Tuesday 2 November 2010

சிறந்த பதிவர் விருது - 2 (தமிழ் உதயம்)

சிறந்த வலைப்பதிவாளர் விருது - தமிழ் உதயம், மன உணர்வுகள் பிரிவு. 


மனித மன உணர்வுகளை பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை எனலாம்.  இந்த மன உணர்வுகளினால் ஏற்படும் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் தெள்ள தெளிவாக இருக்கிறது என வரையறுத்துவிட முடியாது. இந்த மனம் சம்பந்தப்பட்ட விசயங்கள் வாழ்வில் பெரிதும் முன் வகிக்கின்றன. 


'மனம் போல் வாழ்வு 

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

மனசு வைச்சா எல்லாம் நடக்கும்

எல்லாம் மனசுக்குள்ள இருக்கு

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவர்கள்

மனசுன்னு ஒன்னு இருந்தா இப்படி நடக்குமா

மனசு ஒரு குரங்கு 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் (நெஞ்சு என்பது மனது என பொருள்படும்) 

மனம் கல்லாகிப் போன மனிதர்கள் 

இரண்டு மனம் வேண்டும்' 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மனம் எதை குறிக்கிறது?  மனம் என்று ஒன்று உண்டா? 

எண்ணங்களைத்தான் மனம் என்று குறிப்பிடுகின்றனரா?. எண்ணங்களினால் ஏற்படும் சிந்தனைகளைத்தான்  மனம் என்று குறிப்பிடுகின்றனரா? எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் என்ன வித்தியாசம்? இப்படி பல கேள்விகளை ஒரு மனிதனின் மூளை பரிசீலித்து கொண்டிருக்கிறது. இந்த மூளை தான் மனமா? இந்த மூளையில் இருக்கும் நரம்பு செல்கள் தான் மனதின் அடிப்படை நாதமா? இந்த மூளையின் வளர்ச்சியை பொருத்தே ஒரு மனதின் எண்ணங்கள், சிந்தனைகள் அமையுமா? அல்லது கற்று கொள்ளும் விசயங்கள் மூலம் இந்த மனதின் எண்ணங்கள் அமையுமா? 



இப்படிப்பட்ட மனதை தெரிந்து கொள்வது மிகவும் கடின காரியமாக இருக்கிறது. அதுவும் 'பெண் மனது மிகவும் விசித்திரமானது' என புலவர்கள் பாடி வைத்து இருக்கிறார்கள். ஆண் மனது, பெண் மனது என இரு வேறு மனங்கள் இருக்கிறதா? இந்த மனம் எதற்கு எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மனம் எதற்காக ஒருவரை வெறுப்பாகவும், ஒருவரை அன்பாகவும் பார்க்கிறது. இந்த மனதின் செயல்பாடுதான் என்ன? அதை நிர்ணயிக்கும் காரண கர்த்தா யார்? சூழலா? அப்படியெனில் ஒரு சூழலில் வளரும் குழந்தைகள் ஒரே மாதிரி எதற்கு இருப்பதில்லை? ஒரு சூழலில் ஒவ்வொருவரும் வெவ்வேறாக செயல்படுவதன் காரணம் யாது? 

எனக்கு தெரிந்து தனக்கு தானே பேசி கொள்ளாத மனிதர்கள் எவருமே இவ்வுலகில் இல்லை எனலாம். அதில் மனதை ஒரு தனி மனிதராக அதாவது மனசாட்சி என உருவகப்படுத்தி சுய பரிசோதனை செய்யும் சோதனைகள் நிச்சயம் அனைவரிடமும் உண்டு. ஆனால் மனம் என்பது ஒன்றுதானே. சிந்தனைகள் என்பது ஒன்றுதானே. இதில் சுய பரிசோதனை என வரும்போது அதென்ன மனம் என்பது முன்னிலை படுத்தப்பட்ட ஒன்றாக உருவகம் கொள்கிறது. 

இந்த மனம் சொல்லும் கதைகள் ஆயிரம். அந்த மனதை பற்றிய ஒரு கட்டுரையாக வெளிவந்தபோது 'அட' என எண்ண தோன்றியது. அப்பொழுதே மனதில் நினைத்தேன். நிச்சயம் இந்த கட்டுரை விருதுக்கு உரிய கட்டுரை என. 

சிறந்த பதிவர் விருது தமிழ் உதயம், விருதுக்குரிய கட்டுரை 

மனநிலையா... சூழ்நிலையா...


விருது சான்றிதழ்:



(தொடரும்) 

14 comments:

தமிழ் உதயம் said...

மிக்க மகிழ்ச்சி சார். வேறு ஒன்றும் எனக்கு சொல்ல தோன்றவில்லை. இப்போது எனது இந்த மனநிலையா... சூழ்நிலையா... பதிவை மூவர், உங்கள் தளத்திலிருந்து வந்து வாசித்து கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. நன்றி.

Chitra said...

தமிழ் உதயம் ரமேஷ் அண்ணன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! அவரது எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள், எனக்கு மிகவும் பிடிக்கும். சரியான தேர்வு!!! சிறந்த தீபாவளி பரிசு!!!

Radhakrishnan said...

வாழ்த்துகளும் நன்றிகளும் தமிழ் உதயம் ஐயா. மிக்க நன்றி சித்ரா, மிக்க நன்றி சங்கர்.

Anonymous said...

perfect suitable person thamizh uthayam...best wishes frnd...

நசரேயன் said...

வாழ்த்துக்கள் தமிழ் உதயம்

நிலாமதி said...

தமிழ் உதயத்துக்கு என் வாழ்த்துக்கள்.

Riyas said...

வாழ்த்துக்கள்....



http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html

Unknown said...

"தமிழ் உதயத்துக்கு" எனது அன்பான வாழ்த்துக்கள்.

R. Gopi said...

வாழ்த்துக்கள் !

'பரிவை' சே.குமார் said...

தமிழ் உதயத்துக்கு வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

ஜோதிஜி said...

தகுதியானதே. வாழ்த்துகள்.

முகுந்த்; Amma said...

பொருத்தமான விருது. விருது கொடுத்த உங்களுக்கும், விருது வாங்கிய தமிழ் உதயம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜோதிஜி மற்றும் முகுந்த் அம்மா.