Wednesday 24 November 2010

உலக மகா கலாச்சாரம்

இப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது. சுயமா சிந்திச்சி எழுதற அளவுக்கு யார்கிட்டயும் உண்மையிலேயே எந்த அறிவும் இல்லை. அங்க இங்க கிடைக்கிற விசயத்தை சிந்திச்சி நம்மளோட சொந்த சிந்தனை போல நாம  எழுதறோம்.  அப்படி எழுதுவதில்தான் எங்க திறமை இருக்கு அப்படினு  ஒப்புக் கொள்கிற தைரியம் முக்கால்வாசி பேருகிட்ட கிடையாது.

தானே அறிவின் சித்தன், இது கம்பன் பாடாத சிந்தனை என்கிற தொனியில நான் சிந்திச்ச மாதிரி யாருமே இப்படி சிந்திக்கவே இல்லை அப்படினு நினைக்கிற எழுத்துலக சிகாமணிகளே நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் என்பதை கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

சொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.

நீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள். உங்களால் ஒன்றுமே எழுத இயலாது. அப்படி நீங்கள் ஒருவேளை எழுதிவிட்டால் நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதனால் வெள்ளை தாளில் எழுதும் முயற்சியை கைவிட்டு விடுங்கள்.

கலாச்சாரம் என்றால் என்ன?

அங்கீகாரத்திற்கு என வாழ்பவர்கள் தங்களை முன்னிறுத்தியே செயல்படுவார்கள், அதே வேளையில் சமூகம் பயன்பட வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்களை முன்னிறுத்தி செயல்படுவார்கள். தங்களை பற்றி பெரிதாக விளம்பரம் செய்யமாட்டார்கள். அப்படி என்றால் ஒரு கலாச்சாரம் சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் இருத்தல் மிகவும் அவசியம். கலாச்சாரத்தின் மூலம் சகல உயிரினங்கள், தாவரங்கள் என மொத்த நிலப்பரப்பும், கடல்பரப்பும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஒரு கலாச்சாரமும் இதன் அடிப்படையில் உருவானதாக எந்த சரித்திரமும் இல்லை.

இந்த கலாச்சாரம் பற்றி நீங்கள் அனைவரும் விபரமாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நான் திருடும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

13 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

Radhakrishnan said...

ஹா ஹா! இது எந்த ஊரு கலாச்சாரம்? ;)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஇப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது.ஃஃஃஃ
படைப்பு நல்லாயிருக்குது...
தமிழனின் பரம்பரைக் குணமல்லவா இது...

Radhakrishnan said...

ஆஹா சுதா... தமிழர்கள் திருட்டு கலாச்சார பேர்வழிகள் என குற்றம் சுமத்துகிறீர்களா என்பதை அறியத் தரவும்.

ம.தி.சுதா said...

மன்னிக்கணும் சகோதரம் நான் விளக்கம் குறைவாக கருத்திட்டது என் தப்புத் தான்... தமிழன் திருட்டுக் குணமுள்ளவன் என்ற கருத்தில் சொல்லல... மற்றவன் மேல் குறை காண்பவன் என்பதைத் தான் சொல்ல வந்தேன்... போய்வருகிறேன் சகோதரா...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

கீதையின் வரிகளே நினைவுக்கு வருகின்றன்.

Radhakrishnan said...

நன்றி சுதா, நன்றி கனாக்காதலன்

Chitra said...

சொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.


...... rightly said.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா.

suneel krishnan said...

புதுசா சொல்ல எதுவுமே இல்லன்னு தோணுது ,உங்களுக்கு எதுவும் கோவமா ?
முன்னாடியே சொன்ன ஏதோ ஒரு விஷயத்த நாம அணுகறது தான் வித்யாசம் .அந்த விஷயத்தின் தற்காலத்திய பிரயோஜனம் ,அல்லது அந்த சிந்தனையை நாம் உள்வாங்கி வரும் முடிவு -அதை ஏற்பது அல்ல நிராகரிப்பது ,அதற்க்கான காரணங்களை கூறுவது ,ஒரு சிந்தனையை ஏற்றால் -அதை வளர்ப்பது ,இது தான் திரும்ப திரும்ப நடக்குது ..

G.M Balasubramaniam said...

Definitely different people can think differently on similar subjects .We may not be able to avoid thinking on the similarities. It is not wrong for any writer to wish for recognition. regards

Radhakrishnan said...

கோவம் எல்லாம் இல்லீங்க டாக்டர். கலாச்சாரம் கலாச்சாரம் அப்படின்னு வெறும் பேச்சு வழக்குக்கு மட்டும் நாம சொல்லிகிட்டு, எழுதிகிட்டு வாழுரதள என்ன லாபம் இருக்கு அப்படின்னு நினைச்சேன். நீங்கள் சொல்வது சரியான கருத்துதான். மிக்க நன்றி.

மிகவும் சரிதான் ஐயா. மறுக்க முடியாதுதான். எனக்கு தெரிந்து அங்கீகாரமே எதிர்பார்க்காமல் வெயிலிலும் மழையிலும் வாடும் உள்ளங்கள் பல இருக்கின்றன. இந்த எழுதுபவர்கள் தான் உலகத்தையே தலைகீழாக மாற்றுவது போல நடந்து கொள்வது சிரிப்பு வர செய்கிறது. படைப்புகள் எல்லாம் பொழுது போக்கு அம்சங்கள் ஆகிப் போனதுதான் கொடுமை. மிக்க நன்றி ஐயா.

Paleo God said...

//நீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள்.//

கூகிள், ப்ளாக்,கணிணி,லிவிங் டுகெதர், டிவிட்டர், ஸ்க்ரீன் ஷாட் இதெல்லாம் புதுசா தெரியலையா உங்களுக்கு? :))


//ம.தி.சுதா said...
மன்னிக்கணும் சகோதரம் நான் விளக்கம் குறைவாக கருத்திட்டது என் தப்புத் தான்... தமிழன் திருட்டுக் குணமுள்ளவன் என்ற கருத்தில் சொல்லல... மற்றவன் மேல் குறை காண்பவன் என்பதைத் தான் சொல்ல வந்தேன்... //

இந்து என்றால் திருடன்..

தமிழன் என்றால் சோற்றால் அடித்த பிண்டம்..

விளக்கம் - தமிழ் தாத்தா.:))