Wednesday 2 June 2010

எனது கவிதையை தேர்ந்தேடுக்கமாட்டீர்கள்தானே சிவராமன்

எனக்கு ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன் நடத்துகிற  உரையாடல் அமைப்பு மேல ஒரு தனி மதிப்பு உண்டு. இருவரும் தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு அதுவும் முக்கியமாக  சிறுகதை பட்டறை பற்றி அறிந்தபோது சந்தோசமாக இருந்தது.

சிறுகதைப் போட்டியில், கவிதைப் போட்டியில் கலந்து கொண்டேன். வரும் ஜுன் 21ம் தேதி போட்டி முடிவுகள் வெளியாகப் போவதாக புது அறிக்கை அறிந்தேன். போட்டி முடிவுகள் எப்பொழுது வரும் என ஆர்வமுடன் எதிர்பார்ப்பவனில் நானும் ஒருவன். 
 
நான், கோவியார் மற்றும் சுரேஷ் என்பவரை மட்டுமே வலைப்பதிவு எழுத வந்ததன் மூலமாக சந்தித்து இருக்கிறேன்.  எனக்கு யாரையும் தனிப்பட்ட முறையில தெரியாது. அதனால் ஒருத்தொருக்கு ஒருத்தர் வசைபாடி எழுதுவதை படிக்கும்போது எனக்கு வேப்பங்காய் போலத்தான் இருக்கும். யாரையும் தாக்கி எழுதுவது எனக்கு சுத்தமாகப் பிடிப்பது இல்லை. இதில்  ஜாதீயம், பெண்ணீயம், ஆணாதிக்கம், பின் நவீனத்துவம், வெங்காயம் இது எல்லாம் எனக்கு சுத்தமாக  புரிவது  இல்லை. 
 
ஒரு  ஆண் தவறாக நடந்து கொண்டால் அது ஆணாதிக்கமா? ஒரு ஆணோ, பெண்ணோ தப்பு செய்தால் அது தப்பு செய்த ஆணின், பெண்ணின் தனிப்பட்ட பிரச்சினை. அதுக்கு என்ன அடைமொழி வேண்டி இருக்கிறது. எதற்கும் ஒருதரம் ஒரு பொண்ணு பேசற பேச்சா இது அப்படிங்கிற இடுகையை வாசிச்சிட்டு வாங்க. எழுதத் தோணினா எப்படி இருக்கும்னு தெரியனுமா  பெண்களை கண்டாலே எரிச்சல் அப்படிங்கிற இடுகையும் ஒரு பார்வை பாருங்க. தனக்கென போராடாத சமூகம் இருக்கும் வரை அமைப்புகள் ஒன்றும் சாதித்துவிட முடிவதில்லை.தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள முயற்சிக்காத மனிதன் எந்த உதவி இருப்பினும் உயரவே மாட்டான். 
 
எனக்கு சிவராமன் வினவு தளத்தில் கட்டுரை எழுதிக் கொடுத்தார் என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. எவரேனும் எழுதி இருந்தாலும் கூட அந்த கட்டுரையில் தனிப்பட்ட முறையில் பலரை தாக்கி இருப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது. இதை சிவராமன் நான் வரிக்கு வரி அப்படித்தான் எழுதி இருப்பேன் என வாக்குமூலம் தந்திருப்பது எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. அளவுக்கு மீறிய  எரிச்சல் நர்சிம் எழுதியதை வினவு தளத்தில் படித்தபோது இருந்தது.  இருப்பினும் இவர்கள் எல்லாம் பலருக்கும் தெரிந்தவர்கள், பலராலும் வாசிக்கப்படுபவர்கள் என்பதால்தான் பிரச்சினை.  இப்படி தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுபவர்களை கடைநிலை மனிதர்கள், இழிநிலை மனிதர்கள் என மொத்தமாக சொல்லிவிட்டுப் போய்விடுவதில் இருக்கும் சுதந்திரம் தனிதான். அப்படி எழுதுவதால் எனக்குள் இருக்கும் ஆதங்கம் தீரும், ஆனால் இவர்கள் மாறுவார்களா? ஒரு மாதமோ, ஒரு வருடமோ, ஒரு வாரமோ ஏதாவது பிரச்சினை வரும், அப்போதும் பாருங்கள். எவர் எவர் திருந்தினார்கள் என தெரியும்.

உரையாடல் அமைப்பின் தலைவரான சிவராமன் அவர்களே, இதோ இந்த கவிதை போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை. நிச்சயம் பரிசுக்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 
 
அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.

4 comments:

வால்பையன் said...

உங்க கவிதையின் கடைசியில் சமஸ்கிருத எழுத்துக்கள் வருது, பார்பனீய எதிரியான சிவராமன் நிச்சயம் இதை தேர்தெடுக்க மாட்டார் கவலைப்படாதிங்க!

Radhakrishnan said...

நம்பிக்கை தந்தமைக்கு மிக்க நன்றி அருண். பரிசு கொடுத்தால் நீங்களே வைச்சிக்கோங்கனு திருப்பி கொடுத்துர வேண்டியதுதான்.

எனக்கு இதற்காகவே பிறரிடம் பழகுவதற்கு பயமாக இருக்கிறது. இந்த பயத்தில் நல்ல நண்பர்களை கூட தொலைத்துவிடுகிறேன்.

மங்குனி அமைச்சர் said...

கட்சியில்லை, கொடியுமில்லை////


ரொம்ப கஷ்டம்

Radhakrishnan said...

ஒரு கட்சி ஆரம்பிக்க போறேன், அதுக்காக ஒரு தொடர்கதையே எழுதிட்டு இருக்கேன். தொடர்கதை எழுதி முடிச்சதும் கட்சிதான். நீங்கதான் என் அரசவைக்கு அமைச்சர். :) நன்றி அமைச்சர்.