Friday 2 December 2011

ஜீரோ எழுத்து - 1

'இத்தனை நாள் வாழ்ந்து விட்டீர்களே, இவ்வுலகில் இதுவரை என்ன கண்டீர்கள் அம்மா?' இந்த கேள்வி தான் எனது சிறு வயதில் எனது தாயிடம் கேட்டது.

'இவ்வுலகில் ஒண்ணுமே இல்லை' எனது தாயின் பதில் அன்று என்னை மிகவும் யோசிக்க வைத்தது, வாழ்க்கையை புரிய வைத்தது.

ஆனால் இன்று சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றுமே இல்லாமலா இவ்வுலகம் இயங்கி கொண்டு  இருக்கிறது?

இவ்வுலகம் எப்படி தோன்றியது எனக் கேட்டால் வெற்றிடத்தில் ஒரு புள்ளியில் இருந்து தொடங்கியது, காலம், நேரம் என எதுவுமே முன்னால் இல்லை என, இட் கேம் பிரம் நத்திங், என  மிகவும் எளிதாக சொல்லிவிடுகிறார்கள். ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து இப்படிப்பட்ட பிரபஞ்சம் தோன்றிடத்தான் இயலுமா?

சூன்யம். இந்த சூன்யத்தில் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை என்பது எத்தனை பெரிய எண்ணம். அப்சலூட் ஜீரோ. இந்த நிலையில் தான் இவ்வுலகம் இருந்து இருக்கிறது, அப்படியெனில் இந்த நிலையை தகர்த்த வேண்டிய காரணம் என்ன, காரணிகள் தான் என்ன?

ஜீரோ என்பதற்கான அர்த்தங்கள் இரண்டு.  ஒன்று ஒன்றுமில்லை என்பதை குறிப்பது, மற்றொன்று எண்ணினை குறிப்பது. பல நாட்டினை சேர்ந்தவர்கள் இந்த ஜீரோவை ஒரு எண்ணாக உபயோகிக்க பலமுறை யோசித்து இருக்கிறார்கள். இந்த ஜீரோவை துணிந்து எண்ணாக உபயோகம் செய்தது இந்தியர்கள் தான் எனவும், இந்த பழக்கம் அப்படியே அரபு நாடுகளுக்கும் சென்றது என்கிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த ஜீரோ எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என பின்னோக்கிப் பார்த்தால் மிகவும் அதிசயிக்க தகவல்கள் பலரால் சேமித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

'ஸ்பேஸ்' எனப்படும் வான வீதிகளில் எதுவுமே இல்லை என்றுதான் சாதித்து கொண்டிருந்தார்கள். எதுவுமே இல்லாமல் எப்படி ஒன்று இருக்க முடியும் எனும் யோசனையில் தேடிய ஆராய்ச்சி இன்று எங்குமே ஒண்ணுமில்லாமல் இருக்க இயலாது என சொல்லியாகிவிட்டது.

இப்ப என்ன, நாங்கதான் எப்பவோ சொல்லிட்டோம்ல, இப்பிரபஞ்சத்தில் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கிறார் என. இதைக் கேட்டதும் ஜீரோ பெரிய ஹீரோதான் என எண்ணத் தோன்றுகிறது.

அப்படி இந்த ஜீரோ சாதித்தது என்ன?


4 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

பதிவு மிகவும் பிடித்திருக்கிறது. நான் தொடரப்பொகிறேன். நன்றி :)

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

வணக்கம் சகோதரரே,

உங்களுடைய ஜீரோ எழுத்தை நான் தொடரப்போகிறேன்.
நன்றாக எழுதுகிறீர்கள். எனக்கு பிடித்தமான இப்பதிவையும் இன்னொன்றையும்
வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. தங்களின் அறிமுகத்திற்கு. விரைவில் எழுத வேண்டும், இதற்கான கால நேரம் என நீட்டிக்கொண்டே போகிறது. ஆறே ஆறு தொடர்கள் மட்டுமே எழுத நினைத்தாலும், பிற விசயங்களை நினைப்பதை உடனே எழுத ஏதுவாக இருப்பதால், இந்த தொடர்கள் பின்னோக்கி போகின்றன.