Wednesday 16 September 2009

வலைப்பதிவர் ஆனேன்! தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெகா, விதூஸ், ஜெஸ்வந்தி)




முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த பதிவுகளை மட்டுமே (சில பதிவுகள் தவிர்த்து) இங்கே வெளியிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் ''தேவதை வந்தாள்'' என அழைத்துச் செல்லக் கூறினார்கள் திருமதி.ஜெஸ்வந்தி அவர்கள். அவசர அவசரமாக பதில் சொல்ல வேண்டி தேவதையிடம் ஒரு வரம் கேட்டு அந்த தேவதையைத் தொலைத்துவிட்டேன். வலைப்பூக்களில் பார்வை இடும்போது அந்த தேவதை மிகவும் சந்தோசமாக வலைய வந்து கொண்டிருப்பதைக் கண்டு ம்னதில் சந்தோசம் கொண்டேன். ஒரு விசயத்தை எத்தனை ஈடுபாடுடன் செய்து கொண்டிருக்கிறார்கள் என.

இதோ தொடர் விளையாட்டுகளில் கலந்து கொள்வது மூலம் வலைப்பதிவராக அறிமுகம் ஆகிறேன்.

1. A – Available/Single? Not Available & Not Single : திருமணம் ஆகிவிட்டது. தனியாளானாக என்னைக் கருதிக்கொண்டால் பெரும் இடர்பாடுகள் வந்து சேரும்.

2. B – Best friend? : எனது மனைவி. எது சரி, எது சரியில்லை என அவர் பார்வையிலிருந்து சொல்வார். என் பார்வைக்கு ஏற்றபடி நான் நடந்து கொள்வேன்.

3. C – Cake or Pie?: கேக் தான், அதிக விழாக்களில் சாப்பிடுவதுண்டு.

4. D – Drink of choice? : எப்போதும் விரும்பி குடிக்க நினைப்பது 7up

5. E – Essential item you use every day? : ஆடைகள்

6. F – Favorite color? : வானத்து, கடலின், கிருஷ்ணரின் நீல நிறம் (கதையே எழுதி இருக்கோம்)

7. G – Gummy Bears Or Worms?: விளையாட, விருந்தாக இரண்டையுமே சேர்த்துக்கொள்வதில்லை.

8. H – Hometown? - மேலத்துலுக்கன்குளம். (எங்கே இருக்கிறது என பலருக்கும் தெரியாமலிருந்தால் இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது).

9. I – Indulgence? - கற்பனையில் மிதப்பது.

10. J – January or February? ஜனவரி, ஜனங்களுக்கு வரிகள் பல! எனினும் முழுமையான மாதம், முதல் மாதம்.

11. K – Kids & their names? ஒன்பது வயது நிரம்பிய ஒரு பையன். நவீன்.

12. L – Life is incomplete without? - அமைதி, திருப்தி.

13. M – Marriage date? 13-07-1998

14. N – Number of siblings? ஆறு - இரண்டு அக்காக்கள், நான்கு அண்ணன்கள்

15. O – Oranges or Apples? ஆப்பிள். உடலுக்கு நல்லது என பழமொழி கொண்டிருப்பதால்.

16. P – Phobias/Fears? மனிதர்களைக் கண்டு வெகுவாக அச்சப்படுவேன். 'நான் ஒரு ஏமாளி' என என்னை மிக எளிதாகச் சொல்வார்கள்.


17. Q – Quote for today? : 'நன்றாகச் சாப்பிடு, நன்றாகத் தூங்கு, எல்லா வேலையும் நன்றாகவே நடக்கும்'

18. R – Reason to smile? : 'புன்னகைக்குக் காரணமெல்லாம் சின்னதாய் தட்டிக்கொடுத்துக் கொள்வது'

19. S – Season? வெயில் மாறி தூறல் பொழியும் காலம்.

20. T – Tag 4 People? திரு. கிரி, திரு. தெகா, திருமதி. விதூஸ், திருமதி. ஜெஸ்வந்தி (சரியாகத்தான் பகிர்ந்து இருக்கிறேன்)

21. U – Unknown fact about me? உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என எதுவுமே செய்யாமலிருப்பது.

22. V – Vegetable you don't like? பிடித்தத் காய்கறிகளைக் கேட்காமல் பிடிக்காத காய்கறி கேட்ட இந்த கேள்விதான். 'எதையும் சாப்பிடும் குப்பைத் தொட்டி என் வயிறு' என பிறர் கேலி செய்வதுண்டு, அசைவம் தவிர.

23. W – Worst habit? எதையும் எளிதாக நம்பிவிடுவது.


24. X – X-rays you've had? 2004ல் animal experiments செய்யும்போது ஏற்பட்ட உபாதையினால் எடுத்துக் கொண்ட நுரையீரல், இருதய எக்ஸ் கதிர் படம்.

25. Y – Your favorite food? :) சாதமும், சாம்பாரும் (இவையிரண்டும் நானே நன்றாக சமைப்பேன்). சிப்ஸும் பர்கரும்.

26. Z – Zodiac sign? Capricorn

அன்புக்குரியவர்கள்: அன்னையும், தந்தையும், மனைவியும், மகனும். உற்றாரும், சுற்றாரும், நட்பும், பகையும்.

ஆசைக்குரியவர்: கடவுள்

இலவசமாய் கிடைப்பது: காண்பதரிது

ஈதலில் சிறந்தது: எதுவும் இரவாமலிருக்கும்படி செய்வது.

உலகத்தில் பயப்படுவது: பொய்யும், உண்மையும்.

ஊமை கண்ட கனவு: எழுத்துக்களில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் உடனிருப்பது: தலைக்கனம்

ஏன் இந்த பதிவு: கோவியாரின் அன்பு அழைப்பு.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயில்லா கல்வியும், செல்வமும்.

ஒரு ரகசியம்: சொல் எனும் சொல்

ஓசையில் பிடித்தது: பறவைகளின் சப்தம்

ஔவை மொழி ஒன்று: அறஞ் செய்ய விரும்பு (விரும்புவதை மட்டுமே செய்து வருகிறேன்)

(அ)ஃறிணையில் பிடித்தது: தாவரம் (இது இல்லாது போயிருந்தால் பிற அஃறிணைகளும், உயர்திணையும் இல்லாது போயிருக்கும்)


நன்றி கோவியாரே.

8 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னை மாட்டி விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.இந்தத் தொடர் விளையாட்டுக்கள் பதிவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன.அதனால் தான் உற்சாகமாக ஈடு படுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.

கிரி said...

ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே சார்..

தமிழ் பதிவுலகில் ஆங்கிலத்தில் கேட்டு ஒரு தொடர்பதிவா!

உங்கள் அழைப்பிற்கு நன்றி சார் ..விரைவில் பதிவிடுகிறேன்

வால்பையன் said...

//மேலத்துலுக்கன்குளம்.//

இதன் பெயரை மாற்ற இருக்கும் சங்கடங்கள் என்ன என்ன?

Thekkikattan|தெகா said...

வெ. இரா,

இதில என் பெயர் எப்படி, எதுக்கு ஞாபகம் வந்துச்சு? பெரும் சிக்கலாச்சே யோசிக்கிறது :)) . ஆனா, இதுக்கு முன்னாடியான இது போன்ற தொடர் அழைப்புகளின் மூலமா நிறையா கொட்டி வைச்சிருக்கேன் என் பதிவுகளில் ஆங்காங்கே. இருந்தாலும் பெரியவங்க நீங்க அழைச்சிட்டீங்க, முயற்சி பண்றேன் :).

உங்களுக்கென்ன எழுத்து வந்து பேனா மையா நிரம்பிக் கொட்டுது, நமக்கு அப்படியா அடிப் பானையை சுரண்டிச் சுரண்டிதான் கொடுக்கணும் ;-)

உங்களுது அருமையா இருக்கு.

நன்றி, வெ.இரா.

Vidhoosh said...

அன்பின் வைராகி:
அருமையான பதில்கள். ஆச்சரியமாகவும் மகிவாகவும் இருக்கிறது, என்னை இத்தனை நினைவில் வைத்துள்ளீர்கள் என்பதை அறிய.

அழைப்புக்கு நன்றி விரைவில் பதிகிறேன்.

-வித்யா

Radhakrishnan said...

மிக்க நன்றி கிரி அவர்களே, பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அட, அந்த ஊர் பெயரை மாற்றுவதில் எந்த சிரமும் இல்லை அருண் அவர்களே. மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்ற ஆகிய சிரமங்களை விட குறைவுதான், என்ன கீழத்துலுக்கங்குளம் எனும் ஊரும் உண்டு. எனக்கு பல வருடங்கள் முன்னர் சந்தேகம் எழுந்தது. ஊருக்கும் பேருக்கும் சம்பந்தமில்லையே என. உங்களுக்கும், உங்கள் புனைப் பெயருக்கும் இருப்பது போல. ஊர் வரலாறு கேட்டேன். பல காலம் முன்னர் முஸ்லீம் மக்கள் தங்கி இருக்கலாம் என சொன்னார்கள். மேலப்பட்டி, கீழப்பட்டி என்றே இரு ஊர்களும் முன்னால் சொல்லப்பட்டு இருக்கிறது. இப்போது முஸ்லீம்கள் அங்கு இல்லை, பெயர் நிலைத்துவிட்டது. ஆனால் அருகில் அருப்புக்கோட்டை எனும் ஊரில் பெருமளவில் முஸ்லீம்கள் உண்டு.

மிக்க நன்றி தெகா அவர்களே. இந்த கருத்துரை பின்னூட்டம் எழுதும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் வரும். நீங்கள் தானே இது போன்று அமைத்திட யோசனை தந்தீர்கள். தன்னடக்கம் தங்களுக்கு அதிகம். பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மிக்க நன்றி வித்யா அவர்களே. மிக்க மகிழ்ச்சி, வைராகி நன்றாகத்தான் இருக்கிறது. பதில்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கோவி.கண்ணன் said...

//ஓசையில் பிடித்தது: பறவைகளின் சப்தம்//

மொத்தத்தில் கலக்கல் !