Tuesday 2 March 2010

இனி எல்லாமே கனவு!



வண்ண வண்ண விளக்குகள் இல்லை 
வர்ணம் பூசிய மனிதர்கள் இல்லை 
உயரமாய் கட்டப்பட்ட மேடை இல்லை 
சுற்றி நிற்கும் பாதுகாவலர் இல்லை 

கைத்தட்ட காசு வாங்கி 
வந்து அமர்ந்த மனிதரும் இல்லை 
வாக்கு சேகரிக்க தேவையற்ற 
வாக்கு இங்கு கொடுக்கவும் இல்லை 

சுதந்திரம்தனை தப்பாய் புரிந்தவரில்லை இங்கே 
சுதந்திர காற்றை மாசுபடுத்தும் கூட்டமுமில்லை 
இங்கே 
தலைவரென்று தனிமைப் படுத்துவதில்லை இங்கே 
துணிவை தொலைக்கும் தலைவரில்லை இங்கே 

புரியும்படியாய் சொல்வதும் உண்டு 
புரிந்து நடந்திடும் பொன்மனம் உண்டு 
வாங்கி தந்த சுதந்திரம்தனில் 
வாழ்ந்து மகிழ்ந்திட வருவாயா அண்ணலே!

8 comments:

அன்புடன் நான் said...

நல்லயிருக்குங்க கவிதை பாராட்டுக்கள்

Paleo God said...

அண்ணலின் மேல் காதல் அருமை ..:)

தமிழ் உதயம் said...

உங்க கவிதைகளை வாசிக்கும் போது மனது ரெம்ப சந்தோஷப்படுது. காரணம் நேர்மையுடன் கூடிய எளிமை.

Chitra said...

///////நேர்மையுடன் கூடிய எளிமை.///////

.......... I second it!

மதுரை சரவணன் said...

நல்லா இருக்கு . எளிமை மற்றும் இனிமை

Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது என்று பாராட்டிய கருணாகரசு அவர்களுக்கும், காதல் அருமையென பாராட்டிய ஷங்கர் அவர்களுக்கும், நேர்மையுடன் கூடிய எளிமை என புகழாரம் சூட்டிய தமிழ் உதயம் அவர்களுக்கும், அதை வழிமொழிந்த சித்ரா அவர்களுக்கும், எளிமை, இனிமை என பாராட்டிய மதுரை சரவணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

vidivelli said...

அருமை.............

Radhakrishnan said...

மிக்க நன்றி விடிவெள்ளி.