Thursday 11 November 2010

சிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)

பயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.

அந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.

சில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.

இவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

அவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.

திருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.

1



3

4

5

14 comments:

Unknown said...

பாராட்டுகள்

Gayathri said...

vazhthukkal

Praveenkumar said...

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!

Radhakrishnan said...

மிக்க நன்றி சிநேகிதி, காயத்ரி, பிரவின்குமார்

தமிழ் உதயம் said...

ஒன்றை படித்ததோடு நின்று விடாமல், அந்த பதிவை ஞாபகம் வைத்து (கிட்டத்தட்ட ஒன்றை வருஷங்கள்) இப்போது பதிவர் விருதுடன் பகிருதல் பெருமைக்கூரிய ஒன்று. ஷக்திபிரபா அவர்களுக்கு வாழ்த்துகள்.

Chitra said...

அருமையான தேர்வு... அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, சித்ரா.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

தமிழ் உதயம் சொல்வதையே நானும் மொழிகிறேன் வாழ்த்துக்கள் ஷக்திப்ரபா..

sathishsangkavi.blogspot.com said...

ஷக்திப்ரபா என் வாழ்த்துக்கள்...

அதே போல் நீங்கள் படித்த அருமையான வலைப்பதிவுகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தி அந்த பதிவருக்கு விருது குடுத்து ஊக்கிவிப்பதற்கு வாழ்த்துக்கள்.. இந்த மாதிதி விருதுகள் கொடுப்பதன் மூலம் அவர்கள் எழுத்தார்வம் அதிகமாகும்...

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துகள்

Radhakrishnan said...

மிக்க நன்றி அன்பரசன்,

மிக்க நன்றி எஸ். கே

மிக்க நன்றி கோபி

மிக்க நன்றி தமிழரசி

மிக்க நன்றி சங்கவி

மிக்க நன்றி சங்கர்.

Shakthiprabha (Prabha Sridhar) said...

oh my god...நிஜமாகவே unexpected....

மிக்க நன்றி வி.ராதாக்ருஷ்ணன் சார்..என்னால் இயன்ற வரை எழுதி வருகிறேன். அதனைப் படித்து ரசித்து பயன் பெற்றோர் இருப்பார்களே ஆனால் அது மட்டுமே நான் எழுத போதுமானது.

இது தான் வலையில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். I humbly offer it to my god krishna.

வாழ்த்திய அனைவருக்கும் என் பணிவான நன்றி.

அன்புடன்,
ஷக்தி

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி. எனக்கு கிடைக்கும் நட்புகளில் பலர் கிருஷ்ணரின் பக்தைகளாக இருப்பது எனக்கென்னவோ ஆச்சர்யம் தான்.