Thursday 25 February 2010

நட்ட நடுச்சாலையில் படுத்துறங்கும் தாய்



காலமெல்லாம் உழைச்சே பழக்கப்பட்டு போச்சு
கண்ணுக்கு கண்ணா வளர்த்த புள்ளைகள
கரையேத்தி வைச்சதும் நிம்மதினு ஆச்சு

ஆத்தா என்கூட வந்திருனு 
ஆளாளுக்கு கூப்புடுறாங்க
சோத்த சும்மா தின்னா
சுகப்படுமோ இந்த உடம்பு

எனக்காக என் தெய்வம்
கட்டி கொடுத்த ஓட்டுவீடு
விட்டுப் பிரிய மனசில்லை
என் உசிரு அங்கேதானிருக்கு

எனக்குத் தேவையோ கால்வயிறு கஞ்சி
கட்டிக்கிட்டு இருக்க ஓரிரு புடவை
நோயில்லாம என்னைப் பாத்துக்கிரும்
நான் நோன்பு இருக்கும் காளியாத்தா

உழைச்ச களைப்பில 
உறக்கமது கண்ணை சுத்தும்
உட்கார்ந்துக்கிட்டே சாப்பிட்டா
கண்ணு உறக்கத்தை கத்தும்

இன்னைக்கும் என்னைத் தேடி
என்வீட்டுக்கு நாலுபேரு வருவாக
ஆக்கிப் போடனும் அவக பசியாற

பெத்த புள்ளைகள குத்தம் சொல்லும்
ஒத்த தாயி இந்த ஊரிலிருந்தா காட்டு
செத்தாக்கூட காத்து நிற்பா
அந்த சிவனுக்கும் நான்தான் தாயி!

5 comments:

வால்பையன் said...

கடைசி வரி என்ன சொல்லுது!?

Radhakrishnan said...

தீமைகளை அழிக்கக்கூடிய அந்த சிவனுக்கும், அதாவது அழித்தல் செய்பவருக்கும், என்னைப் போன்றவரே தாய் என பொருள் கொள்ளல் வேண்டும்.

Ashok D said...

உண்மையிலேயே பாசமுள்ள தாய்க்கு இந்த நிலைமை வருமாங்க V.R?

Radhakrishnan said...

:( கவிதை பொய் பேசியது. நன்றி அசோக்.

Chitra said...

பெத்த புள்ளைகள குத்தம் சொல்லும்
ஒத்த தாயி இந்த ஊரிலிருந்தா காட்டு

.......இந்த ஊரில் இல்லாமல் இருக்கலாம். அதற்காக.....
it is not universal!