Tuesday 23 February 2010

செருப்புத் தொழிலாளி



அன்னைக்கே பள்ளிக்கூடம் போகச் சொன்ன
அப்பாட்ட அவரோட தொழிலுதான்
செய்வேனு நானும் அடம்பிடிச்சி
வந்த படிப்பையும் வரவிடாம நானும் செய்ய


படிச்சி வேலைக்குப் போற மகராசருக்கு
குனிஞ்சி காலணி துடைக்க நேரமிருக்காது
வெயிலுக்கு காலு வெந்து போகுமுனு
அறுந்து போன காலணியை தூக்கி எறிய
வறுமையில இருக்கறவகளுக்கு மனமிருக்காது


பெத்த பிள்ளைகளை படிக்கவைச்சி வேலைக்கனுப்பி
சொத்துனு இருக்கும் குலத்தொழிலை விடமனசில்ல
ஒருத்தரோ ரெண்டுபேரோ வந்து போகும்
கடையில்லாத கடையில எனக்கிருக்கும் இந்த
பெரும் நிம்மதி உங்களுக்கிருக்கா?!

15 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்ம் நமக்கு இருக்கா :) ?

Chitra said...

ஒருத்தரோ ரெண்டுபேரோ வந்து போகும்
கடையில்லாத கடையில எனக்கிருக்கும் இந்த
பெரும் நிம்மதி உங்களுக்கிருக்கா?!

..............இந்த பரிதாப சூழ்நிலையிலும் கூட நிம்மதியை காண்பது ஒரு வரம்.

புலவன் புலிகேசி said...

:))

பித்தனின் வாக்கு said...

இது இயலாமையின் நிம்மதி எனவும் கொள்ளலாம். ஆனா இப்ப எல்லாம் அறுந்த செருப்பை தைக்கும் பழக்கத்தைக் கை விடுவதால், பீடி மட்டுமே அவனது பசி தணிக்கும் பொருளானதும் உண்மை. சமூக அவலத்தைக் கட்டுரையாக்கியுள்ளீர்கள். நன்றி.

Kandumany Veluppillai Rudra said...

அதுக்காகத்தானே இந்த ஆட்டம்.

சசிகுமார் said...

அப்பப்ப என்ன அருமைய இருக்கு, தொடர்ந்து பலசாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல சிந்திக்கவேண்டிய கருத்துள்ள கவிதை.

vasu balaji said...

இப்படி இருக்க முடிஞ்சிட்டாதான் பிரச்சனையில்லையே:(

டக்கால்டி said...

ஆசையே மாயை..
மாயையே ஆசை...

Radhakrishnan said...

அனைவருக்கும் மிக்க நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

//வெயிலுக்கு காலு வெந்து போகுமுனு
அறுந்து போன காலணியை தூக்கி எறிய
வறுமையில இருக்கறவகளுக்கு மனமிருக்காது//
 
செருப்பு தைக்கும் இடத்தில் பார்க்கலாம் இதனை

நசரேயன் said...

ம்ம்ம்

vidivelli said...

மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........

movithan said...

அருமை.உங்கள் வரிகள் நிஜத்தின் நிழல்.

Radhakrishnan said...

மிக்க நன்றி உழவன், நசரேயன், விடிவெள்ளி மற்றும் மால்குடி.