Monday 8 March 2010

திருமணம் எனும் பந்தம்




கையின் மேல் கை வைத்து 
ஒன்றான விதம் சொல்லும் 

அன்பில் குறைவுமில்லை
அன்பே சொர்க்கமாகும் 

அழகிய அலங்காரம் சுமந்து
அர்த்தமாகும் வாழ்க்கை 

பொருந்தும் கரங்கள் மட்டுமே
பொருந்திக் கொள்ளும் திறமை 

மனம் தாங்கிய உணர்வினை
கரம்தொட்டு கடத்துகிறாள் 

இங்கிருந்து அங்குமாய்
அங்கிருந்து இங்குமாய் 

மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறான்
மனதில் பூரணமாய் 

அவளைத் தாங்குவதாய் அவனும்
அவனை உயர்த்துவதாய் அவளும் 

கரங்கள் சொல்லும்அன்பின் காவியம்
கறைபடியாத நிச்சய ஓவியம் 

ஒரே ஒரு உயிராய் இருக்க
ஒரு முறையே நடக்கும் 

ஒப்பில்லாத அன்பில் திருமணம்

ஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.

2 comments:

தமிழ் உதயம் said...

ஒப்பில்லாத அன்பில் திருமணம்
ஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.


திருமண பந்தம் குறித்தான கவிதை பாராட்டுக்குரியது

Radhakrishnan said...

மிகவும் நன்றி தமிழ் உதயம் அவர்களே.