Friday 1 October 2010

கம்யூனிசமும் கருவாடும் - 4

'நமது வாழும் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நமக்கு என்ன கொள்கை, நாம் கொள்கையில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு என்ன என பல விசயங்கள் நமக்கு உறுதியாக தெரிவதில்லை.

 பல நேரங்களில் நமது கொள்கைகளுக்கு நாம் மாறாக நடக்கப்படவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை காலம் தள்ளிவிடுகிறது அல்லது அப்படிப்பட்ட காலத்தில் நாம் நம்மை தள்ளிவிடுகிறோம்.  நமது எண்ணங்களுக்கு நேர்மையாக நாம் நடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ஒவ்வொரு மனிதரும் தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்

இப்படிப்பட்ட நிகழ்கால வாழ்க்கையையே ஊர்ஜிதம் செய்ய முடியாமல் நாம் வாழும் வாழ்க்கையில் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கொள்கைகளை, அவர்கள் உண்மையிலேயே என்ன நினைத்தார்கள், என்ன விசயத்தை செயல்படுத்த நினைத்தார்கள் என நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் செயல்படுவது அறிவுடைமையா என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்தித்து பார்த்தல் அவசியம்

'சக மனிதர்களை, சக ஜீவராசிகளை அன்புடன் நடத்துவது' என்பதை தவிர இந்த உலகில் எந்த ஒரு கொள்கையும் பெரிய கொள்கை கிடையவே கிடையாது என்பதை ஒவ்வொரு மனிதரும் தமது மனதில் நிலை நிறுத்திக் கொள்வது அவசியம். அன்பு என வரும்போது அங்கே எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பு இருக்காது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

சீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவர் முதலில் சொன்ன விசயம் கடைசி நபரை அடையும்போது அந்த விசயம் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம். இந்த பழமொழி சொல்வது உண்மைதானா என்பது கூட சிந்திக்க வேண்டிய விசயம்.

அப்படிப்பட்ட சமூகம் உடைய இந்த பூமியில் முன்னால் நடந்த விசயங்களை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் படித்து அதை அறிந்து கொள்வதும், அதனை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்படும் கருத்து சிதைவுகள் எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 'சுய சிந்தனை இல்லாத எந்த ஒரு மனிதருமே கொத்தடிமைகள்தான்'. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் வாழும்போது நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பதும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று

இதன் காரணமாக 'அன்பை அடிப்படையாக வைத்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும், அரசியல் சட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டியவை'

இனி கம்யூனிசம் சிந்தனை பற்றி மட்டுமே இந்த தலைப்பில் கீழ் வரும் பதிவுகள் பேசும் என்பதை உறுதி செய்கிறேன்.

இந்த கம்யூனிசம் சிந்தனை தோன்றியது எவ்வாறு?

1836ல் ஜெர்மானிய தொழிலாளர்களால் பாரிஸ் நகரத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.   இந்த அமைப்பின் தாரக மந்திரம் 'எல்லா மனிதர்களும் சகோதரர்கள்' என்பதாகும். இந்த அமைப்பின் நோக்கம் பூமியில் கடவுளின் ராஜ்யத்தை அன்பு, நீதி, சமத்துவம் என்பதன் மூலம் நிறுவுவது.

இந்த அமைப்பானது உருவானதற்கு ஒரு கருப்பொருளாக இருந்தவர் கிராக்கஸ் பெபியுப் என்பவராவர். இவர் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு காரணமானவர்.

(தொடரும்)

1 comment:

suneel krishnan said...

//இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்//
நூறு சத விகிதம் உண்மை .நாம் எல்லாரும் குறை நிறை கொண்ட மனிதர்கள் .இயல்பாக அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லுதல் தான் சிறந்த கொள்கை .
வரலாறுக்கான முக்கியத்துவம் அக்காலக்கட்டதை கொண்டு புரிந்து கொள்ள பட வேண்டும் .நாம் செய்யும் மிக பெரிய தவறு இன்றைய சமூக சூழலில் அன்றைய வரலாற்றை அலசி ஆராய்வது தான்