Wednesday 24 February 2010

யோகாசன நிலையில் சிறுவன்



உற்சாகம் தொலைத்த
முகத்தை தடவிட கைகள் மட்டும்
போதாதென கால்களும் துணை வருகிறது
அகப்பட்டு தவிக்கிறது


வெறுத்து ஒதுக்கப்பட்ட
வேதனை போக்கி வாழ்வில் சிறக்க
யோக நிலையை மனம் நாடியது
தாகம் எடுக்கிறது


எதிர்கால இரைச்சலில்
இன்றைய தினத்தை மனதில் வைத்தே
இனிமை நினைவுகள் வெளிவர துடிக்கிறது
இந்நிலை இறுதியாகிறது


உடல் வளைத்து
உள்ளம் உறுதியாக்கிட தினமும் பயின்று
வெளிச்சென்று பார்க்கையில் மனம் நோகும்
மனிதர்கள் புன்னகைப்பதில்லை


ஆழ்ந்த சிந்தனையிது
கண்கள் காட்டிவிடும் தீராத தீட்சண்யம்
கலைகள் கொண்டுவரும் தீராத மகிழ்ச்சி
கவலையை துடைத்துவிடு.

8 comments:

கண்மணி/kanmani said...

மீ த ஃபர்ஸ்ட்டு

கண்மணி/kanmani said...

பையனைப் பார்த்தா யோகா பண்ற மாதிரி தெரியலயே....நம்மள வச்சி பதிவு போட்டுட்டாங்களேன்னு யோசனையோ?...:))ச்சும்மா டேக் இட் ஈஸி

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை ரொம்ப சூப்பர்.

Thekkikattan|தெகா said...

keep going...

Chitra said...

ஆழ்ந்த சிந்தனையிது
கண்கள் காட்டிவிடும் தீராத தீட்சண்யம்
கலைகள் கொண்டுவரும் தீராத மகிழ்ச்சி
கவலையை துடைத்துவிடு.

.............நல்லா இருக்குங்க.

புலவன் புலிகேசி said...

:)

தமிழ் உதயம் said...

யோகா நிலையை வைத்து ஒரு கவிதை. நிச்சயம் சிறந்த முயற்சி.

Radhakrishnan said...

மிக்க நன்றி கண்மணி, ஸ்டார்ஜன், தெகா, சித்ரா, புலிகேசி, தமிழ் உதயம்.