Thursday 10 June 2010

எச்சரிக்கை - எழுதும்போது கவனம் தேவை

டிவிட்டரில் ஒரு கட்டிடத்தை தகர்க்கப் போவதாக, விளையாட்டாக, எழுதிய ஒருவருக்கு ஐந்து மாதம் சிறை தண்டனை அளித்துள்ளார்கள்.

எதை எழுதுவது; எதை எழுதாமல் தவிர்ப்பது என எப்படி தெரிந்து கொள்வது.

இதற்கென விதிமுறைகள் இருக்கிறது, ஆனால் அந்த விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.

சுவராஸ்யமான வலைப்பூ எப்படி இருக்க வேண்டும்

இதோ ஒருவர் சொல்கிறார்,

தினமும் எழுதுவதை தவிர்த்து விட வேண்டுமாம், நாம் எழுதுவதில் எவருக்கும் ஆர்வம் இருப்பதில்லை, பின்னர் எதற்கு தினமும் எழுத வேண்டும் என்கிறார்.

சொந்த பெயரில் எழுதக் கூடாதாம். வலைப்பூவின் பெயர் சொங்கித்தனமாக இருக்க வேண்டுமாம்.

எவரையும் பற்றி எழுதக் கூடாதாம்.

சொந்த விபரங்களை ஒருபோதும் எழுதக் கூடாதாம். பொது இடத்தில் சொந்த விசயங்களை எதற்காக பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

எந்த ஒரு விசயத்திலும் கருத்து சொல்வதை அறவே தவிர்த்து விட வேண்டுமாம். மற்றவர்கள் சொல்வதை இணைப்பு தருவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமாம். நடுநிலையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டுமாம். எவரையும் புண்படுத்தக் கூடாதாம்.

எவர் வருகிறார், என்ன படிக்கிறார், எந்த பக்கம் அதிகம் வாசிக்கப்பட்டது என்கிற கொடுமைகளை எல்லாம் எதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவைகளை எல்லாம் அழித்து விடுங்கள் என்கிறார் மேலும்.

பெரிய பெரிய படம் (பிலிம் காட்டுறதுன்னு சொல்வாங்க) காட்டுவதை நிறுத்த வேண்டுமாம். நான் பெரிய சிந்தனைவாதி என்கிற எண்ணமெல்லாம் மூட்டை கட்ட வேண்டுமாம். திறமை ஒன்றையும் அங்கீகரிக்காதாம்.

உங்களை பின்தொடர்பவர்கள் அவர்களை பின்தொடரவேண்டும் என்பதில்தான் அக்கறை இருக்கும், அதெல்லாம் எதற்கு என்கிறார்.

இவர் எழுதியதை எல்லாம் படித்த பிறகு எனது வலைப்பூவினை மூடுவதை தவிர வேறு வழியில்லை. ;)

7 comments:

வால்பையன் said...

யாருங்க அந்த கிறுக்குபய!
(இதுக்கு எத்தனை மாசம்)

Unknown said...

இது உங்கள் சொந்தக் கருத்தா?

Robin said...

உங்கள் பதிவுகள் நன்றாகத்தான் இருக்கின்றன, மாற்றிக்கொள்ள தேவையில்லை.
முட்டாள்தனமான விமர்சனங்களை புறந்தள்ளுங்கள். போலியாக நடிப்பதைவிட அவரவருக்கு மனதில் தோன்றுவதை துணிச்சலாக நாகரீகமான முறையில் எழுதுவதே சிறந்தது. படித்தவற்றையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வதில் தவறொன்றுமில்லை.

Radhakrishnan said...

அவரைப் பத்தி ஒரு விபரமும் தெரியல. அடிக்கடி ப்ளாக் உரல் பேரை கூட மாத்திகிட்டே இருப்பாராம். என்னை எல்லாரும் தேடனும் அதுதான் என்னோட ப்ளாக் எழுதறதுக்கான வெற்றி அப்படிங்கிராரு. ஹா ஹா விடமாட்டீங்களே, பிடிச்சி போட்டுருவோம். நன்றி அருண்.

இல்லீங்களே செந்தில். ஒரு ப்ளாக் எப்படி எழுத கூடாதுனு தெரிஞ்சிக்க தேடினேன், அதுல ஒரு விசயம் கிடைச்சது, அதை அப்படி அப்படி எழுதி வைச்சேன். நன்றி செந்தில்.

மிகவும் சரி ராபின். நமக்கு தெரிஞ்சதைதானே நாம செய்ய முடியும். கடைசி வரி நகைச்சுவைக்காக நான் எழுதினது. நன்றி ராபின்.

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha,ha..... :-)

தமிழ் உதயம் said...

இவர் எழுதியதை எல்லாம் படித்த பிறகு எனது வலைப்பூவினை மூடுவதை தவிர வேறு வழியில்லை.

அப்படியெல்லாம் மூடிடாதிங்க.

எதை எழுதுவது, எதை எழுதக்கூடாது என்பது ஒரு பாலப்பாடம்.அதை புரிந்து கொண்டால் பிரச்சனை இல்லை.

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா, தமிழ் உதயம் ஐயா.