Friday 4 June 2010

தெய்வப்புலவர் திருவள்ளுவர்




நான் வியக்கும் மனிதரில் முதல் நீ 
நல்ல மனைவி கொண்டால்
யுகம் எல்லாம் கைவசமாம்

வாசுகியை உந்தன் வரிகளினால்தான்
வசப்படுத்திக் கொண்டாயா?

வார்த்தைகளில் கூட அடக்கத்தின் பெருமையை
உன்னைவிட யார் அழகாக சொல்லிட முடியும்

எதை செய்தாலும் எதை சொன்னாலும்
உன்னை தொடாமல் ஒருவரும்
வாழ்க்கை உணரப் போவதில்லை
நீ இறைப்புலவர் இயம்புகிறார்
உன் வரலாறு எழுதாமல்
உலகத்து சிந்தனை ஓங்கி
ஒப்பில்லா குறள் தந்து
தன்னடக்கம் காண்பித்த
தலைச்சிறந்த தமிழ்த்தலைமகன் நீ

எடுத்ததுக்கெல்லாம் நீதான்
எல்லோர் நினைவிலும்

சொன்னபடி செய்த ஒரு பெரும்
தவபுதல்வன் நீ

புகழோடு தோன்ற சொன்ன
புகழையும் வென்ற பெரும் கவிஞன் நீ

உனக்காக ஒரு கவிதை
எழுதி முடிக்கும் போது

சொல்லுக சொல் வெல்லுஞ்சொல்
இன்மை அறிந்து அல்லவா
தழுவி கொள்கிறது.

5 comments:

தமிழ் உதயம் said...

வார்த்தைகளில் கூட அடக்கத்தின் பெருமையை
உன்னைவிட யார் அழகாக சொல்லிட முடியும்

இதை விட அழகாக திருக்குறளுக்கு ஒரு வர்ணனை இருக்க முடியுமா.

தேவன் said...

வள்ளுவரை வாழ்த்திய வரிகளை நேசிக்கிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வள்ளுவன் என்னும் இரட்டை வரி கவிஞனுக்கு..
கவிதை எழுதிய புலவனுக்கு என் வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே

Radhakrishnan said...

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா, மிக்க நன்றி தேவன், மிக்க நன்றி நண்பரே, மிக்க நன்றி சிவா அண்ணா.