Sunday 4 December 2011

தேடிக்கொண்ட விசயங்கள் - 4

விசயங்கள் - 3  இங்கே. 

ஒரு நூலை எழுதும்போது அதில் பல விசயங்களை வைத்துவிட வேண்டும் தீராத ஆர்வம் மொத்த இலக்கையும் சிதைத்துவிடுகிறது. இந்த மரபணுக்கள் பற்றி சிந்திக்கும் போது எதை எதையோ எழுதி விட வேண்டுமென நினைத்துதான் நுனிப்புல் நாவலில் மரபியல் குறித்து எழுதினேன். அதனுடைய தொடர்ச்சி என மொத்த நாவலும் மரபணுக்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சியின் வடிவமாகத்தான் மூன்றாவது பாகம்தனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்து இருந்த வேளையில் இந்த மரபணுக்கள் புரிந்து கொள்ள முடியும் வகையில் எளிதாக இல்லவே இல்லை.

இந்த மரபணுக்கள் குறித்த விரிவான பார்வையில் இறங்கும் முன்னர் மரபணு குறித்த அறிவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். டி என் ஏ, ஆர் என் ஏ. இந்த இரண்டு மூலக்கூறுகள் பற்றிய எளிதான விளக்கங்கள் தெரிந்து கொள்வது சாத்தியமாகிறது. இந்த இரண்டு மூலக்கூறுகள் உருவாக காரணமான நியூக்ளிக் அமிலங்கள், கார்போஹைட்ரெட் மற்றும் பாஸ்பேட் மூலக்கூறு அதற்கு உதவும் வகையில் அமைந்த கந்தக பாலம்.


                                                    **********************


அடினைன் மற்றும் குவானைன் எனப்படும் மூலக்கூறுகளானது புயூரின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறிலிருந்து இருந்து உருவானதாகும். சைட்டோசின் மற்றும் தைமின் எனப்படும் மூலக்கூறுகளானது பிரிமிடின் எனப்படும் நைட்ரஜன் உள்ளடக்கிய ஒரு மூலக்கூறில் இருந்து உருவானதாகும்

இந்த புயூரின் வகை மூலக்கூறுதான் நாம் அருந்தும் தேநீரிலும் காஃபியிலும் உள்ள கஃபின் எனப்படும் மூலக்கூறாகும். மேலும் சாந்தின், தியோபுரோமின் இந்த புயூரின் வகையில் உள்ளடங்கும். நியூக்ளிக் அமிலங்கள் உருவாக மூலமாக அடினைன், குவானைன், தைமின் சைட்டோசின் மற்றும் யுராசில் மூலக்கூறுகளே பெருமளவு பங்கு வகிக்கின்றன. 

இந்த புயூரின் அல்லது பிரிமிடின் மூலக்கூறுகளுடன் ரிபோஸ் அல்லது டி-ஆக்ஸ்ரிபோஸ் எனப்படும் கார்போஹைட்ரேட் இனிப்பானது இணையும்போது நியூக்ளியோசைடு உருவாகிறது. புயூரின் அல்லது பிரிமிடினுடன் இணைந்த கார்போஹைட்ரேட்டுடன் ஒரு பாஸ்போரிக் அமிலம் இணையும் போது நியூக்ளியோடைடு உருவாகிறது. இப்படி பல நியூக்ளியோடைடுகள் இணையும்போது டி என் ஏ அல்லது ஆர் என் ஏ உருவாகிறது. டி என் ஏ வில் அடினைன் தைமின் குவானைன் சைட்டோசினும், டி ஆக்ஸ்ரிபோஸும் பாஸ்போரிக் அமிலமும் உள்ளது. ஆர் என் ஏ வில் தைமின் பதில் யுராசிலும், டி ஆக்ஸிரிபோஸ் பதிலாக ரிபோஸும் உள்ளது. டி என் ஏ வில் அடினைன் தைமினுடனும் குவானைன் சைட்டோசினும் இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் நைட்ரஜனும் ஹைட்ரஜனும் அமைந்து உள்ளது. 

************************
மேலே எழுதப்பட்டுள்ள விசயங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப் போகும் ஒரு நாவலில் வைத்து இருக்கிறேன். இந்த மரபணுக்களை எல்லாம் மீண்டும் மீண்டும் பார்க்க, எப்படி விசயங்கள் எல்லாம் நடக்கிறது எனும்போது  இந்த டி என் ஏ வை விட ஆர் என் ஏ தான் உயிர் வாழ் இனங்களில் பெரும் பங்கினை வகிக்கிறது எனும் ஒரு சிந்தனை மனதில் எழுந்தது. அதன் காரணமாகவே இந்த ஆர் என் ஏ பற்றிய தேடல் அதிகமாக ஆரம்பித்தது. 

இந்த ஆர் என் ஏ பற்றிய தேடல் குறித்தும், மேற்கொண்டு இந்த மரபணுக்கள் பற்றிய விபரங்களை அடுத்து காண்போம். 



3 comments:

ஷைலஜா said...

அழகா ஒரு விஞ்ஞானக்கதை நீங்க எழுதலாம் தகவல் சுரங்கமா இருக்கீங்க..எனக்கு கொஞ்சம்தான் புரியறது என் அறிவு அவ்வலோதான்:)

Unknown said...

நான் பொறியியல் (பணியாற்றும் துறை) மற்றும் தமிழியலில் (விருப்பத் துறை) உள்ள அடிப்படை விஷயங்கள் மட்டும் கொஞ்சம் அறிந்தவன்... தாங்கள் கட்டுரையில் கூறியிருக்கும் விலங்கியலில் வரும் வேதியல் பெயர்கள் எனக்கு பரீச்சயம் ஆனது எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டில் பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்த பெண்களில் சிலருக்கு ஆய்வகப் பதிவேட்டில் இந்தப் படங்களை வரைந்து தந்த போது அறிந்த ஞாபகம் வருகிறது...
இருந்தும் இது போன்ற தங்களின் கட்டுரைகளும், அதனை இடுபொருளாகக் கொண்ட கதைகளையும் வாசிக்க ஆவலாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்...
நன்றி...

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி, மிக்க நன்றி ஐயா.