கள் உண்டு. வாழ்த்துகள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பார்க்க

எது முதல் ... முட்டையா ? கோழியா

http://nanduonorandu.blogspot.com/2010/03/blog-post_23.html

கால்சியம் தான் தீர்மானிக்கும் என்பதில் என்னுடன் உடன்பட்டுள்ளனர்
எனினும் எனக்கென்னவே முட்டை தான் முதல்னு புரிபடுகிறது .
ஆனால் ,இதனை நிருபிக்க பல கோடிகள் செலவாகும்
என்பதால் கப்சிப் .
யாராவது ஸ்பான்சர் செய்தால் நிரூபிக்கலாம் .

Radhakrishnan said...

படித்தேன், ரசித்தேன். முட்டையை அடைகாக்க கோழி வேண்டுமே. :)

கோவி.கண்ணன் said...

இவை விடையற்ற கேள்வி, மரமா விதையான்னா ? மரம்னு சொல்ல முடியாது !

வட்டத்தில் எது துவக்கம் என்பதற்கு எப்படி விடையில்லையோ அது போன்று தான்.

என்னைப் பொருத்த அளவில் it exists அதாவது எதுவும் முதலில் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

:)

வால்பையன் said...

இல்லைங்க கோவி!

தன்னை தானே பிரித்து கொண்ட அணுவிலிருந்து, தனியாக ஒன்றை உருவாக்கிய அணி வித்தியாசப்பட்டது, அதாவது அது உருவத்தில் குறைவில்லாமல் இருந்ததது!

பரிணாமத்தில் விரிவாக பதிவிடுகிறேன்!

Karthick Chidambaram said...

Ippadi ellaam aaraiychi nadakkuthaaa ? Nerya kaasu irukku pola

Paleo God said...

ஏனுங் அப்ப சேவல்..?

:)

bro.danielpeter said...

அட என்னங்க புதுசா கண்டுபிடிச்சுட்டாங்க கிறிஸ்தவர்களின் வேதாகமத்தைப் படியுங்க! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோடியே! இதக் கண்டுபிடிச்சு எழுதியிருக்குங்க! (ஆதியாகமம் 1ம் அதிகாரம்.21,22) அத நம்புங்க முதல்ல நம்ப மறுக்கிறவங்க இப்பவாவது அந்த வேதாகமத்தை நம்புங்கன்னு கடவுள் சொல்வது,காதில் விழட்டும்.By danielpeter

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

Matangi Mawley said...

:) .... wow... :) one truth lesser to search now...


arumai....

கோவி.கண்ணன் said...

//இல்லைங்க கோவி!

தன்னை தானே பிரித்து கொண்ட அணுவிலிருந்து, தனியாக ஒன்றை உருவாக்கிய அணி வித்தியாசப்பட்டது, அதாவது அது உருவத்தில் குறைவில்லாமல் இருந்ததது!

பரிணாமத்தில் விரிவாக பதிவிடுகிறேன்!//

கடவுள் ஜோடி ஜோடியாக படைத்தார் என்னும் ஆப்ரகாமிய கோட்பாடுகளை ஏற்க வேண்டி இருக்கும், நான் ஒப்புக் கொள்வதில்லை.

கோவி.கண்ணன் said...

கோழிதான் முதலில் வந்தது என்றாலும் வந்தது பெட்டையா சேவலா ?
:)

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
இவை விடையற்ற கேள்வி, மரமா விதையான்னா ? மரம்னு சொல்ல முடியாது !

வட்டத்தில் எது துவக்கம் என்பதற்கு எப்படி விடையில்லையோ அது போன்று தான்.

என்னைப் பொருத்த அளவில் it exists அதாவது எதுவும் முதலில் என்கிற பேச்சுக்கே இடமில்லை.

:)//

முதல் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அந்த முதல் என்பது எது என்பது என கண்டுபிடிப்பதுதான் சற்று கடினம். வட்டத்தில் துவக்கம் என இல்லாமல் வட்டம் போட முடியாது. வட்டம் என்பதில் முதலும் முடிவும் ஒன்றாகி இருப்பதால் எது முதல் என அறிய வாய்ப்பில்லாமல் போவதுண்டு. ஆனால் முதல் என்றில்லாமல் இல்லை கோவியாரே.

மரமா? விதையா என்றால் விதை என எளிதாக சொல்லிவிடலாம். ஏனெனில் விதையில் தான் அனைத்து பரிமாணங்களும் கூடி இருக்கின்றன.

Radhakrishnan said...

//வால்பையன் said...
இல்லைங்க கோவி!

தன்னை தானே பிரித்து கொண்ட அணுவிலிருந்து, தனியாக ஒன்றை உருவாக்கிய அணி வித்தியாசப்பட்டது, அதாவது அது உருவத்தில் குறைவில்லாமல் இருந்ததது!

பரிணாமத்தில் விரிவாக பதிவிடுகிறேன்!//

அந்த அணுவின் மூலம் எது என்பதை கண்டுபிடிக்கும்வரையிலும், அணுவின் மூலத்தின் மூலம் எது என அறிந்து கொள்ளும்வரையில் பல விசயங்களை விளங்கபடுத்திக் கொள்வது கடினம் அருண். பரிணாமக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Radhakrishnan said...

//Karthick Chidambaram said...
Ippadi ellaam aaraiychi nadakkuthaaa ? Nerya kaasu irukku pola//

இதற்கே இப்படி சொல்லிவிட்டீர்களே கார்த்திக். எதற்கு வீண் செலவு என சில ஆராய்ச்சிகள் எரிச்சல் ஏற்படுத்துபவைகள், ஆனால் அந்த ஆராய்ச்சிகளினால் பல விசயங்கள் வெளித்தெரியும். அவரவருக்கு முக்கியத்துவம் வேறுபடுகின்றன.

Radhakrishnan said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஏனுங் அப்ப சேவல்..?

:)//

முட்டையில் இருந்து வந்தது என உறுதியாக சொல்லிவிடலாம் ஷங்கர். :)

Radhakrishnan said...

//MERCY said...
அட என்னங்க புதுசா கண்டுபிடிச்சுட்டாங்க கிறிஸ்தவர்களின் வேதாகமத்தைப் படியுங்க! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோடியே! இதக் கண்டுபிடிச்சு எழுதியிருக்குங்க! (ஆதியாகமம் 1ம் அதிகாரம்.21,22) அத நம்புங்க முதல்ல நம்ப மறுக்கிறவங்க இப்பவாவது அந்த வேதாகமத்தை நம்புங்கன்னு கடவுள் சொல்வது,காதில் விழட்டும்.By danielpeter//

எப்படியாவது இந்த வேதகாமங்களைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும். எல்லாமே எழுதப்பட்டு இருப்பது போல் காண்பிக்கப்படும் தோற்றம் பிரமிக்க வைக்கிறது டேனியல்.

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
கோழிதான் முதலில் வந்தது என்றாலும் வந்தது பெட்டையா சேவலா ?
:)//

ஆருடம் சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம் கோவியாரே. நிச்சயம் கோழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். மரபணுக்கள் கோழியைத்தான் உருவாக்கி இருந்திருக்க வேண்டும்.காலப்போக்கில் ஓருயிர் இனப்பெருக்கம் ஈருயிர் இனப்பெருக்கம் என மாறி இருக்கலாம். இது பற்றிய பரிணாமம் பல விசயங்களை உள்ளடக்கி இருக்கிறது. அதுகுறித்து நிச்சயம் பலர் ஆராய்ச்சி செய்து இருப்பார்கள், தேடலாம்.

கோவி.கண்ணன் said...

//வட்டத்தில் துவக்கம் என இல்லாமல் வட்டம் போட முடியாது.//

வட்டம் நாம் கையால் வரையும் வட்டம் எனபதாக நினைத்துக் கொண்டு பதில் சொன்னதாக நினைக்கிறேன். இயற்கையின் வட்டங்களில் துவக்கப் புள்ளி என்று எதுவும் கிடையாது, மேலிருந்து ஒரு துளி நீர் தெளிவான தண்ணீரில் விழும் போது ஏற்படும் வட்டம், அவற்றில் துவக்கப் புள்ளி என்று எதுவும் கிடையாது. ஒளிக் கதிர்களினால் ஏற்படுத்தப்படும் வட்டங்களுக்கு துவக்கப் புள்ளிகள் கிடையாது. சூரியன் நிலவு ஆகியவற்றைச் சுற்றிலும் கூட சில சமயம் வட்டங்கள் இருக்கும், இவை எல்லாம் ஆரம் வைத்து துவங்கி முடிந்து இருக்காது, புள்ளியில் இருந்து விரிந்தவை அல்லது ஒரே சமயத்தில் வட்டமாக படர்ந்தவை.

கோழி - முட்டை - கோழி - முட்டை - இவை சங்கிலித் தொடர், பிரபஞ்சத் தோற்றம் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல் இவற்றில் கோழி தான் முதலில் வந்திருக்கும் என்பதை அறிவியல் படிச் சொன்னாலும் தவறு தான். இவை பார்முலாக்கள் அல்ல மாறாமல் இருக்க, கொள்கைகள் தான், (முன்)முடிபுகளில் அறிவியல் நிலை மாறக் கூடிய கூற்றுகளையும் கொண்டது தான்.

வால்பையன் said...

எதோ ஒன்னு தான் படைச்சதுன்னு உறுதியா நம்புறிங்களா கோவி!
அது தானே படைப்புவாத கொள்கை!

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...

வட்டம் நாம் கையால் வரையும் வட்டம் எனபதாக நினைத்துக் கொண்டு பதில் சொன்னதாக நினைக்கிறேன். //

உண்மைதான், அப்படி நினைத்துதான் பதில் எழுதினேன் கோவியாரே.

//கோவி.கண்ணன் said...

இயற்கையின் வட்டங்களில் துவக்கப் புள்ளி என்று எதுவும் கிடையாது, மேலிருந்து ஒரு துளி நீர் தெளிவான தண்ணீரில் விழும் போது ஏற்படும் வட்டம், அவற்றில் துவக்கப் புள்ளி என்று எதுவும் கிடையாது. ஒளிக் கதிர்களினால் ஏற்படுத்தப்படும் வட்டங்களுக்கு துவக்கப் புள்ளிகள் கிடையாது.//

விழும் துளிதான் துவக்கம். அந்த ஒளிக்கதிர்தான் துவக்கம். ஒரு புள்ளியிலிருந்துதான் வட்டம் விரிவடைந்து இருக்கிறது என்பதுதான் சரியாகும்? அந்த வட்டத்தின் தொடக்கம் ஒரு புள்ளிதான்.

// கோவி.கண்ணன் said...

சூரியன் நிலவு ஆகியவற்றைச் சுற்றிலும் கூட சில சமயம் வட்டங்கள் இருக்கும், இவை எல்லாம் ஆரம் வைத்து துவங்கி முடிந்து இருக்காது, புள்ளியில் இருந்து விரிந்தவை அல்லது ஒரே சமயத்தில் வட்டமாக படர்ந்தவை.

கோழி - முட்டை - கோழி - முட்டை - இவை சங்கிலித் தொடர், பிரபஞ்சத் தோற்றம் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல் இவற்றில் கோழி தான் முதலில் வந்திருக்கும் என்பதை அறிவியல் படிச் சொன்னாலும் தவறு தான். இவை பார்முலாக்கள் அல்ல மாறாமல் இருக்க, கொள்கைகள் தான், (முன்)முடிபுகளில் அறிவியல் நிலை மாறக் கூடிய கூற்றுகளையும் கொண்டது தான்.//

நீங்கள் குறிப்பிட்ட அந்த புள்ளி என்பதைத்தான் தொடக்கம் என கொள்ள வேண்டும் என்பது சரிதானே. வட்டம் உருவாவதற்கு ஒரு தொடக்கம் இருந்து இருக்கிறது என்பதை மறுக்கவியலாது அல்லவா?

இதுதான் உண்மையான விடை என நமக்கு தெரிந்தால் நமது அறிவு அங்கே நின்று விடும், ஆனால் தொடர்ந்து தொடக்கத்தை தேடும் நிலையைத்தான் அறிவியல் எடுத்துக் கொண்டு உள்ளது. இத்துடன் இவர்கள் ஆராய்ச்சிதனை நிறுத்தமாட்டார்கள், மேலும் தொடர்வார்கள். விடையை மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.

Radhakrishnan said...

//Matangi Mawley said...
:) .... wow... :) one truth lesser to search now...


arumai....//

நான் அப்படி கருதவில்லை.

கோவி.கண்ணன் said...

//
விழும் துளிதான் துவக்கம். அந்த ஒளிக்கதிர்தான் துவக்கம். ஒரு புள்ளியிலிருந்துதான் வட்டம் விரிவடைந்து இருக்கிறது என்பதுதான் சரியாகும்? அந்த வட்டத்தின் தொடக்கம் ஒரு புள்ளிதான்.//

அது துவக்கப் புள்ளி இல்லை, மையப்புள்ளி, துவக்கமும் மையமும் ஒன்று அல்ல

Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...

அது துவக்கப் புள்ளி இல்லை, மையப்புள்ளி, துவக்கமும் மையமும் ஒன்று அல்ல//

அட, புதிய விசயம் கற்றுக்கொண்டேன். வட்டத்திற்கு அந்த மையப்புள்ளி தொடக்கம் என்பதால் துவக்கபுள்ளி என கருதலாம் என நினைத்துவிட்டேன்.

கோவி.கண்ணன் said...

//வால்பையன் said...

எதோ ஒன்னு தான் படைச்சதுன்னு உறுதியா நம்புறிங்களா கோவி!
அது தானே படைப்புவாத கொள்கை!
//

நான் அப்படிச் சொல்லவில்லை. என்னைப் பொருத்த அளவில் துவக்கம் முடிவு எதுவும் கிடையாது. அனைத்தும் நிலைத்திருப்பவை. அவற்றின் வெவ்வோரு தோற்றங்களை நாம் பார்க்கிறோம். விதையும் மரமும் ஒரே உயிர்த்தன்மையின் இரு வடிவங்கள், ஒன்று ஒடுக்கம் மற்றொன்று சூழலால் ஏற்படும் விரிவு.

மாபெரும் பூகம்பம், இயற்கைச் சீற்றம் இதில்
நாம் அழிந்துவிட்டதாக நம்பும் டயனசர்கள் கூட எதாவது ஒரு பனிமலையில் அடிவாரத்தில் அமிழ்ந்திருக்கும் அதன் முட்டைகளில் இருந்து வெளிவரலாம்.