Sunday 25 July 2010

புத்தக வெளியீட்டு விழா - நன்றி

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தகம்தனை மிகவும் சிறப்பாக முறையில் வெளியீடு செய்தமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நான் யார் என்றே தெரியாத போதிலும் எனது எழுத்துதனை படித்து அதனை வெகு சிறப்பாக பாராட்டி பேசியதுடன், புத்தகத்தை வெளியிட்ட  தாரா கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரதியை பெற்று கொண்டு நல்வாழ்த்து தெரிவித்த கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஐந்தே நிமிடங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடப்பட்டதும் என்னிடம்  கொண்டிருக்கும் நட்புக்காக மிகவும் சிறப்பாக பேசிய எனது தோழியும், முத்தமிழ்மன்றத்தின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான சூரியகாந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அசைபடம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் தந்ததும், உடனே சம்மதம் தெரிவித்து அசைபடம் எடுக்க உதவியாக இருந்த மணீஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரையை வழங்கிய புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் அதிஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களின் முயற்சியால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் முத்தமிழ் மன்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தருணத்தில் விதூஷ், மணீஜி, கேபிள்ஜி ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புதனை ஏற்படுத்தாமல் போனது குறித்து மனதில் சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மை.

விழா குறித்து மேலும் தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

சினேகன் அவர்களின் புத்தக விமர்சனம் கண்டேன். ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி நிலவினாலும், ஒரு இனம் புரியாத பயமும் வந்து சேர்கிறது. நன்றி சினேகன்.

எங்கோ இருக்கிறேன் என
நினைக்கும்போது
அருகில்தான் இருக்கிறாய் என
அன்புடன்
அரவணைத்து கொண்ட
அனைத்து
தோழர் தோழிகளுக்கும்
எனது
உளமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.

10 comments:

vasu balaji said...

வாழ்த்துகள்

Chitra said...

அருமை, அய்யா.... வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

நன்றி ஐயா, நன்றி சித்ரா.

Vidhoosh said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன். சூரியகாந்தி வாயிலாக உங்கள் அருஞ்செயல்களைப் பற்றியும் அறியக் கிடைத்தது. மிகவும் பெருமையாக இருக்கிறது.

புத்தகம் மிகவும் அற்புதமான படைப்பாக வெளிவந்துள்ளது. இன்னும் சிறந்த பல ஆக்கங்களைச் செய்ய இறைவன் துணையிருக்கட்டும்.

Radhakrishnan said...

நன்றி விதூஷ். சாதாரண செயல்கள்தான் நான் செய்தது, செய்து கொண்டிருப்பது. நண்பர் என்றால் கொஞ்சம் அதிகமாக பாராட்டத்தான் செய்வார்கள், சூரியா அதிகமாக புகழ்ந்து விட்டாரோ? :)

புத்தகம் பற்றிய கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

ஈரோடு கதிர் said...

மிகுந்த மகிழ்ச்சி

வாழ்த்துகள்

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Radhakrishnan said...

நன்றி கதிர், நன்றி ராம்ஜி.

GNU அன்வர் said...

மிங்கி மிங்கி பா மிங்கி மிங்கி பா

தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

நன்றி நண்பரே.