Friday 30 July 2010

கம்யூனிசமும் கருவாடும் - 1

மதார் அவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க கம்யூனிசம் பற்றி ஒரு முழு விளக்கம் வெகு விரைவில் தரப்படும். அதனை கம்யூனிஸ்ட்கள் தந்தால் ஒருதலை பட்சமாக கருதப்படும் என்பதால் இது குறித்து விபரமாகவே எழுதுகிறேன். அதனால் கம்யூனிஸ்ட்கள் சற்று பொறுத்துக் கொள்க.

நான் கம்யூனிசவாதி கிடையாது, இந்த வாதி எனப்படும் வியாதி எதுவும் எனக்கு கிடையாது. பலருக்கு கம்யூனிசம் என்றாலே வேப்பங்காயாக கசப்பதற்கு காரணம் அரை குறையுடன் தெரிந்து வைத்து கொண்டு தன்னை கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்பவர்களும், கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்துடன் வாழப் பழகி கொண்டதும், கம்யூனிசம் என்றாலே உலகில் சமத்துவம் நிலவும் என்கிற பொய்யான கோட்பாடும்தான் முழு முதற் காரணம்.

பொருளாதாரத்தை மையப்படுத்தி பல புரட்சிகள் உலகில் ஏற்பட்டு இருக்கின்றன. முதலாளிகள், தொழிலாளிகள் எனப்படும் பிரிவினையை கண்டு குமுறியவர்கள் பலர்.

கம்யூனிசம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை ஆணி வேர். ஆனால் புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த கம்யூனிசம் கேலிப் பொருளாகிப் போனது. ஜனநாயகம் என்பதன் அடிப்படையே கம்யூனிசம் தான். எத்தனை பேருக்கு கம்யூனிசம் பற்றி ஒழுங்காக தெரியும்?

கம்யுனிட்டி (சமூகம்) பற்றிய சிந்தனை மட்டுமே கம்யூனிசத்துக்கு உண்டு. கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுது மனிதர்கள் பார்வை எப்படி இருக்கிறது?

(தொடரும்)

5 comments:

ஒசை said...

கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது////

நாங்க உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமேன்னுலா கூப்பிடுறோமே.

sathishsangkavi.blogspot.com said...

நம்ம ஊர்ல எப்போதும் தம்பி என்று தான் அன்பு பரிமாறுவோம்....

Radhakrishnan said...

அவையெல்லாம் உறவு முறைகளை குறிப்பிடுபவை, தோழமையை குறிப்பிடுவது கம்யூனிசத்தில் என அர்த்தம் கொள்ள வேண்டும் :). நன்றி ஓசை மற்றும் சங்கவி.

கிருஷ்ண மூர்த்தி S said...

//வலைப் பதிவுகளில் கம்யூனிசம் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் அல்லது திட்டுகிறவர்கள் எவரிடமும் நீங்கள் கம்யூனிசத்தைப் பற்றி மட்டும் அல்ல, வேறு எந்த இசத்தையும் புரிந்து கொள்ள முடியாது. உங்களுடைய தேவைகளின் அவசரம் தான் நீங்கள் சார்பு நிலை எடுக்கும் இசமாகிறது. அது எம்ஜியார் பேசியஅண்ணாயிசமாக இருந்தாலுமே கூட!

நீங்கள் சொல்கிற மாதிரி நடுநிலைமை என்பது எப்போதுமே இருந்ததில்லை. இந்த உலகம் நேரெதிரான இருவகை முரண்பாடுகளுக்கிடையில் தான் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கிறது.//

இது மதார் எழுதியதற்குப் பதிலாக இங்கேயும்!

Radhakrishnan said...

நன்றி ஐயா. மிகவும் சரிதான்.