Sunday 10 October 2010

குழந்தை ஒன்றின் காமம்

அப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது.

சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங்கள். பரிச்சயமில்லாதவர்கள். பழகுவது ஒன்றும் அவனுக்கு சிரமமாக இல்லை.

நாட்கள் நகர நகர நண்பன் என ஒருவனை சேர்த்துக் கொண்டான். அவனது பார்வை தன்னுடன் படிக்கும் ஒரு பெண் குழந்தையின் மீது பட்டது.

அழைத்தான் அந்த சின்னஞ்சிறு சிறுமியை. 'அம்மா, அப்பா விளையாட்டு விளையாடலாம் என்றான். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது.

உடன் அழைத்தான் நண்பனை. சிறுமியின் ஆடைகளை கலைத்துவிட்டு நிற்க சொன்னான். சிறுமியும் நின்றாள். இந்த நிகழ்வினை ஒரு ஆசிரியை கவனித்தார், அதிர்ச்சி அடைந்தார்.

என்ன செய்கிறாய்? என்றார் ஆசிரியை. சிறுவன் நிதானமாகவே சொன்னான். ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இது தவறு. பிறரது உடல் உறுப்புகளை இப்படி ஆராய கூடாது. அது போல உனது உடல் உறுப்புகளை பிறருக்கு காட்ட கூடாது.

புரியாத வயது. புரிந்ததா என அறிந்து கொள்ள இயலாத வயது.

அந்த சிறுவனின் அன்னையிடம் விசயம் சொன்னபோது, அன்னை கோபம் உற்றார். இது நடவாத காரியம் என சாதித்தார்.

சில நாட்கள் அமைதியாகவே சென்றது. மீண்டும் ஒரு நாள்.

தனது நண்பனை அழைத்தான். ஆடைகளை களைய சொன்னான். ஆடைகள் களைந்து நின்றான் அந்த நண்பன். அந்த சின்ன சிறு நண்பன் சொன்ன வார்த்தைகள் திடீரென அங்கு வந்த ஆசிரியையை நிலைகுலைய வைத்தது. என்ன பேசுகிறாய் என்றார் ஆசிரியை.

இதோ இவன்தான் சொல்ல சொன்னான் என ஆடைகள் கலைந்த வண்ணமே நின்றான். அவ்வாறு சொல்ல சொன்ன அந்த சின்ன சிறுவன் மீண்டும் கண்டிக்கப்பட்டான். மீண்டும் அன்னையிடம் சொல்லப்பட்டது. அன்னை மறுத்தார். அறியாத வயது. புரியாத வயது.

நாட்கள் அமைதியாக சென்றது. மீண்டும் ஒரு நாள். போர்வை ஒன்றை எடுத்தான். அழைத்தான் உடன் படிக்கும் சிறுமியை. போர்வைக்குள் நுழைந்தார்கள். அப்போது இதை கண்ட ஆசிரியை போர்வையை விலக்கி என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

சிறுமியும் சொன்னாள். எனக்கு முத்தம் கொடுத்தான் என. அதிர்ந்தார் ஆசிரியை. இது தவறு என்றார்.

அன்னையிடம் தகவல் தரப்பட்டது. எங்குமே இவன் இப்படி நடந்து கொள்வதில்லை. இங்கு மட்டும் எப்படி என நம்ப மறுத்தார்.

ஒரு விபரீதம் அந்த சிறுவனுக்குள்  நடந்து கொண்டிருக்கிறது.

எங்கிருந்து கற்றான்?

தான் செய்வது தவறு என புரியாது. எங்கிருந்து பார்த்தான் இவை எல்லாம்!

எங்குமே இப்படி நடந்து கொள்ளாதவன்? பள்ளியில் மட்டும் அப்படி நடப்பானேன். எதற்கு குழந்தையின் மீதான பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் அந்த பெற்றோர்கள்.

முளைத்து மூன்று இலை விடவில்லை என நமது ஊர் பக்கம் சொல்வார்கள். பிஞ்சிலே பழுத்துவிட்டது என பழமை பேசுவார்கள்.

யாரிடம் கற்றான்!

பெற்றோர்களா! தொலைக்காட்சி, கணினி போன்ற தொழில் நுட்பங்களா!

எதிர்கால சந்ததியினர்!!! குழந்தைகளை காம வயப்படுத்தி அவர்களது வாழ்க்கையையே பாழடிக்கும் வக்கிரம் நிறைந்த மனிதர்கள்.

குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!

(இது ஒரு உண்மை சம்பவம், குழந்தையின் வயதோ நான்கு)

கலிகாலம்டா சாமி,  கிலி பிடித்து சொல்கிறார்கள்.


17 comments:

எஸ்.கே said...

இதுபோல் நடக்க பெற்றோர்கள் முக்கிய காரணமாக உள்ளனர் நடுத்தர குடும்பங்களில்/ஒண்டுக் குடித்தனங்களில் இவை நிகழ வாய்ப்பு அதிகம். மேலும் தொலைக்காட்சி, சினிமா போன்றவை குழந்தைகள் மனதை கெடுக்கவே செய்கின்றன. இதனை தடுத்து நல்வழி கல்வி தர பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்காற்ற வேண்டும்.

Anonymous said...

தவறான வழியில் குழந்தை என்று தெரிந்தும் நம்ப மறுக்கும் அந்தத் தாயின் மனநிலை மாறவேண்டும்.
//குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!//
உங்க பரிதவிப்பு தெரிகிறது நண்பா! அனைவருக்கும் இது சென்று சேர வேண்டும்.

ஹேமா said...

என்ன சொல்லணும்ன்னு தெரில.ஆனா பயமாயிருக்கு உலகத்தை,மனிதர்களை நினைக்க !

தமிழ் உதயம் said...

குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!////

இத தவிர வேறு எதுவும் சொல்ல தோணல.

Radhakrishnan said...

அனைவருக்கும் நன்றி.

Chitra said...

யாரை குற்றம் சொல்வது? எதை குற்றம் சொல்வது? குழந்தைகளை, குழந்தைகளாக இருக்க விடுங்கள்.

Radhakrishnan said...

மிகவும் சரி, நன்றி சித்ரா

ஹுஸைனம்மா said...

//யாரிடம் கற்றான்!//

இல்லை, எனக்கென்னவோ அவனையும் யாரோ இப்படிச் செய்திருப்பாங்களோன்னு தோணுது. தெரிஞ்ச குடும்பம்னா, பையன்கிட்ட பதமா விசாரிக்கச் சொல்லுங்க.

க.பாலாசி said...

இந்த கொடுமைய என்னன்னுங்க சொல்றது... படிக்கும்போதே பத்திகிட்டு வருது.... பாவம் குழந்தைகள் வேறெப்படி சொல்வது...

Radhakrishnan said...

மிக்க நன்றி ஹூசைனம்மா. உண்மைதான். பையனை பரிசோதிக்க அனுப்பி இருக்கிறார்கள். தாய் மிகவும் பொறுப்பில்லாதவராக தென்பட்டதால் குழந்தைகள் நலம் அமைப்புக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மிக்க நன்றி பாலாசி. பல குழந்தைகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.

Kousalya Raj said...

//குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோங்க!//

இன்றைய காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது பெற்றோர்கள் தான். மிக நல்ல பகிர்வு... ஒரு தாயாய் மனதிற்குள் ஒரு பயம் வருவதை என்னால் உணரமுடிகிறது....

Radhakrishnan said...

மிக்க நன்றி கௌசல்யா. குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகளின் வாழ்வில் நமது பங்கு என நிறைய இருக்கிறது.

நிலாமதி said...

மனதுக்குள் ஒரு பயம் நானும் ஒரு தாய். பெற்றவர்கள் தான் கவனமாய் இருக்க வேண்டும் குழந்தைகள் அறியாத் வயசு. புரியாத் பாடம். இந்தககால் பெற்றவர்களுக்கு மிகவும் கஷ்டமான் குழந்தை வளர்ப்பு. தாய் மார் மிகவும் கவனமாக் இருக்கணும். குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு வேண்டும்.

வால்பையன் said...

பால் குடிக்கும் போதே பாலுணர்வும் சேர்ந்து ஊட்டப்படுகிறது!

சிக்மண்ட் ஃப்ராய்டின் ”ஈடிபஸ் காம்பளஸ்” பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா!?

Radhakrishnan said...

மிக்க நன்றி நிலாமதி. பெற்றோர்களாகிய நாம் கவன குறைவாகவே இருக்கிறோம் என்பதுதான் மிகவும் உண்மை. நமக்கு பிற பொறுப்புகள் பெரிதாக தெரிகிறது.

மிக்க நன்றி அருண். உண்மைதான். இருப்பினும் பாலுணர்வு ஒரு குறிப்பிட்ட வயது வரை சுரப்பிகளினால் கட்டுபடுத்தபட்டு இருக்கிறது என்றே கருதுகிறேன்.

கேள்விப்பட்டதில்லை அருண். தேடி படித்து விடுகிறேன். மிக்க நன்றி.

movithan said...

குழந்தைகளுக்கு என்ன புரியப்போகிறது என்று கருதி அவர்களை முன்னால் வைத்துக்கொண்டு பெற்றாரும் பிறரும் பேசும் வார்த்தைகளும் செய்கைகளுமே ,இவ்வாறான விபரீதங்களுக்கு அடிப்படைக்காரணம்.

பெறுவது பெரிதல்ல,பெற்றதைப் பொறுப்பாகப் பார்ப்பதே பெரிது.

Radhakrishnan said...

//பெறுவது பெரிதல்ல,பெற்றதைப் பொறுப்பாகப் பார்ப்பதே பெரிது//

அருமை மால்குடி. இது பல விசயங்களுக்கும் பொருந்தும். மிக்க நன்றி.