Monday 19 December 2011

இறுமாப்பு

சரியாக மதியம் ஒரு மணிக்கு எல்லாம் விமானம் கிளம்பிவிடும் என்பதால் காலை எட்டு மணிக்கு எல்லாம் தயார் ஆகி பயணம் தொடங்கியாகிவிட்டது. சரியாக மூன்று மணி நேரம் முன்னர் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் எனும் எண்ணம் மனதில் ஓடியது. விமான நிலையத்திற்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. இரண்டு வழிகளை புறக்கணித்துவிட்டு ஒரு வழி தேர்ந்தெடுத்தாகிவிட்டது.

பாதையெல்லாம் சரியாய் இருக்க பயணம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சென்ற சாலையில் விபத்து நடந்து இருக்கிறது என வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. இன்னும் நேரம் இருக்கிறதே என காத்துக் கொண்டிருக்க காலம் காத்திருக்கவில்லை. பாதையில் இருந்து விலகி செல்ல வேறு வழியும் இல்லை.

எப்படியும் சென்று விடலாம் எனும் இறுமாப்புடன் காத்திருக்க காலம் கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் பாதை சரியாக வேகமாக செல்ல வழியின்றி வழி நெடுக வாகனங்கள். அரை மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் சென்று அடைய இனிமேல் விமானத்தில் சென்று செல்ல முடியாது என்றே விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

எப்படி விமானத்தை எல்லாம் தவற விடுகிறார்கள் என்றே ஏளனமாக நினைத்தது உண்டு, இறுமாப்பில் விமானத்தை தவற விட்ட போதுதான் எப்படி வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு என புரிய முடிந்தது.

எவர் என்ன செய்துவிடுவார்கள், எவர் என்ன சொல்லி விடுவார்கள், எவர் என்ன சொன்னால் நமக்கென்ன எனும் இறுமாப்பு எப்போதும் இருப்பது உண்டு. அந்த இறுமாப்பில் பலரோடு இணக்கங்கள் பிணக்கங்கள் ஆனது கண்டு இறுமாப்புதனை தளர்த்தி கொள்ள விழைகின்றேன்.

அகங்காரம் கொண்டால் அடுத்தடுத்த பிறப்பு வருமென்றும், ஒவ்வொரு பிறப்பிலும் அந்த இறைவனை நினைத்து கொண்டே இருக்கலாம் என்றும் கவிதை வடித்தது நினைவில் வருகிறது. அகங்காரம் அழிவை தரும் என படித்து இருந்தாலும் அகங்காரம் அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.

இறுமாப்பு கொள்வது இருப்புக்கு ஆகாது
இறுமாப்பு இன்னல் தராமல் போகாது
இறுமாப்பிடம் இன்பங்கள் ஒருபோதும் சேராது
இறுமாப்பு இனிமேல் எனக்கு ஆகவே ஆகாது.


11 comments:

துளசி கோபால் said...

உண்மைதான். அதுக்காக முதல் நாளே விமானநிலையம் போய் காத்திருக்க முடியுமா?????
என்னமோ போங்க!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை தான்.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

Unknown said...

இறுமாப்பு அது தரும் மறுபிறப்பு!...
அற்புதமான விஷயத்தை அழகாக கூறியும்..
அருமையானதொரு கவிதையில் முடித்து இருக்கிறீர்கள்..

அருமை, நன்றி..

மகேந்திரன் said...

த.ம 3

மகேந்திரன் said...

///அகங்காரம் அழிவை தரும் என படித்து இருந்தாலும் அகங்காரம் அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.////

நமக்குத் தெரிந்தே வரும், நமக்கு முன்னே கூத்தாடி நிற்கும். சொல்பேச்சே கேட்காது.
செயலின் ஆரம்பத்திலேயே உறுதி எடுத்துக்கொண்டால் ஒழிய அகங்காரத்தை
அகற்ற முடியாது.
அற்புதமா சொல்லியிருக்கீங்க.

Radhakrishnan said...

நன்றி துளசி டீச்சர். நீங்க சொல்வதும் சரிதான்.

நன்றி நண்பரே.

நன்றி தமிழ் விரும்பி ஐயா.

நன்றி மகேந்திரன்.

சென்னை பித்தன் said...

அகங்காரம் அகன்றால் ஆனந்தம்தானே!நல்ல பதிவு.த.ம.4

Shakthiprabha (Prabha Sridhar) said...

// இறுமாப்புதனை தளர்த்தி கொள்ள விழைகின்றேன்.

அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.
//


:) அழகாக சொல்லியிருக்கீங்க. உண்மையை சொல்லும் வரிகளின் அழகும் தனி :)

ம.தி.சுதா said...

////இறுமாப்பில் விமானத்தை தவற விட்ட போதுதான் எப்படி வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு என புரிய முடிந்தது.///

வாழ்க்கையில் எதுவும் நடக்கலாமில்லையா? சில இடத்தில் கட்டாயம் தேவையான ஒன்றல்லவா...

Admin said...

நீங்கள் சொல்ல வரும் விசயத்தை சொல்லும் விதம் அழகு படுத்திவிடுகிறது..இறுமாப்பை பற்றிய இறுதி வரிகள் அருமை..


நம் தளத்தில்

செத்தபின்புதான் தெரிந்தது..

Radhakrishnan said...

மிகவும் சரிதான் சுதா. நன்றி.

மிக்க நன்றி மதுமதி. விரைவில் பார்க்கிறேன்.