Tuesday 6 July 2010

பதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்

எழுத்து வேற, அதை எழுதறவங்க வேற அப்படினு பிரிச்சி பார்க்க சொன்னாலும் சொன்னாங்க. ஆனா என்னால எழுத்து வேற அதை எழுதுறவங்க வேற அப்படினு இனம் பிரிச்சி பார்க்கறதுல ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.  கற்பனை அப்படிங்கிறதுல பாதிக்கு மேல உண்மை இருக்கத்தான் செய்யும், எதுக்குனா கற்பனைனு எழுதப்படற விசயம் மாதிரியே வாழறவங்க இருக்காங்க இந்த உலகத்தில.

நல்ல விசயங்கள் எழுதுறாங்க. நல்ல விசயங்களை மட்டுமே எழுதுறாங்க. இது யாருக்கு தோணும்னா, அதை எழுதுறாங்களே அவங்களுக்குத் தோணும். ஆனா படிக்கிறவங்களுக்கு அப்படித் தோணுமா. பலருக்கு தோணாது, சிலருக்கு தோணும். 

நமக்கு தெரிஞ்சதை எழுதிட்டு ஓரமா இருக்கலாம். நமக்கு பிடிச்சதை படிச்சிட்டு ஓரமா இருக்கலாம். ஆனா எழுத்துனு வரப்ப எதுக்கு இப்படி எல்லாம் எழுதனும் அப்படினு  மத்தவங்களை அதட்ட தோணும், எதுக்குனா நம்மதான் இந்த உலகத்தை என்னமோ மிகவும் நேரான பாதையில செலுத்துரமாதிரி ஒரு அடவடியான எண்ணம் ;)

போன ஜென்ம பகை அப்படிங்கிற மாதிரி போன வருஷ பகை, அதுக்கு முந்தின வருஷ பகை, போன மாச பகை, போன வார பகை அப்படினு புகைஞ்சிகிட்டே இந்த எழுத்து இருந்துட்டு வருதாம். பத்திக்கிட்டு எரியமாட்டிங்குதுன்னு சிலருக்கு கவலை வேற இருக்காம். வெட்டிகிட்டு சாகமாட்டாங்களானு ஒரு கூட்டம் பிராத்தனை பண்ணிகிட்டு திரியறாங்களாம்.

வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லைனு ஒரு பேச்சு அடிபடுது. அப்புறம் என்ன எழுத்து எழவுக்கு இப்படி எழுத்து தகராறு. அது வேற ஒன்னும் இல்லையாம். சண்டைய பார்க்கத்தான் கூட்டம் கூடுமாம். அது மாதிரி ஒருத்தரை இன்னொருத்தர் எழுதி தாக்கிகிட்டா பதிவுலகத்தில் தனக்கென தனி இடம் ஒன்னு சிறப்பா அமைச்சிக்கிடலாம்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றாங்க. ;) நாலு பேருக்கு நாம தெரியனுமா நல்லவங்களுக்கு கெடுதல் பண்ணு அப்படினு ஒரு சொல் வழக்கு இருக்கு. கெட்டவனு பேரு வாங்கிருவோம்னு பயப்படவேணாம் ;)  நல்லவருனு சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து.

இப்போ  எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல  சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.

சரி அதெல்லாம் பிரச்சினை இல்லை, எனக்கு இப்போ இந்த தமிழுல எழுதறவங்க எழுத்து எல்லாம் படிச்சி படிச்சி அவங்களைப் பத்தி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிச்சி தொலைஞ்சிருச்சி. இதுல கொடுமை என்னனா தப்பா எழுதுறதை வைச்சிதான் பிம்பம் பெரிசா உருவாக ஆரம்பிச்சிருச்சி. ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு தீய விசயம் இருந்தால் போதும், அத்தனை நல்ல விசயங்களும் பொசுங்கிப் போய்விடும் அப்படிங்கிற பாலபாடம் எனக்கு கத்து கொடுக்கப்பட்டு  இருக்கறதால இந்த பிம்பம் எல்லாம் மறையவே மறையாது. பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.

யார் அந்த பதிவர்கள்? அப்படிப்பட்ட  பதிவர்களை கை காட்டித்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஏனெனில் என்னை பார்க்க வேண்டும் என எவருக்கும் இனிமேல் நினைப்பு இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் சரியாக செய்து கொள்வார்கள். ;)

5 comments:

தமிழ் உதயம் said...

என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட உங்கள் மனநிலையிலேயே நானும்.

Paleo God said...

// பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.//

ஏங்க நான் வெறும் பின்னூட்டம்தான் போடுகிறேன்! :))

Jey said...

அவங்க அவங்க பாட்டுக்கு, நாம நாம பாடுக்கு இருப்போம் சார்.இந்த பிளாக்ஸ் நம்ம எல்லோருக்கும் பொது, சோ ”டோண்ட் வொரி பி ஹேப்பி” சார்.

Chitra said...

இப்போ எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.


...... சார், "Be yourself - be true to your self" - இதுதான் நம்ம பாலிசி..... :-)

Radhakrishnan said...

நன்றி தமிழ் உதயம் ஐயா. தெரிந்து எடுத்து பதிவர்களை சந்திக்கலாம். சந்தித்த பின்னர் தெரிவு செய்யாமலே விட்டுவிடலாம்.

சென்னையில் தங்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வேன், நன்றி ஷங்கர்.

மிகவும் சரி, நன்றி ஜெய்.

மிகச் சரியான பாலிசி. மிகவும் உபயோகமானதும் கூட. நன்றி சித்ரா.