Friday 9 July 2010

உழைக்க வழி செய்



நச்சரித்தான் பலமுறை
எச்சரித்தேன் சிலமுறை 

அவனும் விடுவதாய் இல்லை
நானும் தருவதாய் இல்லை 

தட்டு கழுவுவதாகவும் சொன்னான்
தட்டி கழித்தேன் கோபமாய் 

எனது கன்னத்தில் 
அவன் கை 
பதிந்தது அழுத்தமாய் 

அவனது மன வலி
உடல் வலியாய் எனக்குள்

எவர் நல்லவை கேட்பினும்
மறுக்க இனி மனமில்லை. 

7 comments:

க.பாலாசி said...

வறுமையின் வலி எங்கும் வியாபித்திருக்கிறது. மறுக்காத மனநிலை எவருக்கும் கிடைக்கவேண்டும்...

Radhakrishnan said...

நன்றி பாலாசி

http://rkguru.blogspot.com/ said...

இது கொடுமை......

Radhakrishnan said...

ஆம், நன்றி குரு.

நேசமித்ரன் said...

நல்ல முயற்சி நண்பரே
வலி பேசும் வரிகள்

Katz said...

அருமை. ஆனால் வேறு தலைப்பு கொடுத்திருக்கலாம்

Radhakrishnan said...

மாற்றம் செய்துவிட்டேன், நன்றி வழிப்போக்கரே.