Thursday 14 October 2010

எனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.

எத்தனை வருட கனவு?  எத்தனை வருட சிந்தனை? தலைப்பு மட்டுமே கையில் இருந்தது?  எதை பற்றி எழுத?

எப்பொழுது பார்த்தாலும் இறைவன் பற்றிய சிந்தனை, அன்பு பற்றிய ஆதிக்க சிந்தனை, உலகில் கஷ்டபடும் கோடானுகோடி மக்களை பற்றிய சிந்தனை.

இதுவரை என்னால் எழுதப்பட்ட கதைகள் எல்லாம் அன்பை வலியுறுத்தும் வண்ணமே அமைந்து இருந்தது.

ஆங்கில நாவலுக்கு தலைப்பு வைத்த பின்னர் கூட இறைவன் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. தலைப்பை பிறரிடம் சொல்லும்போதெல்லாம் 'எங்களுக்கு தெரியும் நீ எதைப் பற்றி எழுதப் போகிறாய் என' என்றே சொன்னார்கள். இறைவன் பற்றிய சிந்தனையை ஆங்கில நாவலிலும் நான் எழுதுவேன் என்பதை எப்படி அவர்கள் தீர்மானித்தார்கள் என தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த மொழி அதுதான். இறை எனும் அன்பு மொழி.

இறைவனை விட்டு வெளியில் வர வேண்டும். என்னால் அத்தனை எளிதாக வெளி வர இயலாத சூழல். அன்பை பற்றிய எண்ணம் தனை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். எல்லோரும் அன்பாகத்தான் இருக்கிறார்கள், எனது பார்வை மட்டுமே முட்டாள்தனமாக இருக்கிறது எனும் எண்ணம் என்னுள் நிகழ வேண்டும். இப்படி பல நாட்கள் சிந்தித்த போதெல்லாம் எதுவுமே தோன்றுவதில்லை. கதை கரு இல்லாமல் நான் இனிமேல் தமிழ் நாவலோ ஆங்கில நாவலோ எழுதுவதில்லை என்பதை முடிவு செய்து வைத்திருந்தேன். அதனால்தான் தமிழ் நாவல் ஒன்று 'புதைக்க வா, எரிக்க வா' இன்னும் காத்து கொண்டிருக்கிறது. கதை கரு தயாராக இருந்தாலும் ஆங்கில நாவல் தான் அடுத்த இலக்கு.

இந்த  ஆங்கில நாவலுக்கு இத்தனை சிந்தித்தேன் என நினைக்கும்போதுதான் எனது நுனிப்புல் நாவல் மூன்றாம் பாகத்துக்கான அடிப்படை கருவாகவும் வைத்து கொள்ளும் சாத்தியம் இருந்தது என கண்டு கொண்டேன். இந்த சிந்தனை நேற்றுதான் எழுந்ததா? பல நாட்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் திடீரென வெளி வந்ததா? நான் என்ன எழுத நினைத்தேன் என எழுதி முடித்தால்  மட்டுமே தெரியும் . ஒரு சின்ன விசயத்தை வைத்து அதை சுற்றி பாத்திரங்கள் வரைவதுதான் நான் கற்றுக் கொண்ட எழுத்து முறை. இப்படித்தான் பல மெகா தொடர்கள் எல்லா மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.

எதற்கு ஆங்கில நாவலுக்கு இத்தனை முன்னுரிமை? கனவு. கனவு மட்டுமே காரணம். தமிழ் மொழி வழியில் கற்று கல்லூரியில் எல்லா பாடங்களும் ஆங்கிலம் என்றபோது பாட புத்தகத்தில் ஆங்கில சொல்லின் மேல் தமிழ் எழுதி கற்று வாழ்ந்த வாழ்க்கை, ஆங்கிலம் என்றாலே பெரிய விசயம் எனும் கிராமத்து எண்ணம் உள்ளுக்குள் குடிகொண்ட கொடுமை. இதையெல்லாம் உடைத்து எறிந்து விட முடியாதா எனும் ஒரு ஏக்கம்.

எனது ஆராய்ச்சி நூலில் விழுந்த திருத்தல்கள் கண்டு மனம் கசிந்தது. எனது முதல் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடும் முன்னர் ஆங்கிலம்தனை சரிபாருங்கள் என்றுதான் கட்டுரை வெளியீட்டாளரிடம் இருந்து கருத்து வந்தது. ஆங்கிலம் ஒரு மொழி. எனது பெயரை பார்த்தாலே ஆங்கிலம் சரியில்லை என நான் எழுதுவதை திருத்திவிட துடிக்கும் பலரை பார்த்து இருக்கிறேன். இதன் காரணமாகவே நன்றாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் எழுதியதை நான் எழுதியதாக ஒருவரிடம் தர அவர் அதையும் திருத்தியதை கண்டு மனதுள் சிரித்து இருக்கிறேன். இது இப்படித்தான் என ஒரு முடிவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரை உலகில் புரட்சி என்பது வெறும் பேச்சுதான்.

தமிழ் வழி வந்த மாணவர்கள் பலர் நான் எழுதிய தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்னபோதெல்லாம் தமிழ் கற்று கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.

Stephen Hawking எழுதிய The Grand Design  புத்தகத்தை வெகு குறைந்த நாட்களில் படித்து முடித்துவிட்டேன். என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய அதிசயம்தான். M-Theory க்கு mental theory என அவர் வைத்து இருந்திருக்கலாம் என தோன்றியது. பல பேரறிஞர்கள் படு முட்டாளாக இருக்கிறார்கள் எனும் ஒருவருடைய கூற்று எனக்கு பழகிப் போன ஒன்று.

தமிழ் மட்டுமே ஓரளவுக்கு தெரிந்த எனக்கு இந்த ஆங்கில நாவல் எழுதப் போவது பெரும் சவால்தான். எனக்கு ஆங்கிலம் சரியாகவே தெரியாது என்பதுதான் எனது நாவலுக்கு முதல் தடைக்கல். இனிமேல் ஆங்கிலம் நன்றாக கற்று எழுதுவதென்றால் இன்னும் பல வருடங்கள் ஆகிவிடும். ஆங்கிலம் சரியாக தெரியாத எனது எண்ணத்தை எனது பலமாக எனது நாவலுக்கு வைத்துக் கொண்டால் என பலமுறை தோன்றியது உண்டு. அதை நடைமுறைபடுத்தி விடும் வாய்ப்பு இப்போது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

நுனிப்புல் பாகம் 3 பிப்ரவரி மாதம் 2012ல் எழுத இருப்பதால் அதற்குள் இந்த ஆங்கில நாவலை எழுதி முடித்து விட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே இருக்கிறது. பல ஆங்கில நாவல்களை படித்தால் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இந்த ஆங்கில நாவலை நிச்சயம் தமிழ் நூல்கள் வெளியிட்டு கொண்டிருக்கும் பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட போகிறேன். இத்தனை விசயங்கள் இங்கே பகிர்ந்த பிறகும் நான் ஆங்கில நாவல் எழுதாமல் இனியும் காலம் தாழ்த்தினால் அது எனது சோதனை காலம் அல்ல, அது சோம்பேறி காலம்.

20 comments:

எஸ்.கே said...

தங்கள் நாவல் முழுமையடையவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா said...

தங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்...

Unknown said...

என் வாழ்த்துக்களும் ...

தமிழ் உதயம் said...

நான் ஆங்கில நாவல் எழுதாமல் இனியும் காலம் தாழ்த்தினால் அது எனது சோதனை காலம் அல்ல, அது சோம்பேறி காலம்.///

உண்மை தான். முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

My best wishes

Paleo God said...

எப்பொழுது பார்த்தாலும் இறைவன் பற்றிய சிந்தனை, அன்பு பற்றிய ஆதிக்க சிந்தனை, உலகில் கஷ்டபடும் கோடானுகோடி மக்களை பற்றிய சிந்தனை.//

வெளி நாட்ல ஒரு ஆஸ்ரமம் ஆரம்பிக்கறத விட்டுட்டு...

:)

Radhakrishnan said...

மிக்க நன்றி எஸ்.கே

மிக்க நன்றி சுதா

மிக்க நன்றி செந்தில்

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா

மிக்க நன்றி ராதாகிருஷ்ணன் ஐயா

மிக்க நன்றி ஷங்கர். ஹா ஹா! நல்ல யோசனைதான்.

Chitra said...

இதுவரை என்னால் எழுதப்பட்ட கதைகள் எல்லாம் அன்பை வலியுறுத்தும் வண்ணமே அமைந்து இருந்தது.


.... Love and kindness - pass it on!!

Best wishes!!! :-)

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்...

வலசு - வேலணை said...

கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!

Vidhya Chandrasekaran said...

Best Wishes..

Radhakrishnan said...

மிக்க நன்றி அஹமது. மிக்க நன்றி வலசு. மிக்க நன்றி வித்யா.

நேசமித்ரன் said...

தங்களின் நாவல் முயற்சி பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்

தொன்மத்தை மீளுருவாக்கம் செய்யும் உங்கள் முயற்சிகள் ஈர்ப்புக்கும் பிரியத்திற்கும் உரியவை

கலாச்சாரமும் ஆன்மீகமும் பிசைந்த உங்கள் கதைமொழி வரவேற்ப்பிற்குரியது எஞ்ஞான்றும்

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

அகநாழிகை said...

எனது நல்வாழ்த்துகள் ராதா.

Unknown said...

தாய்மொழியைத் தவிர மற்றெல்லாமே மொழிகள்தானே. விளங்கவும் விளங்க வைக்கவுமான ஒரு உபகரணம்.
வாழ்த்துகள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி நேசமித்ரன்.

மிக்க நன்றி பழமைபேசி.

மிக்க நன்றி வாசு.

மிக்க நன்றி சுல்தான்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

வாழ்த்துக்கள் எழுதுங்கள் :)

//எப்பொழுது பார்த்தாலும் இறைவன் பற்றிய சிந்தனை, அன்பு பற்றிய ஆதிக்க சிந்தனை, உலகில் கஷ்டபடும் கோடானுகோடி மக்களை பற்றிய சிந்தனை. இதுவரை என்னால் எழுதப்பட்ட கதைகள் எல்லாம் அன்பை வலியுறுத்தும் வண்ணமே அமைந்து இருந்தது.ஆங்கில நாவலுக்கு தலைப்பு வைத்த பின்னர் கூட இறைவன் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. //

இந்த மனோநிலையை உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது... :)

தடைகள் அகல, தொடருங்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி.