Wednesday 3 February 2010

ஒரு பொண்ணு பேசற பேச்சா இது!

எனக்கு வானொலி கேட்கறது ரொம்பவேப் பிடிக்கும், அதுவும் நாட்டு நடப்பு பத்தி ரெண்டு பேரு உட்கார்ந்துகிட்டு ஊருல இருக்கறவங்ககிட்ட எல்லாம் தொலைபேசி மூலமா ஒரு விசயத்தைப் பத்தி அலசுறதை கேட்கறது ஒரு தனி சுகம் தான். என்னதான் இவங்க பேசிட்டாலும் நாட்டுல நடக்கறதை மாத்த முடியாதுன்னாலும், பேசறாங்களே அதை நினைச்சிப் பாராட்டனும். எனக்கு கூட ஒரு வாய்ப்பு வந்துச்சி. அப்போ நா கோவிலுல செயலாளரா வேலைப் பாத்துட்டு இருந்தேன்.

முன்னமே என்கிட்ட சொல்லி வைச்சிட்டாங்க, சரியா ஏழரை மணிக்கு நீ ஃபோன் பக்கத்துல உட்கார்ந்திருக்கனும், உன்னோட நம்பருக்கு ஃபோன் பண்ணுவோம், நீ பதில் பேசனும், அதுவும் எப்படியெல்லாம் கேட்போம்னு வேற சொல்லி வைச்சிட்டாங்க. நானும் தேமேனு உட்கார்ந்திருந்தேன். ஃபோனும் வந்துச்சு, எனக்கு ஆங்கிலம்னாலே கொஞ்சம் என்ன நிறையவே தடுமாறும், இந்த ஆங்கிலத்துல எப்படியாவது மாஸ்டர் ஆகிப்பூடனும்னு முடிவு பண்ணிட்டேன்.

நானும் ஓரளவுக்கு அவங்க சொன்னமாதிரியே கிளிப்பிள்ளை மாதிரி இல்லாட்டாலும் ஓரளவுக்குச் சொல்லி வைச்சிட்டேன். அப்புறமா வந்துச்சு ஒரு கேள்வி, நான் எதிர்பார்க்கவே இல்லை. என்ன கேட்கது அந்த அம்மானு ஒன்னும் புரியல. நானும் எனக்குத் தெரிஞ்சமாதிரி சொல்லி வைச்சேன், அதுக்கு அந்த அம்மா இல்லையில்லை, தேருல தோரணம் எல்லாம் இருக்குமானு கேட்டேனு சொன்னாங்க. ஆமாமா தோரணம் எல்லாம் கட்டியிருக்கும், ரொம்ப பேரு தேரை இழுத்துட்டுப் போவாங்கனு சொல்லி பேட்டி முடிஞ்சது, எனக்கோ தர்மசங்கடமா இருந்துச்சு. ஆனா யாருமே ஒண்ணுமே சொல்லலை. யாரு வானொலி கேட்கறானு இருந்துட்டேன்.

அதே நாளுலையே தொலைகாட்சிக்குப் பேட்டி கொடுக்கனும், இந்த வைபவத்தைப் பத்தி சொல்லுனு சொன்னதும் அந்த கோவிலோட தலைவரு என்னை கைகாட்டிட்டு போயிட்டாரு. நானும் தொலைகாட்சிக்குப் பேட்டி கொடுத்தேன். எல்லாம் ஒரே டேக்குல முடிச்சேன் பாருங்க, அதுதான் எனக்கு என்கிட்ட பிடிச்சி இருந்தது. ஆனா அதை ஒளிபரப்புனாங்களேனே தெரியலை.

சரி விசயத்துக்கு வருவோம். இப்படித்தான் வானொலி கேட்டுட்டு இருக்கையில இங்கிலாந்து அணியின் கால்பந்தாட்ட தலைவரு தன்னோட மனைவிக்குத் தெரியாம, தனது அணியில் விளையாடற ஒரு நண்பரோட முன்னால் காதலியோட கள்ளத் தொடர்பு வைச்சிக்கிட்டாராம், அந்த பொண்ணு கர்ப்பமாக்கிட்டாராம். யாருக்கும் தெரியாம கருவை கலைச்சிட இந்த அணித் தலைவரு பணம் கொடுத்தாராம். இந்த நியூஸூ எப்படி பேப்பர்காரங்களுக்குப் போச்சுனு தெரியலை, அணித்தலைவர் பதவியைத் தொறக்கனும், சரியான ஏமாத்துப் பேர்வழி அப்படியெல்லாம் ஒரே கூச்சல், சத்தம். ஏண்டா ஊரு உலகத்துல ஏகப்பட்ட பிரச்சினையிருக்கே அதெல்லாம் உங்க கண்ணுக்கு ஏண்டா தெரியமாட்டேங்குதுனு பேப்பர்காரங்களப் பத்தி இன்னொரு கூட்டம் சத்தம் போடுது.

இப்படி இருக்கையில அணித்தலைவர் விளையாடற க்ளப் ஸ்போக்ஸ் உமன் வானொலியில பேட்டிக் கொடுத்தாங்க. அந்த அம்மா சொன்னதைக் கேட்டு நானும் தான் கொஞ்சம் ஆடிப் போயிட்டேன். அது என்னன்னா...

'பெண்கள் பணக்காரர்களைப் பார்த்து அதாவது முக்கியமாக கால்பந்தாட்ட வீரர்களை வட்டமிடுவது சகஜம். இந்த பெண்கள் மிகவும் கொடுமையானவர்கள். தனக்குத் தேவையெனில் எதுவும் செய்யக்கூடியவர்கள்' னு சொன்னதுமே உடனே கேள்வியாளர் 'நீங்களும் பெண் தானே' என்றாரேப் பார்க்கலாம். 'ஆமாம், இருந்தாலும் என பெண்களைத் தொடர்ந்துத் தரக்குறைவாக பேசிய அந்த பெண்ணை நினைச்சபோது எங்க ஊருல சொல்வாக 'படிச்ச பையன் பேசற பேச்சா எது, ஒரு பொம்பளை பேசற பேச்சா இது, ஒரு ஆம்பளை பேசற பேச்சா இது அப்படினு' அதுதான் என் நினைப்புக்கு வந்துச்சு. ஆனா சட்டுனு எனக்குத் தோணிச்சி ஒரு சிந்திக்கிறவன் நினைக்கிற நினைப்பா இதுனு.

படிச்சாலும், படிக்காட்டாலும், ஆணா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் உணர்வு ஒண்ணுதானுங்க, ஒழுக்கம் எல்லாருக்கும் தானுங்க. படிக்காதவக தப்பு செஞ்சா பாவம்னு விட்டுர முடியுமா, பொண்ணுன்னா சும்மா தான் இருந்துர முடியுமா! என்ன உலகம் சாமி இது.

தனிமனிசரோட ஒழுக்கத்தை தனிமனிசருதான் காப்பாத்திக்கனும், கண்டதை மேய்வேனு சொல்லிட்டு தெருப்பக்கம் திரிஞ்சிட்டிருந்தா கல்லடிதான் மிஞ்சும்.

ஹூம், ஆங்கிலத்துல மாஸ்டரு ஆகனும்னு நினைச்சேனா, தமிழை முதமுதல தவறவிட்டுட்டேனுங்க, அதனால என்னை தமிழ் அறிஞர்கள் மன்னிச்சுருங்க.

4 comments:

vasu balaji said...

:))

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

Chitra said...

படிச்சாலும், படிக்காட்டாலும், ஆணா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் உணர்வு ஒண்ணுதானுங்க, ஒழுக்கம் எல்லாருக்கும் தானுங்க. படிக்காதவக தப்பு செஞ்சா பாவம்னு விட்டுர முடியுமா, பொண்ணுன்னா சும்மா தான் இருந்துர முடியுமா! என்ன உலகம் சாமி இது.
....................correct ஆ சொன்னீங்க. சரிதாங்க.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, சரியாகச் சொன்னாலும், உலக நடப்பை மாத்த முடியாதே.