Thursday 21 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2

ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெளி சொல்ல இயலாது. பல விசயங்கள் மனதோடு புதைக்கப்பட்டு இருக்கும். பக்கம் பக்கமாக எழுதினாலும் சில ஆசைகள் மட்டும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். இப்படித்தான் ஒருமுறை நண்பர்கள் ஆசைகளை பட்டியலிட சொன்னபோது இவ்வாறு எழுதி இருந்தேன். அதில் எங்கேயும் வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசை இருந்ததாக குறிப்பிடவே இல்லை.

ஆசைப்பட்டேன் - முன்னுரை 

ஆசைப்பட்டேன் - 1 

ஆசைப்பட்டேன் - 2

ஆசைப்பட்டேன் - 3

ஆசைப்பட்டேன் -4 

ஆசைப்பட்டேன் - 5

கடவுள் ஆசைப்படுவாரா? 

இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன். என் தாய்! நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகிறது. எனக்கு எந்த ஒரு வலியும் ஏற்பட்டு விடக்கூடாதென எனது வாழ்க்கையை முடிவு செய்த தாய். ஒரு மனைவி வந்தால் அவளால் நான் பாதுகாக்கப்படுவேன் என எப்படியம்மா உங்களால் எனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடிந்தது? இதுவே தவறாகி போயிருந்தால் உங்கள் மீது ஒருபோதும் பழி சுமத்தி இருக்க மாட்டேன் அம்மா. நான் எத்தனையோ விசயங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போதும், ''நீ சின்ன பையன்டா'' என உங்கள் உத்தரவுக்கு என்னை அன்பினால் கட்டி போட்ட உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், என் தாய் மட்டும் எனது திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை பண்ணியிருக்காவிட்டால் நான் இலண்டன் வந்திருக்கும் வாய்ப்பின் கதவு அடைபட்டு போயிருக்கும். நான் இளநிலை பட்டம் படித்து கொண்டிருக்கும்போதே பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தது. எனது மனைவி மூன்று வயதில் இருந்தே வளர்ந்தது எல்லாம் இலண்டனில்தான். எனது அன்னையின் மரணம் நிகழ்ந்த ஆண்டுதனில் ஆறுமாதம் பின்னர் எங்கள் திருமணம் நடந்தது . திருமணம் நடந்து முடிந்த இரண்டு மாதத்தில் லண்டன் வந்து சேர்ந்தேன். எனது அன்னையின் ஆசையுடன் எனது ஆசையும் ஒட்டிக் கொண்டது.

ஒரு நாட்டுக்கு செல்ல விசா பலவகைகளில் வழங்கபடுகிறது. வேலை பார்க்க அனுமதி விசா. வியாபார விசா. மாணவர் விசா. சுற்றிப் பார்க்க செல்ல விசா என பல வகை விசா உண்டு. அதோடு மட்டுமா குடியுரிமை விசா என்றொன்று உண்டு. நான் லண்டன் வந்தது குடியுரிமை விசா என்பதில் தான். நான் மிகவும் சராசரி மாணவன். என்னை பெரும் அறிவுடையவனாக மாற்றி கொள்ள வேண்டும் எனும் யோசனையும், முயற்சியும், ஒருபோதும் என்னுள் வந்ததில்லை, இனி எப்போதும் வரப் போவதுமில்லை. எனது அறிவின் மூலமாகவோ, எனது படிப்பின் மூலமாகவோ நான் லண்டன் வரவில்லை என்பதை இங்கே பதிவு செய்துவிடுகிறேன். நான் வெளிநாடு சென்றதற்கான அடிப்படை காரணம் திருமணம். நான் பணம் சம்பாதிக்கவோ, பெயரும், புகழும் பெறவோ லண்டன் நோக்கி பயணம் செய்ய வில்லை. எனது வாழ்க்கையினை வாழ லண்டன் பயணித்தேன். அப்பொழுதெல்லாம் லண்டன் வருவது இப்போது போல அத்தனை எளிதாக இல்லை என்பதை குறித்து வைத்து கொள்வது நல்லது.

விசா வழங்குமிடத்தில் நடத்தப்பட்ட நேர்முக வினாக்கள் இன்னும் மனதில் ஆடுகிறது அதிலும் குறிப்பாக

1 மாப்பிள்ளை வீட்டுக்குத்தானே பெண் வருவார், எதற்கு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளையாகிய நீ செல்ல வேண்டும்?

2 1996ல் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்? கல்யாணம் பண்ணி லண்டன் போகத்தானே?

3 நீ எல்லாம் படித்தவனா?

எனது பதில்கள் மிகவும் கலங்கிய வண்ணம் இருந்தன. அதிலும் இப்படி எல்லாம் சொன்னேன். 'இதற்கு முன்னர் எங்கள் ஊரை விட லண்டன் ஒன்றும் பெரிதில்லை. ஆனால் எனது மனைவியின் பொருட்டே நான் லண்டன் செல்ல வேண்டி இருப்பதால்  லண்டன் பெரிதாகிப் போனது'. இந்த பதிலை சொல்லும்போது எனக்குள் நடுக்கம் நிலவத்தான் செய்தது. எனது நேர்முக வினா பதில்களை இப்பொழுதும் எனக்கு அவர்கள் போட்டு காட்டினால் பெரு மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பயம்? எத்தனை கலக்கம்? தவறு செய்கிறோமோ என்கிற பய உணர்வு. வெளிநாடு செல்வது என்பது அத்தனை சுலபமா அப்போது. நான் சில மாதங்கள் சிரமப்பட்டேன். எனது மனைவி, எனது மனைவியின் அண்ணன் மற்றும் லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் நிறுவனர் உதவிகள் செய்யாது போயிருந்தால் நானாவது இலண்டனாவது.

ஆனால் மாணவர்கள் விசாவில், இங்கே கல்லூரி இல்லாமலே, இங்கே வந்தவர்களை பார்த்து இருக்கிறேன், தங்கி விடுவதையும் பார்த்து இருக்கிறேன். வேலை அனுமதி விசாவில் வந்து இங்கேயே இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். ஆலய நிர்வாகத்தில் பணி செய்தபோது பலரை அழைத்து இருக்கிறோம், அவர்களில் பலர் இங்கேதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே தங்கிவிட்டார்கள். மனைவி, குடும்பம் என ஆகிவிட்டது. ஒரு பகுதி என்ன, பல பகுதிகள் இங்கிலாந்தில் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஆக்கிரமித்து விட்டார்கள். நான்கு வருடங்கள் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்த்தால் போதும், இந்த நாட்டில் எல்லா நாட்களும் இருக்குமாறு குடியுரிமை பெற்றுவிடலாம். இப்பொழுது சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் வேலைக்கு என வந்தவர்கள், படிப்பதற்கு என வந்தவர்கள்  எவரையும் கட்டாயமாக குறிப்பிட்ட வருடத்திற்குள் சென்று விட வேண்டும் என்றோ, அந்த குறிப்பிட்ட வருடங்கள் மேல் அந்த நாட்டில் வேலை செய்ய எப்போதுமே அனுமதி இல்லை என்றோ, வேறொரு வெளிநாட்டில் வேலை பார்த்தால், இன்னொரு வெளிநாட்டில் வேலை பார்க்க கூடாது என்றோ எந்த ஒரு நாடும் சட்டம் வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி இவர்கள் சட்டம் வைத்து இருந்தால் எவருமே குடியுரிமை வைத்து இருந்திருக்க இயலாது.

இப்பொழுது சொல்லுங்கள்? இத்தகைய வாய்ப்புகள் இருக்கும்போது அதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது வெளிநாடு சென்றவர்கள் தவறா? வெளிநாட்டின் சட்ட திட்டங்கள் தவறா?

இலண்டன். ஒரு ரொட்டி கடையில் வேலை பார்ப்பவர் அதிக நேரம் வேலை பார்த்து வரும் பணமும் சரி, ஒரு நல்ல  வேலை பார்த்து வரும் பணமும் சரி பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. முன்னவர் சேமிப்பார், பின்னவர் செலவழிப்பார். ;)

இங்கே வாங்கும் பணத்தின் மதிப்பு ஊரில் சுமாராக எழுபது மடங்கு அதிகம். சம்பாதித்தல் இங்கே. செலவழித்தலும் சுகபோக வாழ்க்கையும் இந்தியாவில் என இருப்போர்கள் அதிகம். ஊரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் சொந்த பணத்தில் வாங்கியது. இங்கே வாங்கி இருக்கும் சொத்துகள் எல்லாம் கடன் பணத்தில் வாங்கியது. இங்கிலாந்தில் கடன்காரன், இந்தியாவில் பணக்காரன். ;)

இலண்டன். மின்சார வெட்டு இல்லை. தண்ணீர் பிரச்சினை இல்லை. போக்குவரத்து சச்சரவு இல்லை. (சுரங்க பாதை ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஆடிக்கு ஒரு தரம் மட்டுமே தலைகாட்டும், ஆனாலும் வேலைக்கு போய்விடலாம்). நமது ஊரில் இருப்பதை போல சாதிகள் இல்லை, சண்டைகள் இல்லை. அரசியல் கூட்டங்கள் இல்லை, அனாவசிய பேச்சுகள் இல்லை. ஊழல் இல்லை. ஒருவருக்கும் ஜால்ரா போட தேவையில்லை. வேலை, வேலை, வேலை. சம்பாதிக்கிறாயா, எல்லா வரிகளுக்கும் பணத்தை கட்டுகிறாயா, சந்தோசமான வாழ்க்கைதான்.

லண்டன். படித்தவர்களா,  இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என வரையறை வைத்து கொள்ளாத வெட்கப்படாத பூமி இது. துபாயில் சென்று ஒட்டகம் மேய்த்தான் என நக்கல் பண்ணாத பூமி இது. அபுதாபியில் கழிவறையை சுத்தம் செய்கிறான் என கௌரவம் பேசாத சுத்தமான பூமி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்து பேசாத பூமி.

நான் முதலில் நூலகத்தில் புத்தகங்களை எனது ஆராய்ச்சி படிப்பு முடியும் வரை, மூன்று வருடம்,  மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வாரம் இரு தினங்கள் எடுத்து வைப்பேன். கிறிஸ்துமஸ் சமயங்களில் தபால் நிலையத்தில் சென்று மாலையில்  வேலை பார்த்து இருக்கிறேன். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் கூட வேலை செய்ய செல்ல நான் தயக்கம் காட்டியது இல்லை. ஆனால் வீட்டில் மறுத்துவிட்டார்கள்.  கடைகளில் மெய்க்காவலன் வேலை செய்ய கூட தயாராக இருந்தேன். எதற்கும் துணிந்து இருந்தேன். உழைப்புதனை நம்புவன் ஒருபோதும் ஒடிந்து போவதில்லை என்பதுதான் நான் கண்ட வாழ்க்கை அனுபவம். எனது மாமனார் பெரிய பட்ட படிப்பு படிக்கவில்லை, எனது மாமியார் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லை. அவர்கள் உழைத்த உழைப்பு அடுத்த தலைமுறையும் லண்டனில் இருக்கிறது.

இந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம், உழைப்பை மதிக்கும் மாண்பு இந்தியாவில் இருக்கிறதா?

வசதிகளும் வாய்ப்புகளும் நிறைய பெருக்கி கொள்ள ஒரு தளம் இருக்கும்போது எவரேனும் அந்த தளத்தை விட்டுவிட முயற்சிப்பார்களா?

சும்மா வீட்டில் அமர்ந்து இருக்க பணம் தரும் பூமி இது.

இலண்டன் வந்து பிடிக்காமல் திரும்பி போனவர்கள் மிகவும் குறைவு.

அவ்வப்போது அலுவலகம் மூலமாக வேலை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியா. எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள். ஒரு சின்ன விசயத்தை செய்ய எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கிறது. ஒரு ஒழுங்கு முறை இருக்கிறதா? ஒருவர் நிலம் வாங்குவாராம், ஆனால் வேறு ஒருவர் தனது என்று அந்த நிலத்தில் உட்கார்ந்து கொள்வாராம்.  ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வைத்திருப்பாராம், முதலாளிகளை அடித்து நொறுக்கு என வெட்டியாக திரிபவர்கள் கோஷம் போடுவார்களாம். எதற்கெடுத்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வரும் எனும் கூப்பாடு வேறு. தைரியமாக எதையும் சொல்ல இயலவில்லை. பொய் வழக்கு போடுகிறார்கள் புரட்சிகர இந்தியர்கள். பயப்படுகிறோம், இந்தியா வருவதற்கே அச்சப்படுகிறோம் என்கிறார்கள் பலர். இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சிரமம் என்பதை முதலீட்டாளர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு அதில் பரிச்சயம் இல்லை.

என்னிடம் இந்தியா பற்றி பிறர் குறைபடும்போதேல்லாம்,  இந்தியா, அப்படித்தான் இருக்கும், முடிந்தால் அங்கே சென்று வாழ்ந்து பாருங்கள் என்றுதான் என்னால் சொல்ல இயலும். அந்த இந்தியாவை பொன்னான இந்தியாவாக மாற்ற என்னால் முடியாது போனது போல பலராலும் முடியாது போய்விட்டிருக்க கூடும்.

இந்தியா எனது தாய் நாடு. தமிழ் எனது உயிர் என்று எழுதுவதற்கு சந்தோசமாகத்தான் இருக்கும், ஆனால் எனது இந்திய தேசம் எனக்கு ஒரு விடுமுறை தேசமாகிப் போனதுதான் உண்மை.

அதே பாபு சொன்னார். அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார். அது ஒரு விதத்தில் உண்மைதான். இந்தியா செல்ல வேண்டுமென எவருமே இங்கே தங்கி விட்டவர்கள் விரும்புவதே இல்லை. அப்படி செல்ல வேண்டும் என அவர்கள் சொன்னாலும் உள்ளத்தின் ஓரத்தில் அட இந்தியாவா என்றுதான் இருக்கும்.

நான் இன்னும் பல விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன்.  எழுதுங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களே, அமீரக வாழ் இந்தியர்களே. இந்திய வாழ் இந்தியர்களே.

36 comments:

தமிழ் உதயம் said...

இந்தியாவுக்கு வந்தால் பெறக்கூடிய கஷ்டங்களை சொல்லிவிட்டீர்கள். உண்மையான கஷ்டங்கள் தான். இந்தியா விடுமுறை தேசமானதும் வருத்தமான உண்மைதான்....

Chitra said...

அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார்.
...Interesting.....என் நட்பு வட்டாரத்தில், இது மாற்றி நடந்து கொண்டு இருக்கிறது.

bandhu said...

எதையுமே generalise செய்வது தவறு என்று நினைக்கிறேன். என் நண்பர் அமெரிக்காவிலிருந்து லண்டனில் வேலைக்காக சென்று பிடிக்காமல் வந்து விட்டார். (தமிழர் தான்) இந்தியாவில் நீங்கள் சொன்ன எல்லா பிரச்சனைகளும் இருப்பது உண்மை தான். ஆனால், we are not one of them என்று வெளி நாடுகளில் தோன்றுவது போல் இந்தியாவில் தோன்றுமா? அதே போல், வயதானவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். Again, we should not be genaralizing any thing, I think.

எஸ்.கே said...

நல்ல கட்டுரை!

Thekkikattan|தெகா said...

வெ.இரா, ரொம்ப உணர்ந்து எழுதப்பட்ட கட்டுரை! உங்களுடைய ஒளிவு மறைவற்ற விசயப் பகிர்தல் இதனை வாசிக்க நேரிடும் பல பேருக்கு உதவலாம். கிட்டத்தட்ட உங்க வெளிநாட்டின் பின்னணி புலத்தில் அமைத்துக் கொண்டதுதான் என்னுடைய வெளிநாட்டு வாழ்வும்...

அப்படியே இங்கயும் பாருங்க தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம்

Thekkikattan|தெகா said...

இதன் பொருட்டு நிறைய பேசவிருக்கிறது. புலம் பெயரும் குழுக்களை இருவிதமாக பிரிக்கலாம்: அ) பணத் தேவையையும், வாய்ப்புகளையும் அடிப்படையாக கொண்டு வந்தவர்கள் ஆ) மற்றும் ஊரிலிருக்கும் பொழுதே எல்லா வசதிகளையும் கொண்டு வாழ்ந்திருந்தாலும் பல சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வருபவர்கள் என்று பிரிக்கலாம்.

எனவே, வெளிநாட்டிலேயே தங்கிவிடல் என்பது ஒவ்வொருவரின் தேவையையும், எக்ஸ்போசர்களையும் பொருத்தே அமைகிறது என்பேன். அது வயதிற்கு வயதுகூட வித்தியாசப் படலாம். முதல் குழுவிற்கு உள்ள பிரச்சினைகள் -குழந்தைகள் பிறந்து அது ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் முன்பு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே சென்றுவிட வேண்டுமென்று புதிதாக வந்தவருக்கு வேண்டுமானால் தோன்றலாம், ஆனால் குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பின்பு அவைகளின் விருப்பத்திற்கிணங்க தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளும் படியாக போய்விடுவதுண்டு.

அப்படியே சில காலங்கள் கடந்து, அந்தக் குழந்தைகள் கல்லூரி வயதை எல்லாம் எட்டும் பொழுது பெற்றோர்களின் விருப்பம் ரொம்ப்பவேஏஏ பின் தள்ளப்பட்டிருக்கும்; பிறகு அந்தக் குழந்தைகள் அங்கயே மணந்து பிள்ளைகளும் பெற்றுக் கொண்டால் - எந்த ஊர் சொந்த ஊர், அதுகளுக்கு இது போன்ற கேள்விகளே கிடையாது.

இதுக்கு மாறாக வேறு மாதிரியான பின்னணியில் இரண்டாம் குழு மக்களும் இருக்காங்க... அது அடுத்த பின்னூட்டத்தில் :)

Thekkikattan|தெகா said...

இரண்டாவது வகை, தேர்ந்தெடுப்பின் பொருட்டு (choice) நாட்டை விட்டு வெளியேறியவர்கள். அவர்களுக்கு தான் வாழ்ந்து வரும் நாட்டில் தனக்கு இருக்கும் செல்வாக்கிற்கிணையாக வாழ்க்கைத் தரத்தினை பெற முடியவில்லை என்று (அது சுகாதார அடிப்படையான தண்ணீர், காற்று, இட நெருக்கடியையொட்டி வசதியின்மை போன்றவைகளும், அரசியல் சித்தாந்தங்களும் ஒத்து வராமல்) வரும் பொழுதே இங்கே சிவப்புக் கம்பளத்தில் வந்து இறங்கி வாழ்க்கை அமைத்துக் கொள்பவர்கள். இவர்களின் பார்வை ரொம்பத் தெளிவானது. அங்கே கேள்விக்கே இடமில்லை திரும்பிப் போவதா, இங்கயே இருப்பதா என்றெல்லாம் ஏனெனில் எது வேண்டுமோ அதனை நினைத்த மாத்திரத்தில் அமைத்துக் கொள்ள முடியும்.

இதனில் முதல் முறையாக வலசை வந்தவர்களே மிக்க கலக்கதினூடேயே தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்து பிறகு குழந்தைகள் பெரிதானவுடன் ஒரு நிலையை அடையும் கூட்டம், அப்பொழுதும் அங்கே நிகழ்ந்திருப்பது என்னவோ சமரசமாகத்தான் இருக்குமென்று எண்ணச் செய்கிறது. ஆனால், அவர்களின் குழந்தைகள் தனக்கு என்னவாக இருக்க வேண்டுமென்ற தெளிவை எட்டியிருப்பார்கள் ஓட்டத்தினுடன் ஓடியே.

என்ன சொல்லுறீங்க, வெ. இரா?

Unknown said...

UK/London is a dump compared to US. Also the pay is not great but living is more expensive. For example if you are a software engineer you may make atmost 60-70k pounds fulltime but a basic flat costs 300k. In US, you can easily earn 100k and buy a big spacious house (2-3 times bigger than the UK flat) for 300k USD in most places. If you are a doctor the pay difference is still steep.

Except for easy visa (thanks to screwed up immigration polices of US) there is no reason for indians to go to UK. Hopefully US will soon have a improved immigration system (points based) like UK or canada.

Unknown said...

BTB, the weather is also better in US :)

வருண் said...

***அதே பாபு சொன்னார். அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார். அது ஒரு விதத்தில் உண்மைதான். இந்தியா செல்ல வேண்டுமென எவருமே இங்கே தங்கி விட்டவர்கள் விரும்புவதே இல்லை. அப்படி செல்ல வேண்டும் என அவர்கள் சொன்னாலும் உள்ளத்தின் ஓரத்தில் அட இந்தியாவா என்றுதான் இருக்கும்.***

If you ask me, it is hard for me to survive in India as I find people/politicians live there are scary there. Moreover, I dont have to deal with bacteria or corruption -for which Indian bros and sis are immune but I am not- in my everyday life.

I am not claiming that I am the most honest person in the world. I am just saying, one need to be more smart and ready to corrupt and get corrupted to live in India.

Yeah, India is my mother land and I was born there and I should love India. Fine.

Even social life also getting screwed up in India these. People like kushboo and Charu N are becoming popular and worshiped by the younger generation. So our culture is no longer there as you could see. Tell me what else I miss in India by not living there besides bacteria and corruption?

I am ready to debate with any patriot on this!

வருண் said...

888Gopi said...

UK/London is a dump compared to US. Also the pay is not great but living is more expensive. For example if you are a software engineer you may make atmost 60-70k pounds fulltime but a basic flat costs 300k. In US, you can easily earn 100k and buy a big spacious house (2-3 times bigger than the UK flat) for 300k USD in most places. If you are a doctor the pay difference is still steep.**

PU:

And who guarantees your 100K job for you another 30 years? Is that obama or bush or GOPI himself? The late immigrants dont know what US life is. In a long term, US life is much more challenging than living in India.

பவள சங்கரி said...

No comments except tears...........God Bless U All!

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, வாழத்தான் வேண்டும் எனும் கட்டாய நிலை வரும்போது கொள்கை பிடிப்பு எல்லாம் உதவாது ஐயா. வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை இந்தியாவில் சென்று வாழுங்கள் என வலுக்கட்டாயமாக அனைவரையும் அனுப்பி வைத்தால் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தற்கொலை பண்ணிக்கொள்ள மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இந்த நிலை வராது என்றே கொள்வோமாக.

மிக்க நன்றி சித்ரா. நினைப்பு மட்டும் இருக்கிறதோ என்னவோ? எனக்கு தெரிந்து என் சகோதரர் பல வருடங்களாக அமெரிக்காவில்தான் இருக்கிறார். அதைப்போல என் நண்பர்கள் பலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

மிக்க நன்றி பந்து. கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் தான். பொதுவாக சொல்வது என்பதில் பல உண்மைகள் மறக்கடிக்கப்படுகின்றன.

மிக்க நன்றி எஸ். கே.

மிக்க நன்றி தெகா. விரைவில் மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்துவிட்டு கருத்திடுகிறேன்.

ராஜ நடராஜன் said...

தருணம் கிடைக்கும் போது ஒரு முறை பின்னோக்கி இடுகைகளைப் படிக்கிறேன்.

இப்போதைய இந்திய மனித மனோபாவங்கள்,இந்திய வாழ்க்கையை விடுமுறைக்குப் போகாமல் சில வருடங்கள் கழித்தால் மட்டுமே கருத்து சொல்ல இயலும்.

முந்தைய காலகட்டங்களில் மனித உறவுகள்,நட்பு இந்தியாவில் சிறப்பாக இருந்தது.தமிழகத்தில் நட்பு என்ற உறவு நீங்கள் எங்கேயிருந்தாலும் பிரதிபலன்கள் இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.அப்படி கிராம,சிறு நகரப்புறங்களிலிருந்து பெரும்பாலும் இளைஞர்கள் ஒரு சில துணிமணிகளுடன் சென்னை கவர்ச்சி,வேலை சந்தர்ப்பம்,புதிய முயற்சி உந்துதலாலும் மட்டுமே சென்னை போவார்க்ள்.அப்படி போகிறவர்கள் நட்பு என்ற வட்டத்துக்குள் சிக்குபவர்கள் கொஞ்சம் நாள் சிரமப்பட்டு வாழ்க்கையில் இந்தியாவில் முன்னுக்கு வருவதற்கும் வெளிநாடு போவதற்கும் வாய்ப்புகள் உண்டு.வெளிநாட்டில் சுய திறமைகளின் அடிப்படையிலான வாழ்க்கை மட்டுமே.

தனி மனித ஒழுக்கங்கள்,அரசியல் சுயநலங்கள் கிராமங்களுக்கு கல்வி ஏனைய நலன்கள் போய் சேராமை,ஜாதி,மதம் போன்றவை முன்னேறாமல் காலை வாரி விடும் விசயங்கள் என கருதுகிறேன்.

இதுல ஜனத்தொகை சம பங்கீடு Distribution தகராறும் சேரும் எனலாம்.

ராஜ நடராஜன் said...

//இந்தியாவை பொன்னான இந்தியாவாக மாற்ற என்னால் முடியாது போனது போல பலராலும் முடியாது போய்விட்டிருக்க கூடும்.//

எந்த நாட்டிலும் இதற்கென்று தங்கம்,வெள்ளியா மாற்ற மெனக்கெடுபவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன்.ஒரு தேசம்,அதன் சட்ட திட்டங்கள்,கட்டமைப்பு,பொருளாதாரம் அனைத்து மக்களையும் போய்ச்சேர வேண்டும் என்ற அகண்ட பார்வை நாட்டை நடத்துபவர்களுக்கும் அந்த மனிதர்கள் மீதான நம்பிக்கை குடிமக்களுக்கும் வரவேண்டும்.அதற்கான சூழல் எந்த காலகட்டத்திலும் இருந்ததேயில்லை என்பது வரலாறு.அரச வாழ்க்கை சொகுசுகள்,தனி மனித தேவைகளின் நிராகரிப்பும்,கைப்பற்ற இயலும் என்ற தொடர் படையெடுப்புக்கள் என இந்திய சரித்திரம் இந்தியா,பாகிஸ்தான்,சீனா,இப்பொழுது இலங்கை என்ற கோணத்தில் நகர்கிறது.லஞ்சம் என்ற சொல் மக்களிடம் எதிர் எண்ணங்களை தோற்றுவிக்கிறது.

இருப்பதையெல்லாம் டாங்கி,பீரங்கிக்கு முதலிடம் கொடுத்தால் ஏனைய அடிப்படை வசதிகள் பின் நின்று போய் விடுகின்றன.வெளிநாடு போவோருக்கு முதலில் கிடைப்பது இந்தியாவில் கிடைக்காத அடிப்படை வசதி.நாம் இங்கே இந்த விதத்திலாவது விவாதித்துக் கொண்டிருந்தால் அறிவுஜீவி பட்டை,கட்சித் தலைவன் என்ற நாமம்,மதம் வளர்ப்போர் சங்கம் என்று முந்தாநாள் மைக்கைப் பிடித்துக்கொண்டு தமிழகத்தில் தொண்டை கிழிய அயோத்தி தீர்ப்புக்கு எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளங்குமா:(

Unknown said...

//லண்டன். படித்தவர்களா, இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என வரையறை வைத்து கொள்ளாத வெட்கப்படாத பூமி இது. துபாயில் சென்று ஒட்டகம் மேய்த்தான் என நக்கல் பண்ணாத பூமி இது. அபுதாபியில் கழிவறையை சுத்தம் செய்கிறான் என கௌரவம் பேசாத சுத்தமான பூமி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்து பேசாத பூமி.//

இந்தியர்களை 'பாக்கிஸ்' னு கேவலமா சொல்றாங்களே, அது இந்த லண்டன் இல்லையா?

ஒவ்வொரு நாட்டிலும், நல்லது கெட்டது இருக்கிறது. அமெரிக்கா, யு.கே இந்த நாடுகளெல்லாம் சொர்க்கங்கள், இந்தியாவில் மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது மாதிரியான ஒப்பீடுகள் முட்டாள்தனமானவை. அந்த நாடுகள் பணத்தை மட்டுமே முதன்மையாக பார்க்கும் நாடுகள். அதனால், மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில், அடிப்படைப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இந்தியர்களும், பணம்தான் பிரதானம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் (ஏற்கனவே ஆரம்பித்தாகிவிட்டது) மற்ற பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டு, 'முன்னேறிய' நாடாக மாறிவிடும்!!

பி.கு: கண்மூடித்தனமான இந்திய நாட்டுப்பற்றின்காரணமாக இதை சொல்லவில்லை! வெளிநாடுகளில் சுமார் 16 வருட காலம் இருந்திருக்கிறேன். 10 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். வெளிநாடுகளில் நிறைய கெட்டவிஷயங்களும் உண்டு.இந்தியாவில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு!!எல்லாம் தனி மனித விருப்பங்கள்!

Radhakrishnan said...

//புலம் பெயரும் குழுக்களை இருவிதமாக பிரிக்கலாம்: அ) பணத் தேவையையும், வாய்ப்புகளையும் அடிப்படையாக கொண்டு வந்தவர்கள் ஆ) மற்றும் ஊரிலிருக்கும் பொழுதே எல்லா வசதிகளையும் கொண்டு வாழ்ந்திருந்தாலும் பல சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வருபவர்கள் என்று பிரிக்கலாம்.//

மிகவும் சரியே தெகா. மிக சிறந்த கண்ணோட்டம்.

//இரண்டாவது வகை, தேர்ந்தெடுப்பின் பொருட்டு (choice) நாட்டை விட்டு வெளியேறியவர்கள்.

இவர்களின் பார்வை ரொம்பத் தெளிவானது. அங்கே கேள்விக்கே இடமில்லை திரும்பிப் போவதா, இங்கயே இருப்பதா என்றெல்லாம் ஏனெனில் எது வேண்டுமோ அதனை நினைத்த மாத்திரத்தில் அமைத்துக் கொள்ள முடியும்.

இதனில் முதல் முறையாக வலசை வந்தவர்களே மிக்க கலக்கதினூடேயே தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்து பிறகு குழந்தைகள் பெரிதானவுடன் ஒரு நிலையை அடையும் கூட்டம், அப்பொழுதும் அங்கே நிகழ்ந்திருப்பது என்னவோ சமரசமாகத்தான் இருக்குமென்று எண்ணச் செய்கிறது. ஆனால், அவர்களின் குழந்தைகள் தனக்கு என்னவாக இருக்க வேண்டுமென்ற தெளிவை எட்டியிருப்பார்கள் ஓட்டத்தினுடன் ஓடியே.

என்ன சொல்லுறீங்க, வெ. இரா?//

மறுப்பதற்கு எதுவும் இல்லை தெகா. மிகவும் சரியான பார்வை. அதே வேளையில் இரண்டாம் நிலையில் இருப்பவர்களின் குழந்தைகளில் சிலர் இந்தியாவை விரும்புவது உண்டு. குறிப்பாக எனது மகனுக்கு இந்தியா மிகவும் பிடிக்கும். காரணம் படிக்க வேண்டியது இல்லை. இப்படி ஒவ்வொரு காரணம் கொண்டும் வாழ்க்கை அமைந்து விடுகிறது.

வயதானவர்கள் பலர் இந்தியாவில் சென்று வாழ விருப்பப்படுகிறார்கள். அப்படி போனவர்கள் வெகு சிலரே. இங்கு தரப்படும் இலவச மருத்துவ வசதிகள் மாத்திரைகள், பணம் எல்லாம் அந்த வயதானவர்களையும் கட்டி போட்டு இருக்கிறது எனலாம்.

இன்னும் எத்தனையோ விசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் கொடுத்த இணைப்பை பார்வையிட்டு விடுகிறேன் விரைவில். மிக்க நன்றி.

Radhakrishnan said...

ஹா ஹா கோபி. நான் எதற்கு வெளிநாட்டிலேயே இருக்கிறார்கள் என சொன்னால் லண்டனை குப்பை என வர்ணித்து விட்டீர்கள். நீங்கள் சொன்னதில் முழுவதும் உண்மை இல்லை என சொல்லமாட்டேன். அமெரிக்கா நன்றாகத்தான் இருந்தது, இந்தியாவும் நன்றாகத்தான் இருந்தது. எனினும் லண்டன் விட்டு செல்லும் எண்ணம் இல்லை. பார்க்கலாம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி வருண். தங்கள் கருத்துகளுக்கு மாற்று கோணத்தில் ஒரு பார்வையை தஞ்சாவூரான் வைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை உதறி தள்ளிவிட்டு வாழ்பவர்கள் உண்டு. எனது அன்னை எங்களது ஊரை விட்டு வெளியே சென்ற தொலைவு மதுரை மட்டும் தான் என நினைக்கிறேன். எனது தந்தை லண்டனை ஒரு விடுமுறை இடமாகத்தான் பார்க்கிறார். அவருக்கு இங்கு தங்கும் எண்ணம் எல்லாம் இல்லை.

தனக்கு தன் தாய் நாடு பெரிது என நினைக்கும் பாபு போல இந்தியாவில் பலர் உண்டு.

Radhakrishnan said...

மிகவும் வருந்துகிறேன் சிப்பிக்குள் முத்து. மிக்க நன்றி.

//முந்தைய காலகட்டங்களில் மனித உறவுகள்,நட்பு இந்தியாவில் சிறப்பாக இருந்தது.தமிழகத்தில் நட்பு என்ற உறவு நீங்கள் எங்கேயிருந்தாலும் பிரதிபலன்கள் இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.//

இதை நான் முழுவதும் தவிர்த்தேன் ராஜ நடராஜன். இந்த பார்வையை வெளிநாட்டில் இருப்பவர்கள் பலர் சொல்கிறார்கள் என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஊரில் இருப்பவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது போல வாசகங்கள் அடிக்கடி கேள்விப்பட்டதுண்டு.

//வெளிநாடு போவோருக்கு முதலில் கிடைப்பது இந்தியாவில் கிடைக்காத அடிப்படை வசதி//

இதுதான் அடிப்படை காரணமாக இருக்கும் என்பதை சுற்றியே எனது எண்ணங்கள் வந்திருப்பதை காணலாம். மிகவும் அழகாகவே விவரித்து இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

கையேடு said...

நல்லதொரு சுயபரிசோதனைக் கட்டுரை வாசிக்கும் அனுபவம் கிடைத்தது.

Radhakrishnan said...

மிக்க நன்றி தஞ்சாவூரான். தங்கள் கருத்துகளை மிகவும் போற்றுகிறேன்.

//இந்தியர்களை 'பாக்கிஸ்' னு கேவலமா சொல்றாங்களே, அது இந்த லண்டன் இல்லையா?//

என்னை இதுவரை எவரும் அப்படி சொன்னதே இல்லை. இதற்காக எவரையுமே இப்படி சொன்னதில்லை என்று ஆகிவிடாதுதான். நாம் நடந்து கொள்ளும் முறையில் இருக்கிறது நாம் பெற்று கொள்ளும் மதிப்பும் மரியாதையும். பொதுவாக பாகிஸ்தானியர்களை குறிக்க வந்த சொல் அது. ஆப்பிரிக்கர்களை குறிக்க வந்த சொல் எப்படி இனவாதமாக பார்க்கப்படுகிறதோ அதுபோலத்தான் அந்த சொல்லும். தனி மனிதனின் உணர்வுகளை பதம் பார்க்கும் விசயங்கள் பல உண்டு என்பதை நான் எதற்கு மறுக்க போகிறேன்.

//ஒவ்வொரு நாட்டிலும், நல்லது கெட்டது இருக்கிறது. அமெரிக்கா, யு.கே இந்த நாடுகளெல்லாம் சொர்க்கங்கள், இந்தியாவில் மட்டும்தான் பிரச்சினைகள் இருக்கிறது என்பது மாதிரியான ஒப்பீடுகள் முட்டாள்தனமானவை.//

:) முட்டாள்தனமான பார்வையில்தான் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்களோ என்னவோ? அன்றாட வாழ்க்கைக்கு எது தேவையோ அதை செய்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம் என்பது கூட ஒரு வகையில் முட்டாள்தனம் என்றே கருதுகிறேன்.

//அந்த நாடுகள் பணத்தை மட்டுமே முதன்மையாக பார்க்கும் நாடுகள். அதனால், மற்ற விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.//

பணத்தின் பின்னால் அலைகிறார்களா? அது சரி தான்.

இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் ஒரு இலக்கியம் படைக்கப்பட்டது. அந்த இலக்கியம் இந்தியாவில்தான் படைக்கப்பட்டது அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில். பாதி வரிகளை எழுதுகிறேன்.

பொருளிலாருக்கு இவ்வுலகம் இல்லை.

அதற்கு பின்னர் மிகவும் பகிரங்கமாகவே அறிவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு.

யார் பணத்தில் பின்னால் அலைய வேண்டாம் என சொன்னார்கள்? சிவனே என மரத்தடியில் அமர்ந்து மரத்தை வைச்சவன் தண்ணீர் ஊற்றுவான் என பாடிக் கொண்டே இருக்கலாமே.

பணமே வாழ்க்கை அல்ல. இன்றைய கால கட்டம் பணம் இருந்தால் தான் வாழ்க்கை. நீங்கள் வெளிநாட்டில் சென்று வாழ்ந்ததே அதற்கு அத்தாட்சி.


//இந்தியாவில், அடிப்படைப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இந்தியர்களும், பணம்தான் பிரதானம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் (ஏற்கனவே ஆரம்பித்தாகிவிட்டது) மற்ற பிரச்சினைகள் பின்தள்ளப்பட்டு, 'முன்னேறிய' நாடாக மாறிவிடும்!!//

யார் நினைக்க வேண்டாம் என சொன்னது, சொல்லுங்களேன். பணம் மட்டுமே பிரதானமாக பார்த்தால் மட்டும் போதாது. ஒழுங்குமுறை வேண்டும். அந்த ஒழுங்குமுறை எனக்கு இந்தியாவில் எப்போது வரும் என தெரியாது. அடிப்படை பிரச்சினைகள் அல்ல, அவை எல்லாம் இந்தியாவின் உயிரையே ஆட்டி படைக்கும் பிரச்சினைகள்.

//பி.கு: கண்மூடித்தனமான இந்திய நாட்டுப்பற்றின்காரணமாக இதை சொல்லவில்லை! வெளிநாடுகளில் சுமார் 16 வருட காலம் இருந்திருக்கிறேன். 10 நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் சொல்கிறேன். வெளிநாடுகளில் நிறைய கெட்டவிஷயங்களும் உண்டு.இந்தியாவில் நிறைய நல்ல விஷயங்களும் உண்டு!!எல்லாம் தனி மனித விருப்பங்கள்!//

கடைசியில் முடித்தீர்கள் இல்லையா இதுதான் இந்த கட்டுரைக்கே அடிக்கல். அப்படி பார்த்தால் இந்தியாவில் நிறைய கெட்ட விசயங்கள் இருக்கிறது போல என நினைத்து விடப் போகிறார்கள், அதனால்தான் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பி போக மறுக்கிறார்களோ என்னவோ!

எனக்கு இந்தியாவின் மீது பற்று உண்டு என்பதை எங்கும் மறுக்கவும் மாட்டேன், வெறுத்து ஒதுக்கவும் மாட்டேன். நான் கொஞ்சம் ஒரு படி மேலே சென்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்ல பழகி கொண்டேன்.

ராம்ஜி_யாஹூ said...

i fully agree with you

வருண் said...

****மிக்க நன்றி வருண். தங்கள் கருத்துகளுக்கு மாற்று கோணத்தில் ஒரு பார்வையை தஞ்சாவூரான் வைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை உதறி தள்ளிவிட்டு வாழ்பவர்கள் உண்டு.***

I have not read what thanjavoorkaaran said. I will look into that later.

I am saying that that (living in india) does not make them patriots either. They are easily able to accept the ever-growing corruption and cultural changes in an ugly manner and they could ENJOY that. Please note, I am including my relatives as well here.

***எனது அன்னை எங்களது ஊரை விட்டு வெளியே சென்ற தொலைவு மதுரை மட்டும் தான் என நினைக்கிறேன். எனது தந்தை லண்டனை ஒரு விடுமுறை இடமாகத்தான் பார்க்கிறார். அவருக்கு இங்கு தங்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ***

My parents are worse. They do what is best for them with the knowledge they have. I do what I think is best for me with the knowledge I gained. I only have a problem when people those who live in india say that their choice is better. In fact, their lifestyle these days is worse than mine. They could not control anything and they just go with the flow. I cant accept that they are superior in any way. Neither do I claim I am better than them as long as they do not finger at me! :)

Radhakrishnan said...

மிக்க நன்றி கையேடு. மிக்க நன்றி ராம்ஜி. மிக்க நன்றி வருண், புரிந்து கொள்ள முடிகிறது.

அது சரி(18185106603874041862) said...

First time here. Well said. in fact, very well said.

Unknown said...

//என்னை இதுவரை எவரும் அப்படி சொன்னதே இல்லை. இதற்காக எவரையுமே இப்படி சொன்னதில்லை என்று ஆகிவிடாதுதான். நாம் நடந்து கொள்ளும் முறையில் இருக்கிறது நாம் பெற்று கொள்ளும் மதிப்பும் மரியாதையும்.//

அப்போ, இந்தியர்கள் லண்டனில் கேவலமாக நடந்து கொள்கிறார்களா?

//:) முட்டாள்தனமான பார்வையில்தான் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்களோ என்னவோ?//

நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள். அங்கு அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாரும் வாயைத் திறப்பதில்லை :)

//பணமே வாழ்க்கை அல்ல.//

நான் சொல்ல வருவதும் அதுதான். பணம் மற்றுமே குறிக்கோள் எனும் சுயநல வாழ்க்கைதான் பெரும்பாலோனோர் அங்கே வாழ்கிறார்கள்!

//ஒழுங்குமுறை வேண்டும். அந்த ஒழுங்குமுறை எனக்கு இந்தியாவில் எப்போது வரும் என தெரியாது.//

ஒழுங்குமுறை இருப்பதாக நாம் நம்பும் நாடுகளில்தான் வாரம் ஒரு முறை 'துப்பாக்கித் திருவிழா' நடக்கிறது. தினமும் ஒரு வங்கி மூடப்படுகிறது. மாபெரும் ஊழல்கள் நடக்கின்றன. வெள்ளையர் அல்லாத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள்!

//அதனால்தான் இந்தியர்கள் இந்தியாவிற்கு திரும்பி போக மறுக்கிறார்களோ என்னவோ! //

வெளிநாட்டுக்குப் பிழைக்கப் போவதும், திரும்பி வருவதும் வராமல் இருப்பதும் அவரவர் உரிமை. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி சென்று விட்டு, அங்குள்ள பிரசினைகளைப் பற்றிப் பேசாமல், இந்தியாவில் இது நொள்ளை அது நொட்டை என்று சொல்பவர்களைத்தான் சாடுகிறேன். முதலில் அவர்கள் இருக்கும் நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பிரசினைகளைக் களையட்டும், அதற்கப்புறம் இந்தியாவைப் பற்றி பேசட்டும்.

//எனக்கு இந்தியாவின் மீது பற்று உண்டு என்பதை எங்கும் மறுக்கவும் மாட்டேன், வெறுத்து ஒதுக்கவும் மாட்டேன்.//

மகிழ்ச்சி.

//நான் கொஞ்சம் ஒரு படி மேலே சென்று யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்ல பழகி கொண்டேன்.//

பழகித்தான் ஆக வேண்டும். இது தமிழர்களுக்கு/இந்தியர்களுக்கு என்று மட்டுமே ஆன சொல்!!

நான் இந்தியாவை உயர்த்தியோ, பிரசினைகளை மறுத்தோ பேசவில்லை. நிறைய பிரசினைகள் உள்ளன. அரசியலும், சினிமாவும், சமூகப் பிரச்சினைகளும் சாக்கடைகள் போல்தான் இருக்கின்றன. அதை சுத்தம் செய்யும் பொருட்டு, தனி மனித அளவில் ஏதேனும் செய்ய முயற்சிப்பதை விட்டு விட்டு, எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டு இங்குள்ள பிரசினைகளைப் பற்றி பேசுபவர்களைத்தான் குறை சொல்கிறேன்.

அவர்கள் குறை சொல்லலாம். ஏனென்றால், கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், வெங்கட்ராமன், பாபி ஜிண்டால் போன்றவர்களைத் தூக்கிக் கொண்டாடும் இந்தியர்கள், நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாலபிஷேகம் செய்யும் இந்தியர்கள் இருக்கும் வரை யார் எங்கு இருந்தும் குறை சொல்லலாம்....

Unknown said...

நான் முன்பு இட்ட பின்னூட்டம் இரண்டு முறை வந்து விட்டது. நீக்கிவிட்டேன். நன்றி!!

Vidhya Chandrasekaran said...

உங்கள் பக்கத்தை அழகாக எடுத்துரைக்கும் கட்டுரை.

\\வெளிநாட்டுக்குப் பிழைக்கப் போவதும், திரும்பி வருவதும் வராமல் இருப்பதும் அவரவர் உரிமை. அதை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படி சென்று விட்டு, அங்குள்ள பிரசினைகளைப் பற்றிப் பேசாமல், இந்தியாவில் இது நொள்ளை அது நொட்டை என்று சொல்பவர்களைத்தான் சாடுகிறேன்.\\

அதே. இப்போதிருக்கும் நிலையில் வெளிநாடு போக வரும் வாய்ப்பை வேண்டாமென சொன்னோம் எனக் கூறினால் இழிவாகப் பார்க்கிறார்கள்.

எல்லா ஊரிலும் நிறை குறைகள் உண்டு. வெளிநாடு சென்றதும் இந்தியாவில் தான் இப்படி எனக் குறைகூறும் மனோபாவம் ஏன் வருகிறதெனத் தெரியவில்லை.

அவரவர்க்கு அவரவர் நியாயம்.

மோகன்ஜி said...

அவ்வை சொன்னாள் அன்றே! " திரைக் கடல் ஓடியும்
திரவியம் தேடு"
உங்கள் ஒளிவு மறைவற்ற பட்டவர்த்தனமான பதிவு , பல ஆதாரமான கொள்விகளை எழுப்புகிறது.
நீங்கள் சொல்வது கூட ஒரு விதத்தில் உண்மை தான்..
என் தாயின் முகத்தில் சுருக்கங்கள்.. சில பழகு
முறைகளும் காலத்திற்கு ஒவ்வாதவை.. என் அலுவலக ஸ்டெனோ பளபளவென்று நாகரீகமாய் இருக்கிறாள்..
ஸ்டெனோ என் தாயாக முடியுமா?

Radhakrishnan said...

மிக்க நன்றி தஞ்சாவூரான் அவர்களே. நீங்கள் சொல்வது உண்மைதான், வெளிநாடு என்றால் எல்லாம் நன்றாக இருக்கும் எனும் கனவு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. பணம் என்பதால் பல விசயங்களை நினைவில் கொள்வதில்லை.

மிக்க நன்றி வித்யா. நிறைகளை பார்க்க தவறுவதால் குறைகள் தெரிகிறது என்றே கருதுகிறேன்.

மிக்க நன்றி மோகன்ஜி. அருமையான விளக்கம். சரியில்லை என்பதற்காக பல விசயங்களை நாம் உதறிவிடுவதில்லை தான்.

Radhakrishnan said...

மிக்க நன்றி அதுசரி.

Unknown said...

Varun, no one can guarantee anyone's job. In fact i am not sure what will happen to the software jobs in india once the the outsourcing benefits disappear (either by tax policy or when the indian salary rises with inflation) after 10-15 years!

Radahkrishnan, i was just writing from my experiences living in US and visiting london!

Radhakrishnan said...

மிக்க நன்றி கோபி.

கதிர்கா said...

இந்தியாவில் குறைகள் உண்டு. அமெரிக்காவிலும் குறைகள் உண்டு. விசா என்று ரிஜக்ட் ஆகுமோ, க்ரீன் கார்டு கிடைக்குமோ, காண்டிராக்ட் வேலை போய் விடுமோ, கடைசி காலம் எப்படி இருக்குமோ என்று பலப்பல கேள்விகள் இங்கும் உண்டு. எந்த இடமும் நிலையானது இல்லை என்பதே என் கட்சி. எந்த ஊரும் உயர்ந்ததும் இல்லை. எந்த ஊரும் தாழ்ந்ததும் இல்லை. இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை தேடுவோம்.

Radhakrishnan said...

மிக்க நன்றி கதிர்கா. இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை தேடுவோம். அருமை.