Thursday 25 February 2010

சாதி சனம்



எங்க ஊர் கதை கேட்டு 
சிரிக்கும் எங்க சனம் 
எங்க ஊர் கதை கேட்க 
திரளும் உங்க சனம் 

பாறையிலும் ஈரம் பார்க்கும் 
எங்க சனம் 
ஈரத்தையும் காய வைக்கும் 
உங்க சனம் 

ஆண் பெண் பேதம் சொல்லும் 
எங்க சனம் 
அப்படின்னா என்னனு கேட்கும் 
உங்க சனம் 

சுகாதார நலக்கேடு புரியாத 
எங்க சனம் 
முகம் சுளிச்சிக்கிட்டுப் போகும் 
உங்க சனம் 

சாலை விதிகள் வேணாமென்னும் 
எங்க சனம் 
சகிச்சிக்கிட்டுப் போறதை கண்மிரளும் 
உங்க சனம் 

உழைப்பும் பேச்சும் உருவாக்கினது 
எங்க சனம் 
அதை எடுத்து உபயோக்கிறது 
உங்க சனம் 

சாதிச்சி பலவரலாறை வைச்சிருக்கு 
எங்க சனம் 
சந்தோசமா வந்து அனுபவிக்குது 
உங்க் சனம் 

எங்க சனம் உங்க சனம் 
என் பேச்சும்தான் புரியுமோ 
எப்போ ஆகும் ஒரு சனம்!

8 comments:

மதுரை சரவணன் said...

அருமை எல்லாம் ஒர் இனம் .சனங்க படிக்கிற கவிதை இல்ல உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை மிக அருமை.

புலவன் புலிகேசி said...

//சாலை விதிகள் வேணாமென்னும்
எங்க சனம்
சகிச்சிக்கிட்டுப் போறதை கண்மிரளும்
உங்க சனம் //

சனம் சூப்பர்...

தமிழ் உதயம் said...

உண்மை. உண்மையை தவிர வேறில்லை. ஆனால் உலகம் உள்ளவரை ரெண்டு சனம் தான். ஒரு சன உலகம் மலர வாய்ப்பே இல்லை.

vasu balaji said...

arumai:)

ஹேமா said...

சொல்லிப் பாருங்க.யாராச்சும் ஒருத்தர் காதிலயாவது விழாமலா போகும் !

vidivelli said...

பிரமாதமுங்க........
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

Radhakrishnan said...

கவிதை உணர்த்தும் ஒரு சனம் என பாராட்டிய மதுரை சரவணன் அவர்களுக்கும், அருமை என பாராட்டிய ஸ்டார்ஜன் அவர்களுக்கும், புன்னகை புரிந்த சித்ரா அவர்களுக்கும், சனம் சூப்பர் என பாராட்டுகள் தெரிவித்த புலிகேசி அவர்களுக்க்கும், பொய்யான கவிதையும் உண்மை பேசும் என பாராட்டிய தமிழ் உதயம் அவர்களுக்கும், அருமை என புன்ன்கையுடன் கூடிய பாராட்டைத் தெரிவித்த வானம்பாடிகள் அவர்களுக்கும், எவர் காதிலாவது விழும் என ஆலோசனை சொன்ன ஹேமா அவர்களுக்கும், ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு எனப் பாராட்டிய விடிவெள்ளி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.