Sunday 28 February 2010

இளந்துறவி



உங்கள் கண்களுக்கு 
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு 
என் மனதில் 
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு 

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை 
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை 
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள் 
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள் 

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன் 
புரியும் வாழ்க்கையதை 
பள்ளி தொடாமல் பயில்கின்றேன் 
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன் 
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன் 

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை 
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை 
பொன்னும் பொருளும் பேணியும் 
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர் 

என்றும் துறந்து விடாத ஒன்றில் 
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன் 
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு 
நானா தெரிகிறேன் துறவியாய்?

9 comments:

புலவன் புலிகேசி said...

நிச்சயம் புரிதல் இல்லாத் துறவரம்...வற்புறுத்தல்...

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை.

Chitra said...

இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்

........ :-)

vasu balaji said...

நல்லாருக்கு:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப சூப்பர்; சிந்திக்கவேண்டிய கருத்துகள்.

தமிழ் உதயம் said...

பொன்னும் பொருளும் பேணியும்
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்



துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு நானா தெரிகிறேன் துறவியாய்?


துறவின் மேன்மை,
பற்றின் பேராசை...
அழகாக சொல்லிவிட்டீர்கள்

Radhakrishnan said...

பாரட்டுகள் தெரிவித்த புலிகேசி, ராமலக்ஷ்மி, சித்ரா, வானம்பாடிகள் ஐயா, ஸ்டார்ஜன், தமிழ் உதயம் ஆகியோர்களுக்கு எனது நன்றிகள்.

maithriim said...

ரொம்ப அருமை!

amas32

Radhakrishnan said...

மிக்க நன்றிம்மா :-)