Wednesday 21 December 2011

கருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா?

 எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.

கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.

சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.

ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல  என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.

'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.

இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.

ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.

வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.

அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!

ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.

டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!

7 comments:

Admin said...

கருப்பை பற்றிய நகைச்சுவையானா கருத்து கவர்ந்தது..
(டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல)

முடிவு முத்தாய்ப்பு..

வரவை எதிர்பார்க்கிறேன்..

செத்தபின்புதான் தெரிந்தது..

Yaathoramani.blogspot.com said...

நகைச்சுவையாகச் சொல்லிப்போனாலும்
சொல்ல வேண்டிய கருத்தில் கவனமாய் இருப்பது
மிகவும் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 3

Unknown said...

உண்மையைச் சொன்னா பிடிக்கிறதில்ல.... அது அவர்களே குறைன்னு நினைக்கிறப்ப.....
இந்த உலகத்தில் பெரிதும் சாதித்தவர்கள் கருப்பினத்தவரே! இப்போதும் அப்படி தான்...

திருமால் / கண்ணன்... (கருநீலம்) / ராமாயணத்திலே ஸ்ரீ ஆமானின் அழகைக் கண்டு மயங்கி வீதிகளிலே நின்ற பெண்களின் நிலையை கம்பர் அப்படித்தான் வர்ணித்து இருப்பார்... அவர்களின் இடுப்பில் இருந்த ஒட்டியானங்கள் கூட உருமாறிய நிலையைக் கூறி... ஏகபத்த்னி விரதம் கொண்ட அந்த கருத்த அழகனுக்குத் தான் எத்தனை பேர் ஏங்கினார்கள்...
சிவன் / ஆலாலசுந்தரம் (நீலகண்டன்) -கருநீலம்... அன்னை சக்தியான பார்வதியும் அந்நிரத்தவளே... இருந்தும் நாம் மனிதர்கள் ஆதனால்.. கருப்பாய் இருக்கும் நாமே சிவப்பு அல்ல நம்மைக் காட்டிலும் கொஞ்சம் நிறம் வெளிராக லைட் பிரௌனாக தேடிக் கட்டிக் கொள்ளவில்லையா! அப்படித்தான். (ஒரு வெள்ளையர் சொன்னார் அவர்களைப் பொறுத்தவரையில் மஞ்சள் (பொன்னிறம்) நிற தலை முடி கொண்டவரே வெள்ளையர்கள் மற்றவர்கள் யாவரும் கருப்பினம் தானாம்)

இன்னொரு விசயமும் சமீபத்தில் "ரீடர் டயஜிஸ்ட்" - ல் பார்த்தது.... ஒரு வெள்ளை நிற பாலர் பள்ளி படிக்கும் பிள்ளையிடம் ஆய்வு செய்து இருக்கிறார்கள் ஒரு பொருளை எடுத்து மறைத்து வைத்து விட்டு அங்கே வெள்ளையரையு, கறுப்பர் ஒருவரையும் காண்பித்து கேட்டதற்கு அது கருப்பாக உள்ளவரையே சந்தேகப் பட்டதாம்.. குழந்தைகளே அப்படித்தான் இருக்கிறது... அப்படி இருப்பவர்களும் அப்படியே!!!???..

இருந்தும் கிருஷ்ணனும், (சனீஸ்வரனைக் கண்டு அஞ்சாதோர் உண்டா / நாத்திகம் பேசுபவர் கூட பல வண்ண மேலாடையை அவரவருக்கு தேர்தெடுக்கிறார்கள் ) புத்தனும், வேதகால ரிஷிகளும், முனிவர்களும், வானவியல் சாஸ்திரம் கணித்த நம் மூதாதையரும், மகாத்மாவும், மைகேல் ஜாக்சனும், டைகர் வுட்சும், மைக் டைசனும், இன்று விளையாட்டுத் துறைகளில் கருப்பனின் பின்பு தான் உலகம் ஓடுகிறது...

தன்னை உணர்ந்தவர் (தன்னிலை உணர்ந்தவர் கோபிப்பதில்லை).... அந்நிலை வராததால் நாம் ௯எனையும் சேர்த்து தான்) இது போன்ற விசயங்களில் கோபப் படுகிறோம்.... பின்னூட்டம் நீண்டுவிட்டது...

தங்களின் பதிவு செய்யுளாக கருத்து செறிந்து இருப்பதால்!!!... மணிரத்தினம் போல் அல்லாமல் மகாபாரதமாகிறது...

பதிவிற்கு நன்றிகள் நண்பரே!

Unknown said...

கருப்பு நிற ஆய்வும் பதிவும்
மிகவும் அருமை சகோ!

த ம ஓ 5

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

(ரொம்ப சீரியசாக பின்னூட்டம் போட்டதில் உங்களின் நகைசுவையை ரசித்ததை பகிர விட்டுவிட்டேன்...)


////ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன்.////
அங்கங்கே நீங்கள் நகைசுவை உணர்வை தந்திருந்தால் இங்கே உதட்டை மலரச் செய்கிறது... பதிவிற்கு மீண்டும் நன்றிகள் நண்பரே!

Radhakrishnan said...

நன்றி மதுமதி

நன்றி ரமணி ஐயா.

நன்றி நண்பரே.

நன்றி புலவர் ஐயா

நன்றி தமிழ் விரும்பி ஐயா. நல்லதொரு கருத்துகள். //தன்னை உணர்ந்தவர் (தன்னிலை உணர்ந்தவர் கோபிப்பதில்லை).... அந்நிலை வராததால் நாம் ௯எனையும் சேர்த்து தான்) இது போன்ற விசயங்களில் கோபப் படுகிறோம்//