Saturday 5 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள்

1. செல் அமைப்புகள் 

இப்பொழுது தாவரம் மற்றும் விலங்கு செல்லின் படங்கள் காணலாம். இதில் சில விபரங்கள் குறித்துப் பார்க்கும் பொழுது சில வித்தியாசங்கள் தென்படுகிறது. 

தாவர செல்லில் செல் சுவர் இருக்கிறது ஆனால் விலங்கு செல்லில் இல்லை. தாவர செல்லில் குளோரோபிளாஸ்ட் எனப்படும் செல் காணப்படுகிறது. ஆனால் விலங்கு செல்லில் அது இல்லை. மேலும் தாவர செல்லில் மையப்பகுதி தண்ணீரால் ஆனது ஆனால் இது போன்று தனி அமைப்பு விலங்கு செல்லில் இல்லை. தனித்தனியாக செல் அமைப்பு பற்றி விபரங்கள் தெரிந்து கொள்வோம். 





இந்த செல் அமைப்புகளைப் பற்றி விளக்கிச் சொல்லும் முன்னர் நாம் நுண்ணுயிரான பாக்டீரியாவின் செல் அமைப்பை பார்த்துவிடலாம். பாக்டீரியாக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றிவிட்டதாகவும் இந்த பூமியானது உயிரினங்கள் வாழ வகை செய்து தந்தது என்பது அறிந்துக் கொள்ளப்பட வேண்டிய விசயம். 

கார்பன் வாழ்க்கை சுழற்சி, நைட்ரஜன் வாழ்க்கை சுழற்சி என உதவி வரும் இந்த பாக்டீரியாக்கள் ஒரு செல் அமைப்புடன் இருப்பதும் இத்தனை வருடங்கள் கழித்தும் இனியும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலை காணும்போது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. 

பாக்டீரியாக்கள் இல்லாத உலகம் காண்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவை சாதாரண கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஓரிரு பாக்டீரியாக்கள் தவிர. இந்த பாக்டீரியாக்களில் டிஎன்ஏவானது தனக்கென ஒரு தனி கரு, உறை என கொள்ளாமல் செல் திரவத்தில் மிதந்து இருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்த பாக்டீரியாவின் செல் அமைப்பு தாவரத்தின் செல் அமைப்பு போன்று செல் சுவர் கொண்டு உள்ளது என்பதும் மிகவும் சுவாரஸ்யம. பாக்டீரியாவிற்கு வால் அமைப்பு உள்ளது, இது சிறப்பம்சம். இதோ செல் அமைப்பு. 



இப்பொழுது வைரஸ் அமைப்பினை பார்த்துவிடுவோம். வைரஸ் பற்றி இப்படித்தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அடக்கப்பட்ட உயிர். ஒடுக்கப்பட்ட உயிர். தனியாய் இருந்தால் மயான நிலை. ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை. 

இந்த வைரஸ் ஒரு செல் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வைரஸிடம் நியூக்ளிக் அமிலமும் அதைச் சுற்றி புரத உறை மட்டுமே உள்ளது. 


அனைத்து செல் வடிவமைப்புகளை நாம் பார்த்தாகிவிட்டது, ஆனாலும் சில குறிப்பிட்ட செல்கள் இதே விசயங்கள் பெற்று இருந்தாலும் சில மாறுபாடுகளை கொண்டு இருக்கிறது. உதாரணமாக தாவரத்தின் வேர் செல்கள், விலங்குகளின் இனப்பெருக்க செல்கள் என சொல்லலாம். இவைகளை பற்றி பின்னர் பார்ப்போம். இனி இந்த செல் உறை மட்டும் செல் சுவர் பற்றி சிந்திப்போம். அதற்குப் பின்னர் நியூக்ளிக் அமிலங்கள் பற்றி பார்ப்போம். 

9 comments:

Thekkikattan|தெகா said...

அருமையான வேலை செஞ்சிட்டு இருக்கீங்க, வெ. இரா! தெளிவா இருக்கு - நன்றி!

தருமி said...

இது போன்ற கட்டுரைத் தொகுப்புகளை விக்கிபீடியாவில் ஏற்றலாமா?

தமிழ் உதயம் said...

படித்த காலத்துல கசப்பா, வேண்டா வெறுப்பா இருந்த செல்லை ஆர்வமா படித்தேன்.

நிகழ்காலத்தில்... said...

ஓட்டுப்போட்டு விட்டேன் :))

வாழ்த்துகள்

Radhakrishnan said...

மிக்க நன்றி தெகா.

தாராளமாக விக்கிபீடியாவில் ஏற்றி வைக்கலாம் தருமி ஐயா. மிக்க நன்றி.

மிக்க நன்றி தமிழ் உதயம் ஐயா. தாவரவியல் மிகவும் எளிது என சொல்வார்கள், ஆனால் அந்த பாடத்தில் தான் +2வில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றேன்.

வாழ்த்துகள் சொன்னமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா.

vasu balaji said...

very useful. ty.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா.

அமுதா கிருஷ்ணா said...

10ஆப்பு அறிவியல் திரும்ப படிச்ச மாதிரி,ஆனால், இப்ப நன்கு புரிந்தது....

Radhakrishnan said...

மிக்க நன்றி அமுதா