Tuesday 23 March 2010

அடிப்படை அறிவு

எனக்கும் ஒரு கனவு இருந்துச்சிங்க, எப்படியாவது ஒரு இணைய தளம் ஆரம்பிச்சிரனும்னு ஒரு தீராத ஏக்கமாத்தாங்க அந்த கனவு. இயற்பியல், வேதியியல், உயிரியல் அப்படினு எல்லா அறிவியலையும் ஆங்கிலத்தில எழுதி படிப்புக்கு உதவக்கூடிய இணையதளமா மாத்திரலாம்னு ஒரே கனவு. போன வருசம் ஆரம்பிச்சேன்.

ஒரு வருசம் மேல ஓடிப் போச்சு, இன்னமும் அப்படியேதான் அந்த இணையதளம் ஒரு வளர்ச்சியும் அடையாம இருக்கு. உருப்படியா ஒரு விசயத்தைச் செய்யனும்னா ஒன்னு ஆளு வைச்சி வேலை செய்யனும், இல்லைன்னா சுயமா விசயங்கள் கத்துக்கிட்டே ஒரு செயலை செய்யனும். நான் ரெண்டாவது கட்டத்துக்கு டிக் பண்ணினதால பெரிய தலைவலியாத்தான் போச்சு. யார்கிட்டயும் போய் உதவினு கேட்டாலும், மத்தவங்க வந்து செய்றதுக்கு அவங்களுக்கு நேரமும் இருக்கனும்.

முத முத எழுதினப்போ நல்லாத்தான் இருந்துச்சு, அப்படியே தொடர்ந்து செஞ்சிருக்கலாம் ஆனா அதுல முழு கவனமும் செலுத்தாம திடீரு திடீருனு போய் மாத்தம் செஞ்சதால ஒரு முறை என்னவோ பண்ண போய் இப்போ ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குது.

சைட் பில்டருல ஏகப்பட்ட குளறுபடியா இருக்கு. ஹெச் டி எம் எல் ஐ என்ன பண்ணினோ தெரியலை எடிட்டர் வருது அப்புறம் ஓடிப் போயிருது. இப்படியே போனாக்கா கடைசியில ஒன்னுமே எழுத முடியாமத்தான் போயிரும்னு ஒரு பயம் வேற வந்துருச்சு.

இனிமே அடிப்படை அறிவை வளர்த்துட்டு செய்யலாம்னு பார்த்தா நாளுதான் ஓடிட்டே இருக்கு, சம்பந்தபட்டவங்ககிட்ட ஒரு மெயில் அனுப்பி இருக்கேன், போன தடவை சொன்னப்போ எங்ககிட்ட சொல்லுங்க நாங்க சேர்க்கிறோம்னு சொன்னாங்க, ஒவ்வொரு தடவையும் அப்படி செய்ய முடியுங்களா? இதோ இப்படி பிளாக்ல எழுதறது எத்தனை ஈசியா இருக்கு, இதுக்கு எனக்கு ஏதுங்க அடிப்படை அறிவு. ஆனாலும் எத்தனையோ டெம்ப்ளேட் மாத்தி மாத்தி ஏதோதோ செஞ்சி இந்த ப்ளாக்ல விளையாடினேன், ஆனா அந்த இணையதளத்தில மட்டும் ஒன்னுமே செய்ய முடியலை.

வெறும் கனவோடு மட்டுமே இருக்கு அந்த இணையதளம். கண்ட்ரோல் பேனல் பாஸ்வேர்டு வேற அடிக்கடி மறந்து போகுது. ஒரு இணையதளத்தை எப்படி சிறப்பா வடிவமைக்கிறதுனு தமிழுல யாரச்சும் பாடம் நடத்துவாங்களானு பாத்துட்டே இருக்கிறேன், கனவு நனவாகிரும்.

http://www.remainforever.co.uk இதுதான் இணையதளம்

7 comments:

புலவன் புலிகேசி said...

அந்த வலைப்பக்கம் போகவே மட்டேன்குது நண்பரே...

Chitra said...

நாங்களும் கற்று கொண்டோம். :-)
ஒரு வருடத்துக்கு மேலும் அருமையான பதிவுகள் தருவதற்கு வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

ஓ இப்பொழுது வேலை செய்கிறது நண்பரே, மேலும் எப்படி சில பணிகள் செய்வது என கற்றுக்கொண்டு விட்டேன். இனிமேல் முழு கவனம் செலுத்தி பாடத்திட்டத்தை அந்த இணையதளத்தில் ஏற்றிவிடுவேன். :)

மிக்க நன்றி சித்ரா, எல்லாம் இறைவன் சித்தம்.

முகுந்த்; Amma said...

I do have some interests in writing & Teaching Basic Science. If you wish, I can also participate in this. Please let me know.

Radhakrishnan said...

நிச்சயமாக செய்யலாம் முகுந்த் அம்மா. இப்பொழுது அந்த இணையதளத்தில் இருந்த பிரச்சினைகளை சரி செய்து விட்டேன்.விரைவில் பாடத்தை ஆரம்பித்து விடுவேன். தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க்லாம். தங்களின் தன்னார்வத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்.

கையேடு said...

அன்புள்ள திரு. இராதாகிருட்டினன் அவர்களுக்கு,
உங்களது சிறப்பாக உள்ளன தொடருங்கள்.

கையேடு said...

உங்களது ஆக்கங்கள் சிறப்பாக உள்ளன என்று திருத்தி வாசிக்கவும்.