Monday 19 December 2011

பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள். 

13 comments:

Anonymous said...

ha..ha..i like it!

Unknown said...

எவ்வளவு எழுதினாலும்.. எதை எதையோ எழுதினாலும் அவரவர் ரசிப்புக்கு / புசிப்புக்கு / அறிவுக்குத் தேவையானவைகளே தேர்ந்தெடுக்கப் படுகின்றன... ஆக, உலகை சுருக்கி எம் மக்கள் இவர்கள் என்றே நட்பு பாராட்டி.. பொழுதை வீணடிக்காமல் தனது கருத்து ஒத்த நண்பர்கள் அருகிலே இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருவதும் இதுவே.... போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும்... நண்பர்கள் நாம் கூடி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வோம்...

அறன், ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்
ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்.

உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்
அனைத்தே-புலவர் தொழில்.

என்ற இரு திருக்குறள்களை விடுப்போம் அவர்களின் சிந்தனைக்கே...
நன்றி...

Radhakrishnan said...

ஆஹா, இப்படியும் ரசிப்பீங்களோ. நன்றி நண்பரே.

அட, தங்களுக்கு பல திருக்குறள்கள், பல இலக்கியங்கள் அத்துப்படி போல இருக்கிறதே. நீங்கள் சொன்னது போலவே செயலாற்றுவோம். நன்றி தமிழ் விரும்பி ஐயா.

நன்றி நண்பரே.

ILA (a) இளா said...

:))

Anonymous said...

ஈரோடு வலை பதிவர் குழும ப்ளாகில் பாராட்டியும் இங்கு இப்படியும் எழுதியிருப்பதை பார்த்தால் யாருக்கு பைத்தியம் என்று புரிகிறது. ஹிட்ச்க்காக இப்படி அலைய வேண்டுமா? வெட்கமாய் இல்லை? ஒன்னு நீங்க நல்லது செய்யணும் அல்லது நல்லது செய்பவர்களை பார்த்தால் பாராட்டனும் இப்படி வயிதெரிச்சலில் அலைய கூடாது சீக்கிரம் முழு நேர மெண்டல் ஆக வாழ்த்துகள்

Radhakrishnan said...

நன்றி இளா.

ஹா ஹா! இந்த கவிதையின் பொருள் புரியாமல் தாங்கள் என்னை வாழ்த்தியமைக்கு நன்றி.

//துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். //

bandhu said...

திட்டுவது போல் திட்டி பாராட்ட முயற்ச்சித்திருக்கிறீர்கள். எல்லாமுமாய் குழம்பிவிட்டது என்று நினைக்கிறேன்.. இந்த எழுத்து சரியாக வரவில்லை!

Radhakrishnan said...

எதிர்மறை எழுத்துகள் எல்லா நேரங்களிலும் நேர்மறை எண்ணங்களை சரியாக விதைக்க இயலுவதில்லை. ஆனால் எதிர்மறை எழுத்துகளைப் போல ஒரு உத்வேகத்தை எல்லா நேரங்களிலும் நேர்மறை எழுத்துகள் தருவதுமில்லை.

பெயரில்லா நபரின் பார்வையில் மட்டுமல்ல, பலரின் பார்வையிலும் இது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்ட உக்தியாகவே தோன்றும், அதை நான் மறுப்பதற்கில்லை. அதே வேளையில் வருபவர்கள் எல்லாம் உள்நோக்கி வாசித்து செல்கிறார்கள் என்பதற்கான உறுதியும் இல்லை. தலைப்பின் வசீகரம் மூலம் வசீகரிக்கப்படுபவர்கள் ஒரு வரியோ இரு வரியோ காண்கிறார்கள். கருத்து எழுதுபவர்கள் தங்களுக்குள் ஏற்படும் அந்த நேரத்து எண்ண வெளிப்பாட்டினை சொல்லி செல்கிறார்கள். கருத்து மோதல்கள் பல கண்டு நகைப்பு மட்டுமே வருவது உண்டு. நண்பர் வவ்வால் சென்ற பதிவில் இட்ட கருத்துதான் எனக்கு சரியாக படுகிறது. ஆம் எழுத்து தனது நோக்கத்தை தொலைத்துவிட்டது, குலைத்துவிட்டது நன்றி பந்து :)

Shakthiprabha (Prabha Sridhar) said...

உங்களோட இந்தப் பதிவு ரொம்பவே பிடிச்சது. உலகில் எல்லாவித பைத்தியங்களும் உண்டு. பைத்தியம் இல்லாதவர்கள் யார்!

ஒரு கவிதையைப் போல் இருக்கு. சத்தியமான வாக்கியம் எல்லாமே. அதனால எல்லாமே குத்துது :))

//மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள். //

:) பெரிய உண்மை! அதை சின்ன வரிகளில் அடைத்து விட்டீர்கள் .

ம.தி.சுதா said...

ஃஃஃஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.ஃஃஃ

உண்மை தான் ஐயா.. சில தடவைகளில் அதை தின்பதால் நொயெதிர்பு சக்தி கூடும் தானே என்று விட்டு சாப்பிடுவதுண்டு....

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. ஆம் நீங்கள் சொல்வதும் மிகவும் சரியே.

மிக்க நன்றி சுதா. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட விஷம் என ஏனோ சொல்லி வைத்திருக்கிறார்கள்.

சசிகலா said...

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும்
மிகவும் அருமை .

Radhakrishnan said...

நன்றி சசிகலா.