Friday 26 February 2010

மக்கா சோளம்


மெல்லத்தான் ஓடிப்போய் 
வாழைப்பழம்னு கையில் எடுத்தே 
தோலை உரிக்கும் வேகத்தில் 
இழுத்துப் பார்க்க 


முத்தாய் ஒன்று வந்தது 
என்னவென்று ருசித்துப் பார்க்க 
இனிப்பாய் இருந்தது 


ஒவ்வொரு முத்தாய் 
விழுங்கிக் கொண்டே 
வாழைப்பழம் அல்லாது இருக்கும் 
இந்த மஞ்சள் வெயில் முத்துக்கு 
பெயர் என யோசித்து நிற்கையில் 


வழியில் நடந்த இருவரில் ஒருவர் 
'இங்க பாருடா மக்கா 
உன் ஆளு மக்காசோளம் திங்குது' 

கேட்டவுடன் மனதுக்குள் 
சொல்லிக் கொண்டேன் 
நான் உங்க முன்னோர்தான் மக்கா! 


இனி எனக்கு வாழைப்பழமும் 
தேங்காய் சிதறலும் வேண்டாம் 
மக்காசோளம் ஒன்றே போதும். 

12 comments:

Chitra said...

படமும் அதற்கேற்ற உங்கள் கவி கருவும் நல்லா இருக்குங்க.

Thekkikattan|தெகா said...

:))

மதுரை சரவணன் said...

கவிதையில் முன்னேர்கள் . முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்

Anonymous said...

very nice

ஹேமா said...

ம்ம்ம்...இப்பிடியும் சிந்திச்சு ஒரு கவிதை.
நல்லாத்தானிருக்கு.

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி. :)

vidivelli said...

பிரமாதம் உங்கள் கவிதை.பிடிச்சிருக்குங்க.........
படத்திற்கேற்ற கவிதை சுப்பர்....

Unknown said...

நல்லா இருக்கு நண்பா

சிவாஜி சங்கர் said...

:)

புலவன் புலிகேசி said...

இதுதான் பரினாம வளர்ச்சியா இருக்குமோ...?

thiyaa said...

nice

Radhakrishnan said...

பிரமாதம் என பாராட்டிய விடிவெள்ளி அவர்களுக்கு, நன்றாக இருக்கிறது என பாராட்டிய பேநா மூடி அவர்களுக்கும், புன்னகை புரிந்த சிவாஜி சங்கர் அவர்களுக்கும், பரிணாம வளர்ச்சியாக இருக்குமோ என கேள்விகள் எழுப்பிய புலிகேசி அவர்களுக்கும், அருமை என ஆங்கிலத்தில் சொன்ன தியாவின் பேனா அவர்களுக்கும் எனது நன்றிகள்.